Saturday, January 06, 2007

பகவத்கீதை: யாருடைய புனிதநூல்?

"இந்துமத வேத நெறி, உபநிட தத்துவங்கள் எல்லாம் 'ஞான எல்லை' எனும் தளத்தில் வைத்துப் பொருள் காணாமல் பொருள் உலகியல் எல்லையில் மனிதனுக்குக் கேடயமாக வைத்துப் பயன்படுத்தப்படுவதில் பகவத்கீதையின் நோக்கம் களங்கப்படுத்தப்படுகிறது." என பார்ப்பனீயவாதிகள் வேதனைப்படுகின்றனர். 'ஞானம்' எல்லைகளற்றது ஆகவே இந்த சொல்லாடலில் சிக்கி கீதைக்கு விளக்கமளிக்க அவசியமில்லை.

கீதை யாருக்கு சாதகமான புனிதநூல்?

இந்த கேள்விக்க்கு விடைகாண கீதை உரைக்கப்பட்டதாக சொல்லப்படுகிற சூழல் மற்றும் களம், கீதையை உருவாக்கிய முறைகள் மிக முக்கியமானது.

கீதை சொல்லப்பட்ட காலமும், களமும் என்ன?

ஆரியர்கள் சூட்சிகளாலும், தந்திரமிக்க வார்த்தைகளாலும் மன்னர்களை மிரளவைத்து, கொலை செய்து ஆட்சியை தங்களிடம் வைத்திருந்தனர். இந்த பார்ப்பனீயக் கும்பலை வெற்றிபெற சத்திரியர்களால் முடியவில்லை. சத்திரிய மன்னர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். ஒரு அணி பிராமண மதத்தை எதிர்த்தது, இன்னொன்று ஆதாரித்தது.

துரோணர் என்கிற பிராமணர் தான் முதலில் இந்த போரை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஞ்சால மன்னர் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என புகார் சொல்லி கௌரவர்களிடம் அடைக்கலம் புகுந்தார் துரோணர். பிராமணர்களை ஆதரிக்கும் கௌரவர்கள் உதவியுடன் பாஞ்சால மன்னனை பழிவாங்க துரோணர் திட்டமிட்டார். இந்த போட்டி வேறுவழியில்லாமல் ஒரு போராக வெடித்தது.

கிருஸ்ணன் தலைமையில் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்த சத்திரியர்கள் அணியும், துரோணர் தலைமையில் ஆரிய ஆதிக்கத்தை ஆதரித்த அணியும் மோதியது. மோதலின் முடிவில் கிருஸ்ணன் தலைமையிலான சத்திரிய அணி வெற்றிபெற்றது. இதன் தாக்கம் இந்தியா எங்கும் பரவியது. ஆரிய மன்னர்களிடமிருந்து ஆட்சியும், அதிகாரமும் குறுநில மன்னர்கள் கைக்கு மாறியது. இந்த மாற்றத்திற்கு காரணமான கிருஸ்ணன் பற்றிய கதைகள் எங்கும் பரவியது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுமையும் குறுநில மன்னர்களது ஆதிக்கம் பெருகியதால் அவர்களிடம் சமரசம் செய்துகொள்ளும் விதமாக ஆரியர்கள் கிருஸ்ணனை வழிபட துவங்கினர் (இராமனை வழிபட துவங்கியதும் இதே நிலையில் தான்).

மகாபாரதம் 15 நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் இன்றுள்ள உருவைப்பெற்றது. துவக்க காலத்தில் செவி வழியாக சொல்லப்பட்டு வந்த இந்த கதைகளில் எண்ணற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக புதுப்புது கதைகளை இக்காவியத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதனால் தான் இன்றைய மகாபாரதக் கதைகள் பார்ப்பனீயத்திற்கு ஆதரவான ஆதிக்க அரசியலை தாங்கி வருகிறது. இதை விவரிக்கிற அறிஞர் ஆர்.சி.தத் "பிற்காலத்தில் வந்த கவிஞர்களும் மொழி அறிஞர்களும் இந்த இதிகாசக் காவியத்தில் அவரவர்களின் விருப்பம் போல் இடைச்சொருகல் செய்து மாறுதல் ஏற்படுத்த தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தனர்." என்கிறார்.

மகாபாரதப் யுத்தகளத்தில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து கிருஸ்ணன் 'அறிவுரைகள்' வழங்கியது போன்ற உரையாடல் முறையில் கீதை பின்னப்பட்டிருக்கிறது. ஆர்.சி.தத் கூறுவதைப் போல ஆரிய அறிஞர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தங்களுக்கு சாதகமாக பார்ப்பனீயத்தை எதிர்த்த கிருஸ்ணன், அர்ச்சுனன் என்கிற சத்திரியர்களை வைத்தே கீதை வடிவில் பார்ப்பனீய கருத்துக்களை நுழைத்திருக்கிறார்கள். பார்ப்பனீயம் சுமார் 3500 ஆண்டுகளாக நிலைத்திருக்க இந்த மாதிரியான தந்திர வழிமுறை தான் காரணம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதங்களை பறிப்பது, அவர்களது வீரர்களது, குலதெய்வங்களது கதைகளில் பிராமண மதத்தை திணிப்பது என மோசடியில் பார்ப்பனீயம் நிலைத்திருக்கிறது.

இன்று நாட்டார் வழக்கியல் தெய்வங்களையும், மண்ணின் மக்களின் மதங்களையும் பார்ப்பனீய இந்து மதமாக்க நடக்கும் முயற்சி தான் "அனைவரும் இந்துக்கள்" என்ற கூப்பாடு. சனாதான தர்மம், பிராமண மதம், என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த பார்ப்பனீய மதம் பார்ப்பனீய சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டியே வந்திருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமதம் என்ற புதிய கவர்ச்சி பெயருடன் எல்லோரையும் பார்ப்பனீய கருத்துக்களில் அடக்கும் முயற்சி துவங்கியது. குறைந்த எண்ணிக்கையிலான பார்ப்பனீய "இந்துத்துவ" கொள்கையை அடைய கூலிப்படைகளாக பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களை பயன்படுத்துவது தான் இந்துமத போர்வையில் இணைப்பு முயற்சி.

பகவத்கீதை பார்ப்பனீய ஆதிக்கநெறிகளை பரப்பும் ஆயுதமானது. அதற்கான கதைச் சொருகல்களுடன் கீதை இந்துக்களின் புனிதநூல் என பரப்பப்படுகிறது. பிராமண மதத்தை எதிர்த்து யுத்தம் செய்த குறுநில மன்னன் கிருஸ்ணனுக்கும் இன்றைக்கு கீதையில் புனைந்திருக்கிற 'கற்பனை' பார்ப்பனீய கிருஸ்ணனுக்கும் இடைவெளி அதிகம். இந்த இடைவெளியில் ஒடுக்கப்பட்ட மக்களின், வாழ்வியல், நெறி, வழிபாட்டுமுறைகள், பண்பாடு என பார்ப்பனீயம் தந்திரமாக விழுங்கிய வரலாறு மறைந்திருக்கிறது. "இந்து" என சொல்லப்படுவது பார்ப்பனீய வைதீக மதம். பெரும்பான்மையான இந்திய மக்கள் பல விதமான மண்ணின் தெய்வங்களை (நாட்டார் வழக்கியல் தெய்வங்கள்) வழிபட்டு வருகின்றனர். அவர்களது வாழ்வியல், தெய்வ வழிபாட்டு முறைகள் பார்ப்பனீய இந்து மதத்திலிருந்து வேறுபட்டது.

ஆணும், பெண்ணும் சமமாக வாழும் நிலைகளை போதிப்பவை நாட்டார் தெய்வங்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்து கலந்ததால் மக்களின் உணவே தெய்வத்திற்கும் படைக்கப்படுகிறது. ஆடுவெட்டுதல், கோழி அறுத்தல், குரவையிடுதல், பன்றி வேட்டை, சாமியாடுதல் என மக்களின் வாழ்வோடு இயங்குகிறது மண்ணின் மதங்கள். ஆரிய இந்து மதமோ நைவேத்தியம், அபிசேகம், காய்கறி வகை படையல், யாகம் என வேறு ஒரு தளத்தில் இயங்குகிறது. திருச்சி திருவரங்கம் கோவில் அரங்கநாதனை, சவஅடக்கம், துணி துவைத்தல், உழவுத்தொழில், கல்லுடைத்தல், முடிவெட்டுதல் செய்யும் செய்யும் 'முனியாண்டிகள்' தொடமுடியாதது மட்டுமல்ல, பன்றிக்கறி படையல் செய்து வழிபடமுடியாது. முனியாண்டிகள் அருகில் வருவது அரங்கநாதனுக்கு பிடிப்பதுமில்லை. ஆனால் முனியாண்டியின் காவல் தெய்வங்களை யாரும் தொடலாம், எந்தவித படையலும் கொடுக்கலாம். முனியாண்டிகளின் தலைமுறைகள் பகவத்கீதையை பார்த்ததோ, கேட்டதோ, படித்ததோ இல்லை. பகவத்கீதையின் மூலமொழியான சமஸ்கிருதம் முனியாண்டிகள் காதுகளில் கேட்டாலே குற்றமாக கருதப்பட்டு, கேட்ட காதில் காய்ச்சிய ஈயமும், மெழுகும் ஊற்றப்பட்டது. அதனால் முனியாண்டிகளின் தலைமுறைகளுக்கு கூட சமஸ்கிருதம் தெரியாது.

இப்போது சொல்லுங்கள் கீதை யாருடைய புனிதநூல்? பார்ப்பனீய கீதை பார்ப்பனீயத்தின் புனிதநூல். பிற்படுத்தப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் சூத்திரம் தான் கீதை.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்கிறது பார்ப்பனீய கீதை. அடக்கப்பட்டு மேல்சாதி இந்துக்களுக்கு பல தலைமுறைகளாக பெரும்பான்மையான மக்களை அடிமையாக அடங்கி வாழ வைத்திருப்பது யாருக்கு சாதகமாக நடந்திருக்கிறது?

"எது நடந்ததோ அது பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு சாதகமாகவே நடந்தது" என கீதையை திருத்துங்கள். இந்த உண்மையிலிருந்து விடுதலையின் வரலாறு மண்ணின் மக்களின் பக்கமாகவும் திரும்பட்டும்.

(தொடரும்)

கீதை பற்றிய எனது முந்தைய கட்டுரைகள்: கீதையின் அடிமைக் கட்டுகள்!, சாதிமுறை பற்றி கீதை!

15 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தெரு
ஒழுங்கா எழுதற வழியை பாரு. உன்னோட இந்திய முகவரி எல்லாம் எங்களுக்கு அத்துபடி.
தேவை இல்லாமல் மதம் சமூகம் மேல் சாணி விட்டு எறியும் வேலையை விட்டு விடு.

நீ ஏற்கனவே விடுதலை புலிகளை ஆதரித்து எழுதியதை IB பார்வைக்கு கொடுத்து வைத்தாகி விட்டது.இந்த பதிவும் அனுப்பபடும். உன் குடுமபத்தாரை உன் பைத்தியகாரத்தனத்துக்காக பலி கொடுக்காதே.

thiru said...

//Anonymous said...
தெரு
ஒழுங்கா எழுதற வழியை பாரு. உன்னோட இந்திய முகவரி எல்லாம் எங்களுக்கு அத்துபடி.
தேவை இல்லாமல் மதம் சமூகம் மேல் சாணி விட்டு எறியும் வேலையை விட்டு விடு.

நீ ஏற்கனவே விடுதலை புலிகளை ஆதரித்து எழுதியதை IB பார்வைக்கு கொடுத்து வைத்தாகி விட்டது.இந்த பதிவும் அனுப்பபடும். உன் குடுமபத்தாரை உன் பைத்தியகாரத்தனத்துக்காக பலி கொடுக்காதே.

1/06/2007 04:45:43 PM//

அன்புள்ள அனானி,

எனது குடும்பத்தினர் மீதான உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி! கருத்துரிமை அடிப்படையில் எல்லோருக்கும் சென்று சேர சமூகம் சார்ந்த கருத்துக்களை வலைப்பதிவில் பதிகிறேன். இதில் ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் எனது முகவரி, IB போன்ற உங்கள் மிரட்டலில் அடங்கிப்போக வாய்ப்பில்லை.

எதிர்கருத்துக்கள் இருப்பின் சான்றுகளுடன் வாருங்கள் விவாதிப்போம்.

உங்கள் 'மேலான அக்கறைக்கும் வருகைக்கும்' நன்றி!

குழலி / Kuzhali said...

திரு தொடரட்டும் உங்கள் பணி, அப்புறம் நானும் அடிக்கடி யோசிப்பேன், இந்த புராண கதைகளெல்லாம் ஒரு வேளை ஆரிய திராவிட போர்கள் தானோ, அதைத்தான் திரித்து திரித்து தேவர் அசுரர் கதைகளாகவும் வேறு பல புராணகதைகளாகவும் மாற்றிவிட்டார்களோ என.... எப்படியாயினும் நிறைய தகவல்கள் உங்கள் பதிவிலிருந்து கிடைக்கின்றன...

thiru said...

// குழலி / Kuzhali said...
திரு தொடரட்டும் உங்கள் பணி, அப்புறம் நானும் அடிக்கடி யோசிப்பேன், இந்த புராண கதைகளெல்லாம் ஒரு வேளை ஆரிய திராவிட போர்கள் தானோ, அதைத்தான் திரித்து திரித்து தேவர் அசுரர் கதைகளாகவும் வேறு பல புராணகதைகளாகவும் மாற்றிவிட்டார்களோ என.... எப்படியாயினும் நிறைய தகவல்கள் உங்கள் பதிவிலிருந்து கிடைக்கின்றன... 1/06/2007 06:47:28 PM//

குழலி,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

வரலாற்றை தனக்கு சாதகமாக திருத்து எழுதிய 'noble' தன்மையை வெளிப்படுத்துகிறேன். மேல்சாதி இந்த்து குடும்பத்தில் பிறந்த தர்மதீர்த்த அடிகளார் என்ற ஒரு துறவியின் கருத்துக்கள் அடிப்படையில் எனது தேடலில் கண்டவை இந்த பதிவுகள். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அவர் செய்த கடுமையான ஆய்வுகளும் அதன் பின்னர் அவர் வெளியிட்ட பதிவுகளும் இதற்கு துணையாக இருப்பதை நன்றியுடன் வெளியிடுகிறேன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

thiru said...

அனானிகளாக வந்து வசைபாடியவர்களுக்கு,

பதிவிற்கு எதிர்வாதங்களாக கருதும் பின்னூட்டங்கள் தவிர, வேறு எந்த வசைபாடல்களையும் இனிமேல் வெளியிடுவதில்லை.

மிரட்டல்கள், உருட்டல்கள் எல்லாம் வீணானவை.

விவாதிப்போம் நண்பர்களே!

இங்கு 'ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த நண்பர்கள்' யாரையும் தாக்குவது என் நோக்கமல்ல. எந்த சாதியிலும் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே உங்களது ஆடுகளத்தின் மையப்புள்ளி குறிப்பிட்ட ஒரு சாதியை வைத்த அரசியல் என்றால் அதில் நானில்லை.

வரலாற்று உண்மைகள் கசக்கும்! அதுவும் நமது நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தினால். "உலகம் உருண்டை வடிவமானது" என்ற அறிவியலாளனை கண்டிக்கவும் கூட்டம் இருந்தது. ஆனால் அதுவே அறிவியல் உண்மையான பின்னர் மன்னிப்பும் கேட்டனர். இது வரலாறு கற்பித்த பாடம். வாருங்கள் உங்களது நல்ல கருத்துக்களுடன். உண்மையாக இருப்பின் ஏற்கிறேன்.

இனி வீணான எந்த பின்னூட்டமும் பதிவதாக இல்லை. அதற்கு பதிலும் இல்லை.

அன்புடன்,
திரு

மாசிலா said...

நல்ல பதிவு.

இளைஞர்கள் விழித்துக்கொள்வார்கள் என் நம்புவோம்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இன்னும் நாம் ஆரியம், பிராமனீயம் பற்றி பேசி காலத்தை வீணடித்து கொண்டிருக்கிறோம். எவ்வளவு காலம்தான் இப்படி குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்க் போகிறோம்? உலகம் அசுர வேகத்தில் மாறிக்கொண்டு வருகிறது. இந்தியாவை சுற்றிலும் எதிரிகள் நாட்டை கூறுபோட காத்து கொண்டிருக்கிறார்கள். உள் நாட்டில் ஏழ்மை, வறுமை, பொய், பித்தலாட்டம், சாதி, மத பெயரில் வஞ்சனை, கொடுமை.... இதெல்லாம் இன்னும் இந்த இந்திய மக்களுக்கு ஒரு தேவையா? எவ்வளவு காலம்தான் இப்படி கத்திகொண்டே இருக்க போகிறோம்? என்னதான் விடுதலைக்கு வழி?

இந்த சாதி மத பிரச்சினைகளுக்கு நாம் செலவழிக்கும் நேரத்தையும், வீரியத்தையும் வேறொரு நல்ல ஆக்க சக்திக்கு உபயோகித்து இருந்தால்....? ஆனால் முடியவில்லையே. கழுகுபோல் எப்போது கவிழ்வோம் என காத்துகிடக்கும் அடிப்படைவாத மதவெறி பிடித்த மூடர்களிடம் இருந்து நம் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டுமே. வாழ விடாமல் சான் ஏறினால் முழம் சருக்கிய கதையாகவே இருக்கிறது.

கவனத்தை தளர்த்தாமல், விழிப்புடன் திட்டமிட்டு செய்ல்படுவோம்.

Gopalan Ramasubbu said...

//ஆணும், பெண்ணும் சமமாக வாழும் நிலைகளை போதிப்பவை நாட்டார் தெய்வங்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்து கலந்ததால் மக்களின் உணவே தெய்வத்திற்கும் படைக்கப்படுகிறது. ஆடுவெட்டுதல், கோழி அறுத்தல், குரவையிடுதல், பன்றி வேட்டை, சாமியாடுதல் என மக்களின் வாழ்வோடு இயங்குகிறது மண்ணின் மதங்கள். ஆரிய இந்து மதமோ நைவேத்தியம், அபிசேகம், காய்கறி வகை படையல், யாகம் என வேறு ஒரு தளத்தில் இயங்குகிறது.//


Thiru,

Aryans and Dravidians were meat-eaters.Vaishnavism and Saivism had to adopt to vegetarianism to counter the threat of Jainism which was supposedly more peaceful than the equivalent Hindu sects. Brahmins adopted vegetarianism as early as the 11th century!!

thiru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாசிலா!

thiru said...

//Gopalan Ramasubbu said...
Thiru,

Aryans and Dravidians were meat-eaters.Vaishnavism and Saivism had to adopt to vegetarianism to counter the threat of Jainism which was supposedly more peaceful than the equivalent Hindu sects. Brahmins adopted vegetarianism as early as the 11th century!! //

தகவல்களுக்கும் வருகைக்கும் நன்றி ராமசுப்பு.

Hariharan # 03985177737685368452 said...

பகவத் கீதையை விடுங்கள் திரு. இருந்தும் இல்லாமலிரு என்பது மாதிரியான தத்துவங்களைச் தமிழ் மொழியிலேயே பாடல்களாக வாழ்வியல் தத்துவங்கள் சொன்ன பண்டைய தமிழ்ச் சித்தர்கள் தமிழர்களா? வந்தேறிகளா? ஆரிய மாயையில் மாட்டிக்கொண்டுவிட்ட பார்ப்பன அடிவருடிகளா தமிழ்ச் சித்தர்கள் என்கிற எத்தர்கள்?

அசுரன் said...

//
இன்று நாட்டார் வழக்கியல் தெய்வங்களையும், மண்ணின் மக்களின் மதங்களையும் பார்ப்பனீய இந்து மதமாக்க நடக்கும் முயற்சி தான் "அனைவரும் இந்துக்கள்" என்ற கூப்பாடு. சனாதான தர்மம், பிராமண மதம், என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த பார்ப்பனீய மதம் பார்ப்பனீய சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டியே வந்திருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமதம் என்ற புதிய கவர்ச்சி பெயருடன் எல்லோரையும் பார்ப்பனீய கருத்துக்களில் அடக்கும் முயற்சி துவங்கியது. குறைந்த எண்ணிக்கையிலான பார்ப்பனீய "இந்துத்துவ" கொள்கையை அடைய கூலிப்படைகளாக பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களை பயன்படுத்துவது தான் இந்துமத போர்வையில் இணைப்பு முயற்சி.//

Very Good one!!

Sivabalan said...

.//எது நடந்ததோ அது பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு சாதகமாகவே நடந்தது" என கீதையை திருத்துங்கள //

அருமை... மிக மிக அருமை..

என் மனதில் இது போன்று பல விசயங்கள் ஓடும். இன்றும் கூட பத்திரிக்கை துறையில் ஆதிக்கம் செலுத்தி தனக்கு சாதகமானவற்றை மக்கள் மனதில் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

தொடரட்டும் உங்கள் மேலான பணி!

தருமி said...

// "இந்து" என சொல்லப்படுவது பார்ப்பனீய வைதீக மதம். பெரும்பான்மையான இந்திய மக்கள் பல விதமான மண்ணின் தெய்வங்களை (நாட்டார் வழக்கியல் தெய்வங்கள்) வழிபட்டு வருகின்றனர். அவர்களது வாழ்வியல், தெய்வ வழிபாட்டு முறைகள் பார்ப்பனீய இந்து மதத்திலிருந்து வேறுபட்டது.//

உடன்பாடே..

Anonymous said...

ஜீவன் - ஈழம்

உங்கள் ஆய்வுக் கருத்துக்கள் நன்றாகவே உள்ளன. அவ்வாறெனின் நாம் எந்த சமயத்தை சார்ந்தவர்கள். சைவமா வைணவமா? குழப்பமாக இருக்கின்றது. விளக்கமாக கூறவும். ஆனாலும் இந்த விடயங்கள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும். மேலும் மனு நீதி பற்றி நிறைய கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பாகவும் உங்கள் கருத்துக்களை சொல்லவும்.

Ramesh.R said...

நண்பரே.. பகவத் கீதையை விமர்சிக்கும் தாங்கள் அதனை முழுமையாகப் பொருள் உணர்ந்து படித்திருக்கிறீர்களா?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com