Monday, January 28, 2008

உலகமயமாக்கலின் அருட்கொடை உடல் உறுப்பு கொள்ளையர்கள்!

ழைக்கும் மக்களது சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை களவாடி, மோசடி வியாபாரம் மூலம் பணம் சேர்க்கும் பன்னாட்டு தொடர்புகள் கொண்ட குற்றக்கும்பல் மும்பையில் பிடிபட்டிருக்கிறது.

உடல் உறுப்புகள் மோசடி வியாபாரம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் அளவில் இயங்கிய காலம் மாறி உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் உலகமயமாகியிருக்கிறது. உலகமயமாக்கல் உழைக்கும் மக்களுக்கு தந்த 'அருட்கொடைகள்' தான் விவசாயிகள் (தற்)கொலைகள், உணவு பிரச்சனைகள், வேலையிழப்பு போன்றவை. உழைக்கும் மக்களது உடல் உறுப்புகள் கொள்ளையடிப்பது உலகமயமாக 'மருத்துவ சுற்றுலா', பெருகிவரும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவமனை துவங்க கட்டுப்பாடுகளின்மை, உடல் உறுப்பு கொடை மற்றும் பெறுவதில் வெளிப்படையற்ற தன்மைகள் தொடர்ந்து காரணமாக அமைகிறது. இந்த குற்றங்களில் அரசின் பங்கு கொள்கை அளவிலும், நடவடிக்கைகள் அடிப்படையிலும் மிகப்பெரியது. Outsourcing மூலம் பணம் பெருக்குவதற்காக கதவுகளை திறந்து விட்டு எந்த நாய் வேண்டுமானாலும் நுழையலாம் என்ற நிலையை உருவாக்கியது அரசின் சந்தைமய பொருளாதாரமும், தனியார்மயமாக்கலும்.

ஆயிரம் ஆயிரம் மோசடிகளும், குற்றங்களும் கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்னும் உழைக்கும் மக்களை பாதுகாக்க எந்த மாற்றங்களையும் ஏற்படுத்திவிடாத அரசு மற்றும் 'தேசத்தை' நினைக்கையில் சலிப்பும், வேதனையும், கோபமும் பின்னிய இனம்புரியாத உணர்வு எழுகிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தில் அங்கமாக இருப்பது வெட்கமாகவும், குமட்டலையும் தருகிறது.

உடல் உறுப்பு மோசடிகள், மருந்து நிறுவனங்களது மோசடி சம்பந்தமாக முன்னர் எழுதிய பதிவுகள் தமிழக சிறுநீரக மோசடியின் அதிர்ச்சியான தகவல்கள்
சிறுநீரகம் வாங்கலையோ சிறுநீரகம்!
இந்தியா: மருந்து சோதனை பன்றிக்கூடம்!