Wednesday, November 22, 2006

கதையும், கதைத்தலும்!

பல இலட்சம் குரல்களில் சில மட்டும் இங்கே...

"யாழ்ப்பாணத்தில எங்கட சனம் பட்டினியால செத்துக் கொண்டிருக்காம்".

இன்னொரு குரல், "எங்கட நெலமை எப்போ என்ன ஆகுமோ தெரியல, ஆமிக்காரங்க கெடுபிடி கூடிட்டே போவுது. எல்லா பாண்டங்களும் வாங்க முடியாத வெலயில இருக்கு "

"நான் வேல செஞ்சிட்டு இருந்த விவசாய கல்லூரியில ஆமிக்காரங்க துப்பாக்கி சூடு நடத்தி படிச்சிட்டு இருந்த பொடியன்கள (மாணவர்கள்) கொன்னுருக்கு."

"யுத்தம் வந்ததால நான் 12 வகுப்பு படிச்சதோட சரி. பெறவு உயிர காப்பாத்தினா போதும்னு ஆச்சி. தஞ்சம் தேடி வந்த நாட்டுல கல்யாணம் ஆகிட்டுது. படிக்காம போயிட்டோமேன்னு இப்போ கவலையா கெடக்கு. எங்கட வாழ்க்க இப்பிடி ஆவ நாங்க என்ன செஞ்சோம்?"

"என்ட அப்பா, அம்மா கொழும்புல. தங்கச்சி ஜெர்மனில இருக்கா. ஒரு மாமா சுவிஸ்ல. இன்னொரு மாமா ஜெர்மனில (அவர நான் பாத்து 15 வருசம் இருக்கும்). ஒரு தங்கை கானடால, இன்னொரு மாமா ஆஸ்திரேலியால. நாங்க சுவீடன்ல. என்றைக்கு எங்கட குடும்பம் சேரும்? நிலா வெளிச்சத்துல மாமரத்தடியில இருந்து நிம்மதியா கூழ் சாப்பிட்ட சின்ன பிள்ளையள் அனுபவம் எனி வருமா?"

"என்ட கூட படிச்சவ குடும்பத்த ஆமிக்காரங்களும், இந்திய அமைதிப் படையும் சேந்து செதைச்சு போட்டாங்க. இப்போ அவ இயக்கத்துல இருக்கா."

"சுனாமில அப்பா, தம்பிய கடல் கொண்டு போச்சு. நானும் அம்மாவும் கூட செத்து போயிருக்கலாம். இங்க எங்கட சனத்த நிம்மதியா வாழவிடாம குண்டு போட்டு கொல்லுறதும், பஞ்சத்தில சாக விடுறதும் தான் நடக்குது. நாங்க இனி உயிரோட இருந்து எதுக்கு?

°°°°°°°°°°
வழக்கம் போலவே கதைக்கும் கதைத்தலுக்கும், நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசம் அறியாமலே கண்களை மூடியபடியே தமிழகத் தமிழன்!

டிஸ்கி: இது சிந்திக்க வைக்கவே!

11 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

விழிபுணர்வு ஊட்டும் நல்ல சேவை!
வரவேற்கிறேன்.
நான் ஏற்கனவே என் வலைப்பூவில் ஒரிரு ஆதரவு வார்த்தைகளை கொட்டியிருக்கிறேன்.
சும்மா இருப்பதை விட என்னால் முடிந்த இதையாவது......
அனைத்து தமிழர்களும் விழித்துக்கொள்வார் என நம்புவோம்.
நன்றி.
வணக்கம்.

அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி திரு. நெஞ்சை பிழிகிறது. தமிழன் வாழ தமிழன் குரல் கொடுக்கவில்லையெனில் யார் குரல் கொடுப்பார்கள்? கட்சி சித்தாந்தம் சாதி அனைத்தும் கடந்து தமிழன் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய உணர வேண்டிய பதிவு,

பொன்ஸ்~~Poorna said...

//வழக்கம் போலவே கதைக்கும் கதைத்தலுக்கும், நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசம் அறியாமலே //
உண்மை தான் திரு.. :((((((((

gulf-tamilan said...

உண்மை !!!

Anonymous said...

பாலபாரதி நிகழ்ச்சி நிரலில் அருமையான இடைச்செருகலாக திடீரென அகிலனை பேச அழைத்தார். தமிழ் ஈழத்தில் இணையம் என்ற தலைப்பில் (இந்த தலைப்பு நானாக வைத்தது, அகிலன் பொதுவாக தான் பேசினார்) அருமையான தமிழில் அகிலன் உரை நிகழ்த்தினார். சுமார் 4 லட்சம் பொதுமக்கள் தற்போது நிறைந்திருக்கும் தமிழீழ நாட்டில் சுமார் 50,000 பேர் வரை மட்டுமே கணிணியை பாவித்திருப்பார்கள். அவர்களில் சுமார் 10,000 பேர் வரை மட்டுமே இணையத்தை பாவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்களில் சுமார் 5000 பேருக்குள்ளாக தான் தொடர்ந்து இணையத்தை பாவித்திருப்பார்கள். அனேகமாக தமிழ் ஈழநாட்டில் இருந்து வலைப்பூ எழுதியவர்கள் அகிலனும், நிலவனும் மட்டுமே கூட இருக்கலாம் என்றார். அகிலன் ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக கிளிநொச்சியில் பணிபுரிந்து வந்தவர்.


இந்த வலைப்பதிவர் சந்திப்பில் எனக்கு மிகப்பெரும் ஆச்சரியம் மற்றும் ஆர்வத்தை தந்தது அகிலன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.* அகிலனின் பேச்சுக்கு பிறகு எஸ்.கே. "தமிழீழ நாட்டில் கணிப்பொறி பயன்பாடு குறைவாக இருப்பது இயலாமையா? பயமா?" என்று ஒரு கேள்வி கேட்டார். இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்ச்சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை அந்த அளவுதான் என்று நினைத்துக் கொண்டேன். மரபூர் ஜெயசந்திரசேகரனோ ஒரு படி மேலே போய் அகிலனிடம் "நீங்கள் சொன்ன கதையில்" என்று சொல்லப்போக பொங்கியெழுந்த வரவனையான் செந்தில், "அகிலன் சொல்வது கதையல்ல, அவரது வாழ்க்கை" என்று தெளிவுபடுத்தினார். உடனே டோண்டு சார் "கதை என்றால் தமிழீழ தமிழில் பேசுவது என்று பொருள்" என்று மரபூரின் "கதைக்கு" வியாக்கியானம் சொன்னார். இந்தக் கூத்துகளால் எந்த வருத்தமோ, சங்கடமோ அடையாமல் அகிலன் புன்னகையுடனேயே பதிலளித்தார்.

---------------------------------

லக்கிலுக்கின் பதிவிலுள்ள இதுதான் விஷயம் பின்னூட்டமிட்ட நண்பர்களே. திரு அவர்களே, இதைச் சுட்டி கொடுத்துக் குறிப்பிட உங்களுக்கு என்ன தயக்கம்? வாய் தவறாக ஒரு சொல்லைக் குறிப்பிடுவது தவறல்ல, ஆனால் வக்கணையாக அதற்குச் சப்பைக்கட்டு கட்டுவது தவறுதான் என்பது இவர்களுக்கு யாராவது விளக்கினால் புண்ணியம்.

Anonymous said...

&&ஆனால் வக்கணையாக அதற்குச் சப்பைக்கட்டு கட்டுவது தவறுதான் என்பது இவர்களுக்கு யாராவது விளக்கினால் புண்ணியம்.&&

யார்தான் புரிய வைப்பார்களோ தெரியவில்லை. "நீங்கள் சொன்ன கதையில்" என்பதில், 'கதை' என்ற இடத்தில் 'பேசுவது' என்பது பொருந்திப் வராது என்பதை அதைச் சொல்லு முன்னர் டோண்டு சார் யோசித்திருந்தால் உணர்ந்திருப்பார்.

என்ன செய்வது சப்பைக் கட்டு கட்டுவதில் அத்தனை அவசரம். :)

thiru said...

//மாசிலா said...
விழிபுணர்வு ஊட்டும் நல்ல சேவை!
வரவேற்கிறேன்.
நான் ஏற்கனவே என் வலைப்பூவில் ஒரிரு ஆதரவு வார்த்தைகளை கொட்டியிருக்கிறேன்.
சும்மா இருப்பதை விட என்னால் முடிந்த இதையாவது......
அனைத்து தமிழர்களும் விழித்துக்கொள்வார் என நம்புவோம்.
நன்றி.வணக்கம். //

நன்றி மாசிலா! பெரும்பாலான வலைப்பதிவாளர்களும், தமிழ் மக்களும் இந்தி(ய) ஊடகங்களின் ஆதிக்க செய்திகளில் நம்பிவிடுகிறார்கள். ஈழ மக்களின் போராட்ட வரலாறோ, அவலமோ இந்திய அரசிஅய்ல் கட்சிகளால் துவங்கவும் இல்லை. இந்திய அரசியல் கட்சிகளின் ஆதரவு என்பது கூட மாயை தான்.

ஈழம் சென்றிருக்கிறேன் என்ற முறையில் நான் கேட்ட உண்மை குரல்களை பதிந்தேன் அவ்வளவே!

thiru said...

//நீலகண்டன் said...
நன்றி திரு. நெஞ்சை பிழிகிறது. தமிழன் வாழ தமிழன் குரல் கொடுக்கவில்லையெனில் யார் குரல் கொடுப்பார்கள்? கட்சி சித்தாந்தம் சாதி அனைத்தும் கடந்து தமிழன் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய உணர வேண்டிய பதிவு,//

உங்கள் உணர்வுகளுக்கு நன்றி நீலகண்டன்!

thiru said...

//பொன்ஸ் said...
//வழக்கம் போலவே கதைக்கும் கதைத்தலுக்கும், நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசம் அறியாமலே //
உண்மை தான் திரு.. :(((((((( //

நாம் உணரவே கூடாது என்பதில் சிலர் அவனமாக இருக்கிறார்கள். என்ன செய்வது?

thiru said...

//Anonymous said...
லக்கிலுக்கின் பதிவிலுள்ள இதுதான் விஷயம் பின்னூட்டமிட்ட நண்பர்களே. திரு அவர்களே, இதைச் சுட்டி கொடுத்துக் குறிப்பிட உங்களுக்கு என்ன தயக்கம்? வாய் தவறாக ஒரு சொல்லைக் குறிப்பிடுவது தவறல்ல, ஆனால் வக்கணையாக அதற்குச் சப்பைக்கட்டு கட்டுவது தவறுதான் என்பது இவர்களுக்கு யாராவது விளக்கினால் புண்ணியம்.//

விளக்கத்திற்கு நன்றி அனானி!
சுட்டி கொடுக்காமல் எழுத எந்தவித காரணமும் இல்லை. வலைப்பதிவாளர் சந்திப்பில் மட்டுமல்ல எனது பதிவின் கவனம், இந்த குரல்களில் வேதனையிலே! சொல்ல வேண்டியதை வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன். உங்களுக்கு மாறுபட்ட எண்ணமிருப்பின் உங்கள் வலைப்பதிவில் அல்லது ஒன்று துவங்இ எழுதுங்கள்! உங்கள் பார்வையிலான கருத்துக்களையும் அது வழி தெரிய உதவும் நண்பரே.

thiru said...

//Anonymous said...
&&ஆனால் வக்கணையாக அதற்குச் சப்பைக்கட்டு கட்டுவது தவறுதான் என்பது இவர்களுக்கு யாராவது விளக்கினால் புண்ணியம்.&&

யார்தான் புரிய வைப்பார்களோ தெரியவில்லை. "நீங்கள் சொன்ன கதையில்" என்பதில், 'கதை' என்ற இடத்தில் 'பேசுவது' என்பது பொருந்திப் வராது என்பதை அதைச் சொல்லு முன்னர் டோண்டு சார் யோசித்திருந்தால் உணர்ந்திருப்பார்.

என்ன செய்வது சப்பைக் கட்டு கட்டுவதில் அத்தனை அவசரம். :) //

இந்த சப்பைகட்டுதல் எல்லா விடயங்களிலும் நடக்கிறது நண்பரே. குறைகளை/தவறுகளை ஒத்துக்கொள்ள திடமான மனது வேண்டும். மற்ற எல்லாவற்றையும் விட அதுவே மனிதம் காக்கும் ஆன்மீகம்!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com