Wednesday, November 08, 2006

பார்ப்பனீயம், படிப்பு, மரியாதை இன்ன பிற...

சுந்தரவடிவேல் அவர்கள் தனது தந்தையாரின் இறப்பின் பின்னர் சடங்குகளை செய்த வேளை ஏற்பட்ட வேதனையான அனுபவத்தை சாவிலும் பிழைக்கும் பார்ப்பனக் கூட்டம் என எழுதியிருந்தார். அவரது 50 வயது ஆன சித்தப்பாவை, மற்றும் பிறரையும் ஒருமையில் நீ, வா என சடங்கு நடத்திய பார்ப்பனர் மரியாதை பொங்க அழைத்திருக்கிறார். அதை சுந்தரவடிவேல் கண்டிக்க, அந்த பார்ப்பன பெரியவரின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டதால் அவர் ரொம்ப ஓவர் மரியாதையில் "வாங்கைய்யா, வைய்யுங்கைய்யா, எடுங்கைய்யா" என அழைத்திருக்கிறார். பக்கத்தில் வேறு சிலருடன் சடங்கு நடத்திய பார்ப்பனருக்கு இந்த மரியாதையின் தொனி கவரப்பட்டு என்ன ஓய் நடக்குது என்ற பாணியில் விசாரித்திருக்கிறார். அதற்கு அவா, They need respect! என அடக்கமா பதில் சொல்லியிருக்கா. என்ன இருந்தாலும் வர்ணாஸ்ரம சாதி அடுக்கில் உயர் பீடத்தில் இருக்கிற சவுண்டியானாலும் பார்ப்பனர் என்பதை உணராமல் ஒரு சூத்திரன் மரியாதையை கேட்கலாமா? இது தான் பார்ப்பனீயம் வெளிப்படுத்துகிற மரியாதை. ம்ம்

சுந்தரவடிவேல் அதோடு நின்றால் பரவாயில்லை, போதாத குறைக்கு பார்ப்பனீயம் கையகப்படுத்த தவித்து துடிக்கிற இணைய வலைப்பூவில் பதிவு எழுதி தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். விடுவார்களா நமது "படித்து பண்பட்ட", "சுயமரியாதையை காலங்காலமாக மதித்து" நடக்கிற புண்ணியாவான்கள். பின்னூட்ட கமண்டலங்களுடன் கிளர்ந்தெழுந்து அவரை கட்டம் கட்டி பின்னி எடுக்கிறது வலைப்பதிவுலக நியோபார்ப்பனீயம். இது என்ன குருஷேத்திர யுத்தமா?

அறிவுத்தனமாக எழுதுவதாக அல்லது சமுதாய அக்கறையில் எழுதுவது போல காட்டிக்கொள்கிற வலைப்பூ எழுத்தாளர்கள் இது ஏதோ ஒரு சாதாரண செயலாக காட்ட முனைவது எதை காட்டுகிறது? அந்த பார்ப்பனரின் இடத்தில் இருந்து பார்க்க வேண்டுமாம். ஒரே வேலையை திரும்ப, திரும்ப செய்தால் எரிச்சலும் ஆத்திரமும் வருமாம். என்ன அருமையான உபதேசம்.

மனதில், சிந்தனையில் என கொஞ்சமாவது மனிதாபிமானம் மிச்சமிருப்பின் சிந்திக்க சில கேள்விகள்.

ஒரே வேலை எரிச்சலை தருமெனில் பீஅள்ளுபவனும், சவம் இறக்குபவனுக்கும், முடிவெட்டுபவனுக்கும், களையெடுப்பவளுக்கும், பாத்திரம்ம் தேய்ப்பவழுக்கும் எவ்வளவு எரிச்சலும் ஆத்திரமும் இருக்கும்? இவர்களை என்றாவது மனிதர்களுக்கான உரிமையும், மரியாதையையும் கொடுத்திருக்கிறதா இந்திய சமுதாயம்? பூசை செய்ய நாங்களும் வருகிறோம் என்ற மக்களின் வேண்டுகோளை ஆதரித்து ஆணையிட்ட அரசை எதிர்த்து கட்டம் கட்டி எத்தனை அசுவமேதயாகப் பதிவுகள் வலைப்பதிவில்? அந்த ஆணையை சில விபீடண கோடாரிகம்புகளை வைத்து வழக்குப் போட்ட போது எத்தனை ஆனந்த கமெண்ட் கமண்டலங்கள்?

சுந்தரவடிவேலிடம் "இன்னமும்" இதை எதிர்பார்க்கவில்லை என்கிறவர்கள் "படித்த வர்க்கமாக" காட்டிக்கொண்டு வலைபப்திவில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவும், இராமாயணத்தில் வருகிற மறைந்திருந்து கொல்லுகிற வித்தையை போலவும் எழுதுகிற பார்ப்பனீயக் கருத்துக்களை கண்டித்திருக்கிறார்களா? அப்போதெல்லாம் எத்தனை ஸ்மைலி போட்டு சிரிப்பு? மனவிகாரங்களின் வெளிப்பாடா இவை?

பாதிக்கப்பட்ட ஒருவனின் உள்ளக்குமுறலை புரிந்துகொள்ளாமல், அதற்கான காரணகாரியங்களை ஆராய்ந்து கழைய முயலாமல், எவன் பாதிப்பை உருவாக்குகிறானோ அவன் பக்கம் சாய்ந்து நிற்பது பார்ப்பனீயத்திற்கு புதியதா என்ன? புராணகாலம் முதல் இன்று வரை பார்ப்பனீயம் இதை தான் செய்துவருகிறது.

//இன்னும் என்ன அவ்வளவு வெறுப்பு?ஒரு காலத்தில் ஒடுக்கினார்கள் - சரி.பிராமணன் மட்டுமா ஒடுக்கினான்? பணம் படைத்தவன் எல்லாரும் சேர்து தானே ஒடுக்கினார்கள்.இன்று அப்படி ஒடுக்குதல் கிடையாதே.// இது நல்ல ஒரு அழைப்புடன் சுந்தரவடிவேல் பதிவில் வந்த பின்னூட்டம்.

மரியாதை குறைவாக நடத்தப்பட்ட ஒருவர் அதன் பாதிப்பை வெளிப்படுத்தினால் அது வெறுப்பு! அந்த அவமானத்தை நிகழ்த்திவருக்கு ஆதரித்து/பரிந்து எழுதினால் அது சமூக அக்கறை? பார்ப்பனீயம் என்றோ நிகழ்த்தியதையல்ல சுந்தரவடிவேல் எழுதிருக்கிறார். அவருக்கு தற்போது ஏற்பட்ட அனுபவத்தின் வலி இது. பார்ப்பனீயம் பணம் படைத்த வர்க்கத்துடனும், அதிகார வர்க்கத்துடனும் சேர்ந்து சூத்திரர்களை ஒடுக்கிய/ஒடுக்குகிற நிலை வேதகாலம் முதல் இன்று வரை தொடர்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் உதாரணங்களை காணலாம்.

கோவில் முதல் அனைத்து இடங்களிலும் மனிதனை மனிதனாக சம மரியாதை, உரிமையில் நடத்த அழைப்புகள், குரல்கள் வருகிற வேளைகளில் வேதங்கள், சாத்திரங்கள், ஆகமங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிற்கிற கோழைத்தனமான செயல்களை கழையுங்கள். அந்த சடங்கு நடத்திய ஒரு பார்ப்பனர் மட்டுமல்ல எதிர்கால பல தலைமுறைகளின் பார்ப்பனீய சிந்தனைத் திமிர் பிடித்த மனிதர்களை (எந்த சாதியாக இருப்பினும்) உருவாக்கும் தவறை இனியாவது நிறுத்துங்கள். தவறு என்பது நம் வீட்டு சமையலறையில் இருந்தாலும் தவறு என ஒத்துக்கொள்ள ஏன் தயக்கம்? racial purity/racial suprimacy என்கிற மாய உலகில் வாழ்வதை விட்டு நாம் குறைகள் நிறைந்த நிறை மனிதர்கள், நிறைகளாக மலர்வோம் என வெளிச்சத்துக்கு வாருங்கள்! வாருங்கள் மனிதனை மரியாதையும், மாண்பும் மிக்கவர்களாக நடத்துவோம். We need respect! because WE ARE HUMANS WITH DIGNITY!

11 பின்னூட்டங்கள்:

Hariharan # 03985177737685368452 said...

திரு,

இதுமாதிரி ஒரு நூறு மரியாதைக்குறைவான சம்பவம் பார்ப்பனரல்லாதவரால் எனக்கு நிகழ்ந்திருக்கிறது. நான் நேரடியாக சந்தித்திருக்கிறேன்.

பார்ப்பனரை எளிதில் அவனது அடையாளங்களால் சாதி பிரித்துக்காட்டிட முடிகிறது. இதர சாதிகள் பார்ப்பனருக்கு இம்மாதிரி நிகழ்த்தும் மரியாதைக்குறைவுகளின் போது ஏற்கனவே சம்பவ இடத்தில் நொந்துபோன பார்ப்பனநபர் எதிரிலிருக்கும் நபரது சாதி ஆராய்ச்சி செய்ய விழைவதில்லை!

நான் பள்ளி, கல்லூரியில் படித்த காலங்களில் என்னை கூடப்படிக்கிற ஒரு பயலும் ஹரிஹரன் என்று அழைத்ததில்லை அவன் அவனுக்கு மகிழ்ச்சி, காரியம் ஆகணும், பரீட்சைஎழுதும் போது விடைத்தாளை சுற்றுக்குவிடச் சரி எனில் அய்யரு என்றும் கருத்து மாறுபட்டால் பாப்பான் என்ரும் கோபம் வந்தால் பாப்பாரநாய் என்றுதான் அழைத்திருக்கிறார்கள். These persons can casteize anything anay everything!

தனிநபர் ஒழுங்கீனமான இதை பிராமண சமூகத்தின் தவறாக சித்தரிப்பது ஊட்டப்பட்ட அரசியல் பகுத்தறிவு வேலை செய்வதால்!

தி.ராஸ்கோலு said...

அன்பின் திரு,

நல்லவேளை ஒரு ஈரோட்டுக் கிழவன் சரியாக இதனை அடையாளம் காட்டிச் சென்றுவிட்டான். இல்லையேல் இன்றும் இந்த அட்டூழியங்களை பார்ப்பனரல்லாத பலரே சரி கண்டு அதற்கு நியாயமும் கற்பிப்போம்.

'இன்னமும்', 'ஒரு தனி மனிதனின் செய்ல்', 'ஒரேவேலை தந்த எரிச்சல்' இதற்கு சப்பைக்கட்டு என்று பெயர் வைப்பது கடினம். கொழுப்பு என்று தான் சொல்லவேண்டும்.

அருண்மொழி said...

கருணாநிதிய திட்டி பதிவு போட்டப்ப ஜெவை பத்தி கேள்வி கேட்டால், இது கருணாநிதி பற்றிய பதிவு மற்றவை பற்றி பேச வேண்டாம் என்று ஜகா வாங்கும் அம்மிகள், அங்கே கும்மி அடித்திருப்பது வேடிக்கையானது. அதைத்தான் நான் வார்த்தை விளையாட்டு என்பேன். இரட்டை நாக்கு உள்ளவர் எப்படி வேண்டுமானாலும் மாற்றி பேசுவர்.

அந்த பதிவின் முக்கிய அம்சம் they need respect. ஒரு சிலர் மட்டுமே அந்த பாப்பான் செய்தது தவறு என்று சொல்லியுள்ளனர். மற்றவர்களின் கும்மி

- உனக்கு நம்பிக்கை இல்லை. ஏன் போனாய்
- நீ கறை படிந்த கண்ணாடி போட்டுள்ளாய்
- அவன் சரியா
- இவன் சரியா
- ஒரு அம்மி அரிப்பு தாங்காமல் வழக்கம் போல ராமதாஸை இழுத்துள்ளது

இதை விட பெரிய காமெடி சாஸ்திரம் இருப்பதால்தான் நாடு நல்லா இருக்கு என்று ஒருவர் புருடபுராணம் வேறு விடுகிறார். பார்ப்பனர் திருந்தி விட்டனர் என்பவர் அந்த பின்னூட்டங்களை படித்து தெளிவு பெற வேண்டும்.

Unknown said...

தமிழகத்தின் எந்த கிராமத்திற்க்கும் செல்லுங்கள் , அங்கே உள்ள பீ அள்ளுபவரும் நீங்கள் சொன்ன மற்ற எல்லா வேலைகளையும் செய்பவர் இருப்பார் , அவரைக் கேளுங்கள் , உங்களை ஜாதியின் பெயரால் அடிமைப்படுத்துவதும் கேவலப்படுத்துவதும் பாப்பானா ? மற்ற உயர்ந்த (?) சாதிக்காரனா என்று ,

ஒரு நாள் ஒரு பார்பனர் செய்த தவறுக்காக அந்த குலத்தையே கட்டு அடிக்கிறீர்களே , காலம் காலமாய் அதை மட்டுமே அனுபவிக்கிற அவர்களுக்காக ஒரு வார்த்தை எழுதினீர்களா ?

இப்போது நீங்கள் செய்வதுதான் திராவிட வர்ணாசிரமமா ?

பரதரசு

Anonymous said...

When my father died, right from the barber ( he charged 100 Rs per shaving, and we organised up & down Auto rikshaw for him),the person in the burial ground, the hospital staff,the Van driver, and many got exhorbitant money and they illtreated us. We paid them whatever they asked as if the money is spent to our father. Why to blame one person by caste.

Anonymous said...

பூசை செய்ய நாங்களும் வருகிறோம் என்ற மக்களின் வேண்டுகோளை ஆதரித்து ஆணையிட்ட அரசை எதிர்த்து கட்டம் கட்டி எத்தனை அசுவமேதயாகப் பதிவுகள் வலைப்பதிவில்? அந்த ஆணையை சில விபீடண கோடாரிகம்புகளை வைத்து வழக்குப் போட்ட போது எத்தனை ஆனந்த கமெண்ட் கமண்டலங்கள்?

Sir,Saivarchayars (non-brahmins) also went to court and got it stayed.There are non-brahmin
priests in many temples.There
no brahmin can enter the sanctum
sanctorum.Do you know atleast this.
Blaming brahmins or brahminism or world bank wont help beyond a point.You can make a career out
of this.

thiru said...

//அருண்மொழி said...
இதை விட பெரிய காமெடி சாஸ்திரம் இருப்பதால்தான் நாடு நல்லா இருக்கு என்று ஒருவர் புருடபுராணம் வேறு விடுகிறார்.// நாடு யாருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லலையே! :)

thiru said...

//baratharasu said...
தமிழகத்தின் எந்த கிராமத்திற்க்கும் செல்லுங்கள் , அங்கே உள்ள பீ அள்ளுபவரும் நீங்கள் சொன்ன மற்ற எல்லா வேலைகளையும் செய்பவர் இருப்பார் , அவரைக் கேளுங்கள் , உங்களை ஜாதியின் பெயரால் அடிமைப்படுத்துவதும் கேவலப்படுத்துவதும் பாப்பானா ? மற்ற உயர்ந்த (?) சாதிக்காரனா என்று,//

பரதராசு,

பார்ப்பனீய கொள்கையை விமர்சனம் செய்தால் ஒரு குறிப்பிட்ட சாதியினரை சொல்வதா? எனது புரிதல் அதுவல்ல...பார்ப்பனீயம் எல்லா சாதி அடுக்குகளிலும் இருக்கிறது. அட்து எங்கிருந்தாலும் கழையப்படுவது அவசியம்..

//ஒரு நாள் ஒரு பார்பனர் செய்த தவறுக்காக அந்த குலத்தையே கட்டு அடிக்கிறீர்களே , காலம் காலமாய் அதை மட்டுமே அனுபவிக்கிற அவர்களுக்காக ஒரு வார்த்தை எழுதினீர்களா?

இப்போது நீங்கள் செய்வதுதான் திராவிட வர்ணாசிரமமா? பரதரசு//
நல்லா சிரிக்க வைக்கிறீங்க! புதுசா வலைப்பூ தொடங்கி பின்னூட்டம் போட வந்ததும் வந்தீங்க, பழைய பதுவுகள், என் பின்னூட்டங்களை எல்லாம் படிச்சிட்டு வாங்க சாமி!

thiru said...

//Anonymous said...
Sir,Saivarchayars (non-brahmins) also went to court and got it stayed.There are non-brahmin
priests in many temples.There
no brahmin can enter the sanctum
sanctorum.Do you know atleast this.
Blaming brahmins or brahminism or world bank wont help beyond a point.You can make a career out
of this.//

அனானி,

பிராமணர்கள் வழக்கு தொடுத்ததாக எழுதியிருக்கிறேனா? மீண்டும் படியுங்கள்!

ஒருவர் சமூகப்பிரச்சனைகளை உங்களது பார்வையில் பார்க்க, சிந்திக்கவேண்டும் என ஏதாவது கட்டாயமிருக்கிறதா? அப்படி இல்லையானால் அவர்கள் careerக்காக இருப்பதாக உங்களைப் போல ஏன் எண்ணுகிறீர்கள். உலகவங்கிக்கும் பார்ப்பனீயத்திற்கும் வால் பிடிப்பதில் உங்களுக்கு என்ன இலாபம்? கண்ணாடி முன் நின்று பாருங்கள் உங்களுக்கு புன்னகை வரும் :)

thiru said...

திரு said...
ஹரிஹரன்,

வருகைக்கு நன்றி! ஒரு சாதியில் ஒருவர் பிறந்ததால் தவறு செய்தார் என்பதல்ல வாதம்.

சுந்தரவடிவேலின் பதிவில் வந்த பின்னூட்டங்களும், போலிப் பெயரில் ஒளிந்து நடத்துகிற தாக்குதல்களின் வஞ்சகமும் எந்த அளவு மனிதத்தை போதிக்கிறது என்பது வெளிச்சமாக தெரிகிறது. இதில் பார்ப்பனீயம் எப்படியெல்லாம் தன்னை தற்காப்பு செய்துகொள்கிறது? என்ன நேர்மை...ம்ம்

//தனிநபர் ஒழுங்கீனமான இதை பிராமண சமூகத்தின் தவறாக சித்தரிப்பது ஊட்டப்பட்ட அரசியல் பகுத்தறிவு வேலை செய்வதால்!//

அநீதியை எதிர்ப்பது ஊட்டப்பட்ட அரசியல் பகுத்தறிவு தான்... அடக்கி ஆளும் பார்ப்பனீய தத்துவம் ஊட்டப்பட்ட அரசியல் அநாகரீகம் என ஒத்துக்கொள்கிறீர்களோ? :)

பிறப்பில் எந்த சாதியாக இருப்பினும் வர்ணாஸ்ரம கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிற சிலருக்கு பதட்டம் ஏன்?

ஊட்டப்பட்ட அரசியல் பகுத்தறிவிற்கு காரணம் புத்தன் முதல் பெரியார் வரை நல்ல மனிதர்கள் பலர் வரிசையில் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசியல் பகுத்தறிவை தான் ஊட்டினர். பார்ப்பனீய கொள்கையை எதிர்க்கும் அரசியல் பகுத்தறிவு அது.

Anonymous said...

பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...

பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com