Sunday, November 12, 2006

இராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...

தஞ்சைப் பெரியகோவில் பற்றிய ஒரு பார்வை இந்த ஒளிப்படத்தில். இதில் சொல்லப்படுகிற சம்பவங்களும், சரித்திரமும், பார்வையும் உண்மையா? உங்கள் முடிவிற்கே விடுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பதியுங்கள்!

தஞ்சைப் பெரியகோவில்

10 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

திரு.

இது ஏற்கனவே எங்கோ பார்த்தேன். முழுவதுமாக..

முஸ்லிம் படை எடுப்பு அதனால் இந்து கோவில்களின் தாக்கம் மற்றும் ஏன் மேற்கத்தியவர்கள் தாஜ்மாகலைத் தவிர இது போன்ற பொக்கிசங்களை கண்டு கொள்ளவில்லை .. என்பது போன்ற கேள்விகள் இருக்கும்..

என் மனதில் இருப்பதெல்லாம், நம் மக்களை அடிமையாக்கி ஒரு கோவில் கட்ட இவ்வளவு சிரமம் எடுத்து கொண்ட மன்னன், ஏன் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவவில்லை. எந்த சக்திகள் தடுத்தன.

ஒரு ஜடப் பொருளுக்கு இவ்வளவு பெரிய கோவில் கட்டி அனைவரையும் முட்டாளக்கியுள்ளார்கள்.

என்னமோ போங்க.. இவர்களையுடைய கட்டிட கலை திறமையை வேண்டுமானல் பாராட்டலாம்.

வரலாறு தெரிந்தவர்கள் தான் இந்த வீடியோ சம்பதமாக பேச முடியும் என நான் கருதுகிறேன்.

நன்றி.

jeevagv said...

நானும் முன்பே பார்த்திருக்கிறேன்...
ஆனால், மேற்கத்திய உலகில் இந்தக்கோவில் பிரபலமாகாதற்கான காரணம் அதுவல்ல.

மேற்கத்திய உலகமும் அவர்களது நம்பிக்கைகளும் வேறொரு துருவமானதால் அவர்களது புரிந்து கொள்ளாமல் போனதற்கு காரணம்.

Anonymous said...

இதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஆனல் எத்தனை மக்களை பலிகொண்டு இது கட்டி முடிக்கப்படுள்ளது என்பதை நினைக்கும்போது ராஜராஜன் என்ற ஆசைப்பட்டு அடிமையாகிப்போன அந்த மன்னன்மீது மரியாதை வரவில்லை. பதிலாக அவனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்ட வேண்டும் என்று செங்கல்லை வைத்து அணை கட்டினானே கரிகாலன் அந்த கல் இந்த கோயிலை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்தது.

இவனைப் போன்ற மன்னர்களால்தான் தமிழகம் அடிமைப்பட்டு போனது.

மாசிலா said...

பார்த்தேன். நன்று.
நான் இதுவரை பார்க்காதது.
உங்கள் உழைப்பிற்கு நன்றி.

பெருமைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
மத கூத்துகளைத் தவிர.

இருந்தாலும், இந்து மதம் தமிழ் மண்ணில் காலூண்ற காரணமாயிருந்த மன்னரை எற்றுக்கொள்ள மனம் சங்கடப்படுகிறது.

Anonymous said...

திரு,

இராஜராஜசோழன் பற்றியும் பெரியகோயில் பற்றியும் வலைப்பதிவுலகில் விவாதிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

இந்த இரண்டைப் பற்றியும் தவறான புரிதல்களே பெரும்பான்மையன. கலைஞர் உட்பட. தஞ்சைப் பெரிய கோயில் கட்டியது மட்டுமே இராஜராஜசோழனின் சாதனையல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாக வசதிக்காக நில அளவையை மேற்கொண்டது இந்தியாவிலேயே முதல் முறை. பெரியகோயில் கட்டுவதற்காக மக்களைத் துன்புறுத்தியிருப்பார், அதிக வரி வசூலித்திருப்பார் என்பதெல்லாம் அனுமானங்கள்தான். இவரது ஆளுமையைப் பற்றி, பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் நான் அனுப்பிய ஒரு மடலை இங்கு இடுகிறேன். இந்த மடல் ஒரு விவாதத்தின் தொடர்ச்சி என்பதால், தேவைப்பட்டால் மீண்டும் விளக்கத் தயாராக இருக்கிறேன்.

இந்த வீடியோவைப் பற்றி எங்கள் மின்னிதழில் எழுதியிருக்கிறோம்.

தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் முதன்முதலாகத் தனது போர்வெற்றிகளை வரிசைப்படுத்தி மெய்க்கீர்த்தியாக்கியவர் இராஜராஜர்தான். இவரது மெய்கீர்த்தி கீழே.

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டெழில் சிங்களவர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன் எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ இராஜகேசரி வர்மரான ஸ்ரீஇராஜராஜ தேவர்

இவரைப்பற்றி முனைவர்.இரா.கலைக்கோவன் அவர்கள் வடித்துள்ள ஒரு கட்டுரை இந்தச் சுட்டியில்.

பெரியகோயிலைப் பற்றி ஒரு சிறப்பிதழே வெளியிட்டுள்ளோம். கட்டடக்கலை, கல்வெட்டு, சிற்பக்கலை, ஓவியங்கள் முதலியன அலசப்பட்டுள்ளன.

இனி எனது மடல்.

1. Manidha neyam

We are talking about looting and it is justified as way of relief for soldiers. Narasimma pallavan's army looted vatapi. Adhitha karikalan's army looted madurai. Rajendran's and his sons' armies looted north india. But, in case of Rajaraja, there was only one looting. Udhakai. The title given by later period poets 'Udhakai thee uyththa uravon' has no place in his meikeerthi. The udhakai invasion was not for capturing. It is just for punishing the king who got deviated from norms. You can compare Rajendra and his sons' meikeerthi with RRC's. While other meikeerthi talks about their lootings and 'nose-cuts', 'Thirumagal pola' poetically lists the victories chronologically. This means he never encouraged lootings. Even the 'paramparai' enemies pandyas and sinhalese are mentioned without any insulting intention. 'Murattezhil singalavar' and 'Chezhiyarai dhesu kol'. How can core enemies be addressed more honorific than this? Not only the 'hollywood speeches' recharge the soldiers. Dedicating victory to soldiers would also cheer them up!

2. King lived for people

The vallam inscriptions talk about a village administrative officer who met the emperor. Most of you may know this already. But i am explaining here just for compiling RRC's merits. The VAO met RRC and asked for 'nivandham' to light lamp in his village for the king to live long and give 'nallaatchi'. RRC replied that people are the backbone of government and asked him to light the lamp in the name of village people instead of the king and donated some money and goats. After returning to his village, the VAO started lighting 2 lamps in the name of king as well as village people. Out of his busy schedule of continuous wars and massive temple constructions, he thought about people and their welfare.

3. Distributed power centers

This is the wonder of democracy in monocracy. India is such a large country, which cannot be ruled by a single person. I think this is what Rajendra and his sons failed to understand which lead to decline of chola dynasty. RRC was well aware of this. So, he surveyed the entire kingdom, splitted into many divisions and appointed administrative officers on rotation basis. Defined set of norms for each department. Scandals and bribes were found immediately by excellent spy network. Defaulters were punished without any exception. Even when an officer takes leave or retires or dies, the method to choose the person to take in-charge was also well drafted. Well planned administration. 'Nivandhams' were closely watched and revoked when misused. Administration of akbar can come only next to RRC.

4. Peridhinum peridhu kEl

He may be ambitious and egoist. But nobody is better example for Bharathi's 'Peridhinum peridhu kel' and Abdul kalam's 'Kanavu kaanungal' than RRC. He dreamt big. We got the wonderful temple. When we were sitting next to the kalasam, we became speechless and breatheless. Not because of height. Even the 1000 feet Tokyo tower didn’t give this much impact in my mind. That time everyone thought the same, but couldn’t share with others. Just understood by seeing others' faces. We feel great just by climbing to the top. But he dreamt, planned and executed. He is the man who achieved this. How would have he felt? Nobody can imagine. Though i am not 100% sure, I think that was the tallest building in the world at that time, when the citizens of present day developed nation were barbarians. Slaves might have been used for bringing stones from various places. But without giving due respect and attention to sculptures and architects, such wonder wouldn't have been possible at all. The saying 'Kasaiyadi koduthu kavidhai vaanga mudiyaathu' perfectly fits for all forms of art. The modern management principle 'Unless the leader is dedicated and gives importance to his duty, the productivity of people working under him cannot be high' holds good for the case of building such architectural wonder also.

5. Right to get information

Right from his meikeerthi to his last reginal year inscription in periya koyil, it is evident that he wanted to give transparent administration which was less in the period of other kings. Inscriptions and copper plates play major role in drafting history. For whom these inscriptions are useful? Only for historians and people like us who are interested in history? This was the way to announce happenings in kingdom to common people and inscribed where people assemble frequently. Though major portion of inscriptions talk about grants, the historical facts are hidden in that. Let me give an example. Today, when we register a sale of house, we mention the location of that house by providing the details of each neighbour. If we collect all the sale deeds of that village from registrar office, we can find out who was living in which house and when. That is how history is filtered from various inscriptions. One of the rare social inscriptions 'Thalichery kalvettu' exclusively talks about the details of allotment of houses to ladies who involved in activities of big temple. As far as i know, there is no such detailed inscription by any other king.

6. Selflessness

He never owned any pride by himself alone. Let it be the victory in wars or grants to temples. Grants of everyone for temples he built is documented in excellent way. Not only big temple. Thiruvalanjuzhi is also another feather in his crown. Even the grant of golden flowers by maid of queen. Imagine if a maid of queen can donate some golden flowers, how would have been the economy of the kingdom. Sometimes back, there was a discussion about increasing tax for building temples. That wouldn't have happened in case of big temple. If the temple was built from people's money, then why should the king and common people donate separately and they are documented?

The last point is, about the available information on other kings of india. I agree that we should not underrate a king just because of not having any record. But only if we have proper evidences, we can say it as a fact. Otherwise, it would be mere fiction. Those assumptions cannot come under history. As of now, we have enough evidences to prove RRC as 'The Greatest' king of India. The validity period of this conclusion expires when another king is proved as 'The Greatest' with proper evidences.

Thanks
Kamal

www.varalaaru.com

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

திரு கமல் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.. எல்லா கட்டிட வல்லமைகளுக்கு பின்னால் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.. நம்பிக்கைகள் என்பது தனி மனித மனம் சம்பந்தபட்டது. இன்றைய விமர்ச்சனங்கள் ஒரு லைம்லைட் தருமே தவிர.. எந்த பயனையும் தராது..

ஓகை said...

திரு கமல் அவர்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். இந்தக் கோவிலின் கட்டுமானம் தொடர்பாக நான் எழுதிய சிறுகதையை இங்கே காணலாம்.

தகடூர் கோபி(Gopi) said...

ராஜராஜன் காலத்தில் தமிழி, வட்டெழுத்துக்கள் என இரு முறைகளில் தமிழ் எழுதப்பட்டு வந்தது என்றும், தம் ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுதும் தமிழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ராஜராஜன் மாற்றினார் எனவும் ஒரு வரலாற்று ஆய்வரிக்கையில் படித்துள்ளேன்.

தமிழியே இன்றைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடி. வட்டெழுத்துக்களால் தமிழ் எழுதப்படுமானால் தெலுங்கு/கன்னடம் போல ஜிலேபி எழுத்துக்களாகத்தான் இருந்திருக்கும்.

சீனு said...

இது The Lost Temples of India என்னும் லாக்குமென்டரி படம். ஆனால், பெரும்பாலும் தவறான செய்தியே இருக்கிறது இதில். உதா, மதுரை மீனாட்சி கோயில் ராச ராசனால் கட்டப்பட்டது என்று இதில் சொல்லப்படுகிறது.

//ஒரு ஜடப் பொருளுக்கு இவ்வளவு பெரிய கோவில் கட்டி அனைவரையும் முட்டாளக்கியுள்ளார்கள்.//
எனக்கு இதில் உடன்பாடு இல்லை. நானும் நாத்திகன் தான். அதற்காக கோயில் கட்டுவதெல்லாம் முட்டாள்தனம் இல்லை. அந்த காலத்தில் தேவை என்னவோ அப்படி தான் நடக்கும்.

//ஆனல் எத்தனை மக்களை பலிகொண்டு இது கட்டி முடிக்கப்படுள்ளது என்பதை நினைக்கும்போது ராஜராஜன் என்ற ஆசைப்பட்டு அடிமையாகிப்போன அந்த மன்னன்மீது மரியாதை வரவில்லை.//
உங்களின் இந்தக் கருத்தை கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. ராச ராசன் என்ன சர்வாதிகாரியா? எகிப்து பிரமீடுகள் கட்ட அடிமைகள் தேவைப்பட்டார்கள். அது சமாதி. ஆனால் இது கோவில். அதனால், இதை மக்களை பலி கொண்டெல்லாம் கட்டியிருக்கமாட்டார்கள். வரலாறு தெரிந்து கொண்டு உங்கள் சொல்லம்புகளை வீசுங்கள்.

//இவனைப் போன்ற மன்னர்களால்தான் தமிழகம் அடிமைப்பட்டு போனது.//
உளரல்...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி கமல்.

வெற்றி said...

திரு,
இவ் ஓளிப்படத்தை சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் கனடாவில் TLC [The Learning Channel] ஒளிபரப்பினார்கள். உடனேயே வீடியோவிலும் பதிவு செய்தேன். மிக அரிய தகவல்கள். எல்லோரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இங்கே தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com