Monday, November 13, 2006

கண்ணீர் கதைகள்!

“காலையில 6.00 மணி முதல் 11.00 மணி வரை தண்ணி பயன்படுத்தாத உலர்ந்த கக்கூசை (dry latrines) சுத்தம் செய்றேங்க. மனுச பீயை அள்ளி தலையில சுமந்து அரை கிலோமீட்டர் தூரத்தில இருக்க ஆற்றுக்கு தினமும் 7 முதல் 10 தடவை வரை எடுத்து போவேங்க. மத்தியானம் சாக்கடையை சுத்தம் செய்வேங்க. இன்னொரு பாங்கி சாக்கடையிலிருந்து குப்பைகளை எடுத்து வெளியே வைப்பாருங்க. அதையும் எடுத்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில கொண்டு போயி கொட்டுவேங்க. பத்து வருசத்துக்கு முன்னால எம் புருசன் செத்ததிலயிருந்து இந்த வேலைய செய்துட்டுவறேங்க. இதுக்கு தினக்கூலியா 30 ரூபா தருவாங்க. ஒம்பது வருசத்து முன்னால 16 ரூபா குடுத்தாங்க, அப்புறம் 22 ஆச்சு, இப்போ இரண்டு வருசமா 30 ரூவா தறாங்க. ஆனா இந்த கூலியும் நிச்சயமில்லீங்க. போன ரெண்டு மாசமா கூலி எதுவும் கிடைக்கலைங்க. ரெண்டு மாசத்திற்கு ஒரு முறை கூலி தருவாங்க அதுவும் நிச்சயமில்ல. நகர் பாலிகா முனிசிபாலிட்டி ஆபீசர் தான் கூலி தருவாருங்க”

நாற்பது வயதான மஞ்சுவின் கதை இது. அவர் வட இந்தியாவில் ஒரு நகராட்சியில் மனித மலத்தை அப்புறப்படுத்தும் வேலை செய்து வருகிற ஒடுக்கப்பட்ட இனப்பெண் தொழிலாளி.

ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வாழ்வை இந்த பதிவில் காணுகிற ஒளிப்படத்தில் பாருங்கள். இந்த வேதனையை சொல்ல வார்த்தையில்லை. "இன்னுமா" சாதிக்கொடுமைகளும் பார்ப்பனீயமும் இருக்கிறது? "ஒரே வேலையை செய்வதால் இவர்களுக்கு சலிப்பும், வெறுப்பும், வேதனையும், எரிச்சலும்...."ஏற்படாதா?

5 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

திரு,

மிருந்த வேதனைக்குள்ளாக்கும் செய்திதான்..

ஒரு கழிவறை மற்றும் கழிவு தேக்க தொட்டிக்கு அவ்வளவு ஒன்றும் செலவு ஆகி விடாது..

ஏன் இதை அந்த நகராட்சி செய்யவில்லை என்று தெரியவில்லை..

மிகவும் வருந்ததக்கது..

மாசிலா said...

இம்மக்களுக்கு இப்போதைக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது. காரணம், இவர்களை விட்டால் இம்மாதிரியான அசிங்கமான வேலைகளை வேறு யார் செய்வர்? நாலா பக்கமும் பொருளாதார மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிக்கு நெருக்கடி கொடுத்து வாழ்நாள் முழுவதிலும் கொத்தடிமைகளாகவே வைத்து இருப்பதில்தான் சமூகத்தின் மற்ற அனைவருக்கும் விருப்பம். இவர்களே வேண்டாம் இவ்வேலை, நாங்கள் வெளியூர் போகிறோம் என்றால்கூட அவர்களை விடமாட்டார்கள். இது வெறும் சாதி பிரச்சினை மட்டும் கிடையாது. ஒரு தொழில் பிரச்சினையும் கூட. இந்த அவல நிலைக்கு மாற்றம் தேவையென்றால், அது தொழில் இரீதியாகவும் வரவேண்டும். கழிப்பிடங்கள் கட்டப்படும் முறைகளிலும் மாற்றங்கள் வேண்டும்.

மதம், கடவுள், சாதி இதன் பெயரில் சிறைபிடிக்கப்பட்டு மற்றவர்கள் இவர்களின் வாழ்க்கையை சூறையாடி வருகிறார்கள். சமூகத்தின் கண்கானிப்பில் பாதி சுதந்திரத்தில் வாழும் மனிதர்கள். இவர்களுடைய வாழ்வும், உயிரும் இவர்களுடையது இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அடுத்தவர்களின் தயவினை நம்பியே காலத்தை ஓட்டவேண்டியிருக்கிறது. அடி, தடி உதை, சாவு, கற்பழிப்பு, வீடு எரிப்பு போன்ற தண்டனைகள் எங்கிருந்தும், எவரிடமிருந்தும், எந்த கனத்திலும் வரலாம் என்ற சதா பயத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு விட்ட வேலைகளை வேறு வழியின்றி செய்து வரும் பணயக்கைதிகள்.

முடிவாக இவர்களை இம்மாதிரியான ஈனத்தொழில்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால், அவர்கள் அங்கிருந்து எடுக்குமுன், அவ்வேலைகளை செய்ய மாற்று வழிகளை கண்டுபிடித்து செயல்பட வைக்கவேண்டும்.
இல்லையேல, இப்படியே வாழ் நாள் முழுவதும் கத்திக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஏனென்றால் தற்போதைய மாறிவரும் நகர வாழ்க்கை முறைக்கு, முன்னைவிட இப்போது இவ்வேலை செய்பவர்கள் மிகமிக அதிகமாக தேவைப்படுகிறார்கள். இவர்கள் சமூகத்தின் ஒரு அங்கம்.

என் வாதத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.

thiru said...

//Sivabalan said...
திரு,

மிருந்த வேதனைக்குள்ளாக்கும் செய்திதான்..

ஒரு கழிவறை மற்றும் கழிவு தேக்க தொட்டிக்கு அவ்வளவு ஒன்றும் செலவு ஆகி விடாது..

ஏன் இதை அந்த நகராட்சி செய்யவில்லை என்று தெரியவில்லை..

மிகவும் வருந்ததக்கது..//

இது ஒரு நகராட்சியில் மட்டுமல்ல. இது பற்றிய புள்ளிவிபரத்தை இன்னொரு பதிவில் பதிய முயல்கிறேன்.

வசந்த் said...

//மிருந்த வேதனைக்குள்ளாக்கும் செய்திதான் //

உண்மைதான்.. உடனடித் தேவை அனைத்து திறந்த வெளி கழிப்பிடிடங்களும் சுகாதார கழிப்பறைகளாக மாற்றப்பட வேண்டும்.

ஆனால் அங்கேயும் இவர்கள்தான் சுத்தம் செய்யவேண்டும் என நிர்பந்திக்கும் ( பொருளாதார நெருக்கடி) சமுதாயத்தை எப்படி மாற்றுவது.

நன்றி
வசந்த்

மாசிலா said...

சாதிகளின் மதங்களின் பொய் திரையின் பின்னால் மறைந்துகொண்டு அரசியல் சக்திகளுக்கும் இந்த "சிறைபிடிப்பில்" சம்மதமும் பொறுப்பும். ஓட்டுப் பொறுக்கி அரசியலும் இந்த அடிமைத்தனத்துக்கு பொறுப்பு.

பொது கழிவிடங்கள், வீதிகள், சாக்கடை போன்ற பொது இடங்கள் முனிசிபாலிட்டி கட்டுப்பாட்டில் இருக்க, அவர்கள் எப்படி இத்தொழிலாளிகளை நழுவவிடுவார்கள்? சுத்தம் செய்யப்படவில்லை என்றால் சமுதாயத்திற்கு பிறகு என்ன பதில் சொல்வார்கள்? இவ்வளவு குறைந்த சம்பளத்திற்கு இவ்வளவு மோசமான வேலையை வேறு யார் செய்வார்? நிலமை மோசமானால், அடுத்த தேர்தலில் மறுபடி எப்படி ஆட்சிக்கு வருவது?

எனவே நிலமையை இப்படியே வைத்திருந்து இப்பாவ மக்களின் இரத்தத்தை கடைசி சொட்டுவரை உறிந்து குடித்து மதவாதிகளின் மறைமுக ஆதரவுடன் காலத்தை ஓட்டுவதுதான் நம் இப்போதைய அனைத்து அரசியல்வாதிகளின் போக்கு.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com