Saturday, November 18, 2006

மனிதா! இவை உன் கடவுளுக்கா...

நண்பர்களே! தளராத மனமுடையோர் இந்த வீடியோ பதிவை அவசியம் பாருங்கள். இவை தான் மதங்கள் நமக்கு தருபவை எனில்...ம் (அதிர்ச்சி கொள்ளும் மனமுடையோர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது)

சுமார் 20 நிமிடங்கள் தொடரும் சுருக்கமான காட்சிகளுக்கு இங்கே அழுத்தவும்.

முழு வீடியோ பதிவும் சுமார் இரண்டரை மணி நேரம் பார்க்க இங்கே அழுத்தவும்.

வீடியோ பதிவை பார்த்த பின்னர் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்! உலகமெங்கும் மனிதநேயம் மலரட்டும்! மனிதர்களை நேசிக்க பழகுவோம்.

நன்றி வீடியோ: கூகிள் வீடியோ

14 பின்னூட்டங்கள்:

Anonymous said...

முழுசும் பார்க்க முடியலீங்க. ஏற்காட்டுல (உண்மையிலே மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் மண்ணிக்க) சங்கிலியால கட்டி போட வேண்டியவன்லாம் நாட்டுல கட்டுப்பாடு இல்லாம அலையறானுங்க...

Anonymous said...

Mr.Thiru,

Do you really think this made a muslim terrorist?. If you really think 'YES' from your heart then see this video the entire world also get terror from a muslim speach. This blog you just against Hindu radicals. I mean exacrating things agaist only Hindu. If you want to really say against all religion, you should provide all views.

Otherwise you are just a spokesman of one religion.

I know you cannot think anything other than critisize hindu.

Hope you mom/dad/teacher did teach real securalism. I am really pity about them. Poor people who got this child who cannot teach right things....I feel bad about you

I want to see your comments buddy

Anonymous said...

Mr.Thiru,

Do you really think this made a muslim terrorist?. If you really think 'YES' from your heart then see this video the entire world also get terror from a muslim speach. This blog you just against Hindu radicals. I mean exacrating things agaist only Hindu. If you want to really say against all religion, you should provide all views.

Otherwise you are just a spokesman of one religion.

I know you cannot think anything other than critisize hindu.

Hope you mom/dad/teacher did teach real securalism. I am really pity about them. Poor people who got this child who cannot teach right things....I feel bad about you

I want to see your comments buddy

வசந்த் said...

என்னுடன் உடன் வேலை செய்யும் ஒருவர் அயோத்தியா சமவத்தை இவ்வாறு கூறினார்.

* எனக்கு பக்கத்து வீட்டில் ரானுவத்தில் இருப்பவர் சொன்னார், காஷ்மீரில் நிறைய இந்து கோவில்களை இடிக்கிறார்கள் என்று. அதை நாம் யாரவது கேட்கிறோமா..
* ஏதோ இடித்து விட்டார்கள். அதை இவ்வளவு பெரிதாக்குவதா..
* ஐம்பது வருடங்களாக தொழுகையே நடக்காத ஒரு மசூதியை ஏதோ இடித்து விட்டார்கள்.. அதற்காக வருடம் வருடம் பொது மக்கள் மீது குண்டு போடுவதா..

குஜராத் பற்றி அவர் கூறியதை எழுதுவது சிரமம். மெத்த படித்து ஒரு நல்ல வேலையில் உள்ள அவர் இதை சொல்ல கேட்கையில் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

அப்போதுதான் புரிந்தது எப்படி சாதரண கடவுள் நம்மிக்கை உள்ள ஒருவனிடம் இது போன்ற வாதங்கள் விசத்தை தூவுகின்றன என்று.

இது போன்ற வீடியோக்களை உங்களுடைய பதிவுகள் மூலமாக பார்த்து சிலருக்கேனும் மனிதாபிமானம் வந்தால் நல்லது.

நன்றி
வசந்த்

மாசிலா said...

ஓடும்படம் முழுவதையும் பார்த்து முடித்தேன்.
மத வெறி ஓநாய்களின் கூட்டம். இந்த பீடைகள் தென் நாட்டுக்கு வந்து தொலைக்காமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்.
கொலைகார வெறி நாய்கள் நம் வீட்டு கதவை தட்டாமல் இருக்க பாதுகாப்போடு இருக்க வேண்டும். சிறுபான்மையினரை பாதுகாக்கவேண்டியதும் நம்து பொறுப்பு.

Santhosh said...

Thiru,
As long as people are not aware of what they are doing, we cant blame on any god or what ever for thier struggling. Common public should be aware of what they are doing. I agree to the anony to some extent. In India hatred is being created by so called "secularits" such that Hindus harrase muslims or christians is that the real fact in India? http://video.google.com/videoplay?docid=-4420834647958258181&q=kashmiri+refugees see this video on the life of kashmiri pundits. Its not the religion or the Gods that make people kill each other its the people who kill each other. http://video.google.com/videoplay?docid=842219646390515565&q=kashmiri+refugees. The reasons for all these shit is not the Religion, who ever does this is not doing that he is a Hindu or Muslim he will do this even if he doesnt not belong to the religion. Can the so called "secularist" stop blaming on the religion and God on all these things? Think before you Ink.

மாசிலா said...

முழு படத்தையும் பார்த்து முடித்தேன்.
அப்பப்பா! குலை நடுங்குகிறதே. இந்திய குடியரசில் இப்பேற்பட்ட கொலைவெறி பிசாசுகளை இந்த அளவு சுதந்திரம் கொடுத்து வெளியே உலாவவிட்டது எந்த சட்டத்தில் சேரும்? பகிரங்கமாக கொலை வெறிகளை தூண்டும் அயோக்கியர்களை சிறையில் அல்லவா அடைத்திருக்கவேண்டும்? தாங்கள் செய்த பாவத்திற்கு சிறிதளவும் கவலைப்படுவதாக தெரியவில்லையே! பாழாய்ப்போன மதவெறி பிரச்சினைகளால் யாருக்குமே எந்த வித இலாபமும் கிடையாது என்பதை பொது மக்கள் என்றுதான் உணர்வார்களோ? இந்த வெறித்தனத்தை ஒரு சாதனமாக உபயோகித்து சூட்டில் குளிர்காய்வது ஒருசில அரசியல் பேய்களும் மற்றும் மதத்தலைவர்களும். வந்தேறி பிசாசுகள் அமைதியாக வாழ்ந்துவரும் மக்களின் மூளையை குழப்பி, வாழ்க்கையை அழித்து, எதற்கும் உபயோகமில்லா ஜடங்களாக்கி, கொலை வெறியர்களாக மாற்றி, குடும்பங்களையும் ஊரையும் நாட்டையும் சிரழித்து வருகின்றனர்.
இந்த புற்றுநோய் தென்னகத்துக்கு பரவாமல் பாதுகாக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

Udhayakumar said...

///உலகமெங்கும் மனிதநேயம் மலரட்டும்! மனிதர்களை நேசிக்க பழகுவோம்//
இதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் இந்த வீடியோவில் சொல்லிய காரணங்களால்தான் ஒரு முஸ்லிம் தீவிரவாதி ஆகிறான் என்பதை எல்லாம் வாதமாக கூட வைக்க முடியாது...

ஜெயா டிவியில் வந்த "கலைஞரின் கண்ணம்மா"வும் இதையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும்.

thiru said...

//கொட்டாங்கச்சி said...
முழுசும் பார்க்க முடியலீங்க. ஏற்காட்டுல (உண்மையிலே மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் மண்ணிக்க) சங்கிலியால கட்டி போட வேண்டியவன்லாம் நாட்டுல கட்டுப்பாடு இல்லாம அலையறானுங்க...//

நரேந்திரமோடியும், ஆர்.எஸ்.எஸ் கொலைவெறி கும்பலும் செய்த இந்த மனிதத்தனமற்ற செயலை இன்னும் ஆதரிப்பதை காண்கையில் நாம் மனிதர்களா என கேள்வி எழுகிறது?

thiru said...

//Anonymous said...
Mr.Thiru,

Do you really think this made a muslim terrorist?. If you really think 'YES' from your heart then see this video the entire world also get terror from a muslim speach. This blog you just against Hindu radicals. I mean exacrating things agaist only Hindu. If you want to really say against all religion, you should provide all views. //

அன்பின் அனானி,

உங்கள் கருத்தை நிராகரிக்கிறேன். அனானி அடையாளத்துடன் திமிராக மதவெறியில் பேசும் நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

சக மனிதன் தனது மதத்தை சாராதவன் என்பதால் நடத்தப்ப்படுகிற இந்த கொலைவெறியாட்டத்தை ஆதரிக்க்கிறீர்களா? இப்படி ஒரு மதத்தினர் இது எங்கள் நாடு மற்ற மதத்தினரை கொலை செய்வோம் என்பது மனித வாழ்விற்கு தீர்வா? அமைதியா? கொலை வெறியா? எது வேண்டும் என்பது நம் கையில். நீங்கள் உங்கள் விருப்பமான ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீய இந்து தீவிரவாதத்தையோ அல்லது வேறு நபர்கள் அல்கொய்தா தீவிரவாதத்தையோ தேர்ந்தெடுப்பதும் தீர்வு அல்ல. கடவுள் பெயரை சொல்லி ஆர்.எஸ்.எஸ் காலிப்படை நடத்துகிற இரத்தவேட்டையை அனுமதித்தால் இந்தியா கலவர பூமியாக மாறி இரத்தவேட்டை தான் நடக்கும். இது தான் நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் வளர்ச்சியா? மதவெறி எந்த மதங்களில் இருப்பினும் மனித இனத்திற்கு எதிரியே. அது பார்ப்பனீய இந்து தீவிரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், கிறிஸ்தவ சிலுவைப்போர்கள் என எதுவாக இருப்பினும்.

//Otherwise you are just a spokesman of one religion.
I know you cannot think anything other than critisize hindu.//

நீங்கள் மட்டுமல்ல வேறு யார் என் மீது அடையாளங்களை குத்த முயற்சித்தாலும் அது எந்த விளைவையும் தரப்போவதில்லை. நான் மனிதன் என்ற ஒரு அடையாளத்தை தவிர எல்லா அடையாளங்களையும் மறுக்கிறேன். பார்ப்பனீய இந்துத்துவ வெறியை எதிர்ப்பது என்பது நீங்கள் சொல்வது போல criticize பண்ணுவது அல்ல. இந்த வீடியோவை நிதானமாக பார்த்து உங்கள் குழந்தை, மனைவி, சகோதரி, குடும்ப உறுப்பினர்களை இந்த துயரத்தில் இருப்பதாக நினைத்துப் பாருங்கள்! ஊட்டப்பட்ட பார்ப்பனீய, இந்துத்துவ அரசியல் வெறித்தனத்திலிருந்து மனம் அமைதியடையட்டும்!

//Hope you mom/dad/teacher did teach real securalism. I am really pity about them. Poor people who got this child who cannot teach right things....I feel bad about you//

ஆஹா! பிறரை கொலை செய்வதா right thing? பெண்களை கொலைவெறியில் துரத்தி துரத்தி கூட்டமாக பாலியல் வன்புணர்ச்சி செய்வதா உங்களது right thing? இதை ஆதரிப்பது right thing? எனக்கு இந்த right wing மனது இல்லால் இருக்க உதவிய அந்த நல்ல மனிதர்கள் பலருக்கு என் நன்றி!

//I want to see your comments buddy//

நிதானமாக சிந்திக்கும் திறனும், மனிதத்தன்மையும் உங்களுக்கு கிடைக்கட்டும் நண்பரே!

thiru said...

//வசந்த் said...
குஜராத் பற்றி அவர் கூறியதை எழுதுவது சிரமம். மெத்த படித்து ஒரு நல்ல வேலையில் உள்ள அவர் இதை சொல்ல கேட்கையில் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. //

வருகைக்கு நன்றி வசந்த்.
ஊட்டப்பட்ட மதவேரியின் விளைவு அது. இதில் எவ்வளவ்வு படித்து என்ன வேலை பார்த்தாலும் 'மேல்மாடி' சிந்திக்க மறுப்பது உண்மை. இதற்கு வலைப்பதிவாளர்களிடையும் (ஆங்கிலம், இந்தி, தமிழ் என பல மொழிகளில்) உதாரணங்களை காணலாம்.

//அப்போதுதான் புரிந்தது எப்படி சாதரண கடவுள் நம்மிக்கை உள்ள ஒருவனிடம் இது போன்ற வாதங்கள் விசத்தை தூவுகின்றன என்று.//
ஆம் உண்மை. இதற்கென பல மதவெறி அமைப்புகள் இயங்குகின்றன. வெளிநாடுகளிலும் பல பெயர்களில் இயங்குகின்றன.

//இது போன்ற வீடியோக்களை உங்களுடைய பதிவுகள் மூலமாக பார்த்து சிலருக்கேனும் மனிதாபிமானம் வந்தால் நல்லது.நன்றி. வசந்த்//

இதற்கு வெளிப்படையான மனது வேண்டும் வசந்த். அது அமைவது எளிதான விடயமல்ல. நமது மூளையில் ஏற்றப்பட்ட நம்பிக்கைகளுக்கும் உண்மைகளுக்கும் இடையிலான போராட்டம் இது.

thiru said...

//மாசிலா said...
ஓடும்படம் முழுவதையும் பார்த்து முடித்தேன்.
மத வெறி ஓநாய்களின் கூட்டம். இந்த பீடைகள் தென் நாட்டுக்கு வந்து தொலைக்காமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்.
கொலைகார வெறி நாய்கள் நம் வீட்டு கதவை தட்டாமல் இருக்க பாதுகாப்போடு இருக்க வேண்டும். சிறுபான்மையினரை பாதுகாக்கவேண்டியதும் நம்து பொறுப்பு.//

கருத்துக்களுக்கு நன்றி மாசிலா

thiru said...

//சந்தோஷ் said...
Thiru,
As long as people are not aware of what they are doing, we cant blame on any god or what ever for thier struggling. Common public should be aware of what they are doing.//

முதல் வருகைக்கும் சுட்டிகளுக்கும் நன்றி சந்தோஷ்.

சாதாரண மக்களை கடவுள் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் மதவெறி கும்பல் தவறாக நடத்தும் போது விழிப்புணர்வௌ என்பது கடினமானது. நம் மக்கள் படிப்பிற்கும் விழிப்புணர்விற்கும் சம்பந்தமில்லை. பொறியியல், மருத்துவம் என துறைகளில் படித்திருப்பினும் சமூகத்தின் நிலையை பற்றிய உண்மை அறிவு இல்லாமல் போனால்... இதில் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் படிப்பறிவிற்கான வாய்ப்பு கூட கிடைக்காதவர்கள். இங்கே தான் இந்திய சமூகத்தில் பெரிய ஓட்டை. இந்த ஓட்டையை ஆர்.எஸ்.எஸ் முதல் அனைத்து மதவெறி அமைப்புகளும் பயன்படுத்தி கலவரங்களை உருவாக்குகிறது.

//I agree to the anony to some extent. In India hatred is being created by so called "secularits" such that Hindus harrase muslims or christians is that the real fact in India?//

நண்பரே, ஆர்வம் இருப்பின் நீங்களே உண்மை எது என அறிய முயலுங்கள். உண்மையை தேட நம் சொந்த மதங்களை கடந்த பார்வை அவசியம். தவறு செய்தது நம் மதத்தை/கொள்கையை சார்ந்தவராக இருப்பின் அதை ஒத்துக்கொள்ளும் மனமும், மனபலமும் அவசியம். அது இன்று நம்மில் பலருக்கு இருக்கிறதா என்பது கேள்வியே.

//The reasons for all these shit is not the Religion, who ever does this is not doing that he is a Hindu or Muslim he will do this even if he doesnt not belong to the religion. Can the so called "secularist" stop blaming on the religion and God on all these things? Think before you Ink.//

மதத்தை பயன்படுத்தி இப்படிப்பட்ட கலவரங்களை, வெறித்தனத்தை உருவாக்கியவர்களை மத நிறுவனங்களும், மத தலைவர்களும் கண்டித்திருக்கிறார்களா? மதவெறியர்கள் செய்த தவறிற்கும், மதத்தலைவர்கள் செய்ய தவறியவற்றிற்கும் secularist களா பழி சுமக்க வேண்டும்?

thiru said...

//Udhayakumar said...
///உலகமெங்கும் மனிதநேயம் மலரட்டும்! மனிதர்களை நேசிக்க பழகுவோம்//
இதை நான் ஆதரிக்கிறேன்.//

நன்றி :)

//ஆனால் இந்த வீடியோவில் சொல்லிய காரணங்களால்தான் ஒரு முஸ்லிம் தீவிரவாதி ஆகிறான் என்பதை எல்லாம் வாதமாக கூட வைக்க முடியாது...//

இது உங்கள் புரிதல். சமூகம் சரிவர நீதி வழங்க தவறினால் அந்த வீடியோவில் காணுகிற சிறுவன் ஏன் தீவிரவாதியாக மாட்டான்? அப்படி நடந்து விடக்கூடாது என என் மனது பதறுகிறது. இது சமூகவியல், மனது என அனைத்தும் சம்பந்தமுடையது. ம்ம்

//ஜெயா டிவியில் வந்த "கலைஞரின் கண்ணம்மா"வும் இதையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும்.//

நண்பரே, இதை விட காவிப்படையின் மதவெறிக்கு சாட்சியான் இன்னும் சில ஒளிப்படங்கள் இருக்கின்றன. அவற்றை வெளியிட்டால் பலரது மனது துயரத்தால் தாங்காது என்பதால் வெளியிடவில்லை.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com