Friday, January 19, 2007

கீதையின் தர்மம்!

கீதை பற்றி உறவினர் ஒருவர் "கீதையை கிருஷ்ணன் தானே எழுதினார்." என்றார். பெரும்பாலானவர்கள் கீதையை கிருஷ்ணன் எழுதியதாக அல்லது கிருஷ்ணன் சொல்ல யாரோ அருகிலிருந்து எழுதியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் யார்? கிருஷ்ணனை எப்போது பார்ப்பனீயம் தெய்வமாக வழிபட துவங்கியது என்பதை கடந்த பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் கீதை உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பான வரலாற்று நூலா என்பதை பார்க்கலாம்.

மகாபாரத கதைகள் புனையப்பட்ட பின்னரே கீதை எழுதப்பட்டு இடையில் புகுத்தப்பட்டது. புத்தனின் நெறியால் பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மை ஆட்டம் கண்டு இருந்த காலமது. மக்கள் முதல் மன்னர்கள் வரை புத்த சங்கங்களில் இணைந்து புத்த நெறியை பரப்பிய வண்ணமிருந்தனர். தங்களது ஏகபோக ஆதிக்கத்திற்கு முடிவு ஏற்பட்டுவிடுமென்பதை உணர்ந்த புரோகித தொழில் செய்தவர்கள், ஆதிக்கத்தை தக்கவைக்க பல வழிகளை உருவாக்கினர். புத்த சங்கங்களில் ஊடுருவி அதன் மூலம் செல்வாக்கை பெருக்கி புத்த நெறியில் பார்ப்பனீய அடையாளங்களையும், வழிபாட்டு முறைகளையும் புகுத்தினர். இந்த கொடுமைகளை எதிர்த்த மன்னர் தூக்கத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அம்மன்னனை கொலை செய்தவர்கள் புரோகித கூட்டத்தினர். மெல்ல மீண்டும் அதிகாரங்கள் மீண்டும் புரோகிதர்கள் கைககளில் வர துவங்கியது. மன்னர்கள் பல வழிகளில் மாற்றப்பட்டு மீண்டும் பார்ப்பனீய மதத்திற்கு ஆதரவு வழங்கினர். இந்த சூழலில் புத்த மார்க்கத்தின் புரட்சிகர கருத்துக்களால் கவரப்பட்ட இளைஞர்களை கவரும் விதமாக கவிதை நடையில் எழுதப்பட்டது தான் கீதை. இப்படி புத்தன் உருவாக்கிய நெறிக்கு எதிராக கீதை எழுதப்பட்டு மகாபாரதக் கதையில் இடைச்சொருகப்பட்டது. தொடர்ந்து புரோகித கூட்டத்தினர் வர்ணாஸ்ரம தர்மத்தை காக்க கீதையின் வழி முயற்சி தொடர்ந்தது.

புராணக்கதைகளுக்கும், வரலாற்றிற்கும் வேறுபாடுகள் ஏராளமுண்டு. வரலாறு என்பது பலவிதமான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது. கிருஷ்ணன் பர்வத மலையை தூக்கினார் என்பதற்கு எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டது? தங்கள் பக்கம் மக்களை திரட்ட மதங்களுக்கு கட்டுக்கதைகளும், அவதாரங்களும் தேவைப்படுகிறது. மக்களை நம்ப வைப்பதற்காக தங்கள் அவதாரங்கள் மிகவும் வல்லமையுள்ளவர்கள், மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர்கள் என மிகைப்படுத்தல் கதைகள் அவசியமாகிறது. அவதாரங்கள் ஒரு துரும்பை கூட தூக்க இயலாதவர் என கதைகள் புனைந்தால் அவற்றை யாரும் கடவுளாக வழிபடமாட்டார்கள். அதனால் தான் அணில், குரங்கு முதல் மனித அவதாரமாக சொல்லப்படுகிற கிருஷ்ணன் வரை மிகைப்படுத்தல்கள் தேவைப்படுகிறது. இந்த மிகைப்படுத்தல் தான் புராணக்கதைகளின் சிறப்பு. ஹாரிபாட்டர் நாவலை படிக்கும் ஒருவர் மனதில் எப்படி கிளர்ச்சியை, வேகத்தை உருவாக்குமோ அப்படியே இந்த கதைகளும் கற்பனை உலகில் உலாவ வைக்கலாம் ஆனால் நிஜவாழ்க்கைக்கு எந்த பலனுமில்லை. கிருஷ்ணன் பற்றிய புராணகதைகளுக்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆரியர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் நடந்த யுத்தங்களை வைத்து கற்பனை கதைகளையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கி பின்னப்பட்ட நூல்கள் தான் கீதை, மகாபாரதம், இராமாயணம் போன்ற அனைத்தும். இந்த கதைகளை பலர் நம்பினாலும் இந்த ஆதாரங்கள் இல்லாத நம்பிக்கைகளை வரலாறாக ஒப்புக்கொள்ள இயலாது.

வரலாறு என்பது நிச்சயமில்லாத அனுமானங்களை மையமாக வைத்து சுழல்வதல்ல. வரலாறு அடைப்படையான ஆதாரங்களை உள்ளடக்கியது. சிந்து சமவெளி நாகரீகம் இருந்தது என்பதும், அது எப்படி இருந்தது என்பதற்கும் வரலாற்று ஆதாரங்கள் உண்டு. அதற்கான தொல்பொருள் துறை சான்றுகள் பல இருக்கின்றன. ஒருவனது நம்பிக்கை இன்னொருவனது அடிப்படையான வரலாற்று இருப்பினை கேள்வி எழுப்ப இயலாது. வரலாற்று அடிப்படையில் அந்த நம்பிக்கை உண்மையா என சரிபார்ப்பது தான் அறிவுள்ளவர்கள் செய்யும் பணியாக இருக்க இயலும். வரலாற்றிற்கு முக்கியமான அடிப்படை இது.

உதாரணமாக; உங்கள் வீடு இருக்கும் இடத்தில் தான் எனது தாத்தாவின் குலதெய்வம் புதைந்து கிடக்கிறது என்பது என் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் எனது நம்பிக்கையை மட்டும் வைத்து உங்கள் வீட்டை இடித்து நிலத்தை தோண்டி குலதெய்வத்தை தேட இயலாது. அதற்கு எந்த அடிப்படையான ஆதாரமும் இல்லை. அது நம்பிக்கையாதலால் தோண்டி பார்க்க வேண்டுமென்னும் போது பிரச்சனை ஆரம்பித்துவிடுகிறது. நமக்குள் பிணக்குகளின் ஆரம்பமே இங்கு தான் துவங்குகிறது.

இராவணனுக்கு பத்து தலை, பிள்ளையாருக்கு யானை முகம், கீதையை கண்ணன் அருளினார் என்பதெல்லாம் நம்பிக்கை அடிப்படையிலானது. நம்பிக்கைகளுக்கு ஆதாரமில்லை. கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு பிடித்த யாராவது அருகில் இருப்பது போல நினைக்கும்போது, அந்த நினைப்பிலேயே அவர்கள் இருப்பதாக தெரியும். கண்ணை திறந்து பார்த்தால் அவை அனைத்தும் காணாமல் போகும். பார்ப்பனீய "இந்துமதத்தின்" அடிப்படைகளுள் ஒன்று இந்த மாயை தத்துவம். மாயை என்பது அடிப்படை ஆதாரமற்ற fantacy. கீதையும் இப்படியான மாயையை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது.

மனித இனத்திற்கு வரலாற்றையும், புராண கற்பனைக் கதைகளையும் பிரித்து அறியும் தன்மை மிக அவசியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்திய மக்களின் விடுதலைக் குரலுக்கு இந்த வேறுபாடு தான் மிகமுக்கியமானது.

காந்தியார் கீதையை அதிகம் நேசித்தவர் என்பது உலகறிந்த உண்மை. பகவத்கீதை பற்றி காந்தியார் "1888-1889ல் முதன் முதலாக கீதையை நான் அறிய நேர்ந்த போது அது ஒரு வரலாற்றுடன் தொடர்புடைய படைப்பல்ல என்பதை உணர்ந்தேன். உண்மையான போர்க்களத்தில் நடந்தது என்ற பெயரில், மனிதர்களின் இதயத்தில் நிகழ்ந்த இருவேறு வகைப்பட்ட எண்ணப் போராட்டங்களின் புனைந்துரைதான் அவ்வாறு வர்ணிக்கப்பட்டது" என்றார்.

கற்பனையாக புனையப்பட்ட ஒரு உரையாடலை புனித புத்தகமாக்கி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பார்ப்பனீய பண்பாட்டு படையெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். இந்த "புனித புத்தகம்" தான் பசுக்களை காப்பாற்றும் வேளை தலித்மக்களை கொன்று குவிக்க இந்துத்துவவாதிகளால் பயன்படுத்தபடுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளுக்கு கீதையையும், கீதையின் மாயையான வார்த்தைகளை முன்வைத்தும் இந்திய மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனீய ஆதிக்கத்தை மூடிமறைக்கிறார்கள். பொருள் சார்ந்த வாழ்க்கையில் இருந்து உறவுகளையும், மனஅமைதியையும் தேடி அலையும் மேற்கத்திய மனிதர்கள் பலர் கீதையின் மாயையில் மயங்கி அலைந்து வழங்கும் நன்கொடைகளும், பொருட்களிலும் பார்ப்பனீய மடங்களும், இந்துத்துவ கொலைபாதக கொள்கையும் மீண்டும் பரப்பப்படுகிறது.

'யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்ப்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"

(பகவத்கீதை அத்தியாயம் 4 - ஸ்லோகம் 7)

yadaa yadaa hi dharmasya glaanirbhavati bhaarata .
abhyutthaanamadharmasya tadaatmaanaM sR^ijaamyaham.h .. 4\.7..

"பாரதா! எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குமோ, அப்போது நான் அவதாரமெடுப்பேன்" இது தான் மேற்காணும் கீதை வாக்கியத்தின் பொருள்.

மேலோட்டமாக இதை படிக்கும் அனைவரும் இந்த வார்த்தைகளில் மயங்கி விடுவதுண்டு. இதில் என்ன குறை? அதர்மத்தை அழித்து, தர்மத்தை உருவாக்க கண்ணன் அவதரிப்பது சரிதானே என கேட்கலாம். ஆனால் கீதை எதை தர்மம் என்கிறது? எதை அதர்மம் என்கிறது? எதற்கு அவதாரம்?

கீதைக்கு உரை எழுதியும், பாண்டிச்சேரியில் ஆசிரமம் வழி கீதையை பரப்பியவருமான அரவிந்தர், "ஆண்டவன் தர்மத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்துவருவது என்பது பெரிதும் பயனற்ற ஒன்றாகும். சர்வசக்தி படைத்தவனான கடவுள் அதன்மூலம் (கடவுளின் சக்தி மூலமே) நல்லதை, நியாயங்களைக் காப்பதையும், நல்லவைகளைப் போற்றுவதையும் செய்யலாமே" என்றார்.

அவதாரம் என்பது என்ன? வேடம் கொண்டு வருவது. கடவுள்களுக்கு எல்லாம் கடவுளும் சகல வல்லமையும் பொருந்தியவர் தான் கிருஸ்ணன் என்கிறார்கள். அப்படியான வல்லமை பொருந்தியவருக்கு மாறுவேடங்களின் அவசியமென்ன? இந்த மாறுவேடங்களின் பின்னால் ஏதாவது அறநெறிகள் உண்டா? பாபர் மசூதியை இடித்த பின்னர் இந்துத்துவவாதிகள் அனுமார் பாபர்மசூதி கட்டிடத்தின் மீது நின்றதாக கதையளந்தார்கள். நீதிமன்றத்தையும், மக்களாட்சி அமைப்பையும் மதிக்காமல் காலித்தனத்தை நிறைவேற்றிவிட்டு பழியை ஒரு சாதாரண குரங்கு மீது சுமத்திவிட்டு தப்பிக்கும் மதவெறி முயற்சி இது.

தர்மம் எது, அதர்மம் எது என பிரித்து பார்க்கலாம். இன்றைய உலக நடைமுறையிலான தர்மம், அதர்மம் பற்றிய வரைமுறை ஒன்று. கீதையில் சொல்லப்படுகிற தர்மம், அதர்மம் வேறொரு வகை.

கீதையில் "நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன். நான் நினைத்தாலும் அவற்றை மாற்ற இயலாது' எனவும் 'பெண்களும், சூத்திரர்களும் பாவமான யோனிலிருந்து பிறந்தவர்கள்' என்னும் கீதையின் வாக்கியங்களோடு 'கீதையின் தர்மத்திற்கு' தொடர்பு உண்டு. நான்கு வர்ணங்கள் அடிப்படையில் மனிதனை பிரித்து இழிவுநிலையை புகுத்தியதே பார்ப்பனீயம். அந்த பார்ப்பனீய தத்துவத்தை கடவுளாகிய தானே படைத்ததாக கூறுகிறார் கிருஷ்ணன். அதில் பாவநிலையில் பிறந்தவர்கள் என இழிவும் புகுத்தப்பட்டுள்ளது.

கீதையில் சொல்லும் தர்மம் வர்ணாஸ்ரம (சனாதான) குலதர்மம். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என மனிதர்களை நான்கு வகையினராக பிரித்து ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு நீதியை உருவாக்கிய மனுதர்ம சாதி ஆதிக்க தர்மம் தான் கீதையின் தர்மம். கீதையில் சாதி வேறுபாடு இல்லை என்பவர்கள் ஆதாரங்களை காட்டுகிறவர்கள் மீது பாய்கிறார்களே தவிர, ஆதாரத்திற்கு பதில் சொல்வதில்லை. "பார்ப்பனீய புனிதகீதையில்" சாதி இல்லை எல்லோரும் சமம் என்றால் சிதம்பரம், காஞ்சி, திருப்பதி, ஸ்ரீரங்கம் தொடங்கி வடஇந்தியா வரை கோயில் கருவறைகளில், இந்து கோவில்களில் ஆதிக்கசாதியினர் தவிர மற்றவர்களுக்கு "தீட்டு" இருப்பது ஏன்? இது தான் கீதையின் தர்மமா? இல்லை இதை கடைபிடிப்பவர்கள் இந்துக்கள் இல்லையா? இந்த அதர்மத்தை அழிக்க எந்த கண்ணன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து வருவான்? கீதையின் தர்மம் கோவில்களின் புனிதம் காப்பது என்ற பெயரில் பெண்களை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை "தீட்டு" என ஒதுக்கி வைப்பது. பீஅள்ளுதல், கல்லுடைத்தல், தெளுவிறக்குதல் என பரம்பரை அடிமைகளாக செய்ய வைக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து விடுபட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னேற இடப்பங்கீடு உரிமை அளித்தால் அதற்கெதிராக நீதி அமைப்புகளை மிரட்டுவது, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்துவது தானா கீதையின் தர்மம்? "நாயும், பூனையும் நிமிர்ந்து நடக்கும் தெருக்களில் மனிதனை மட்டும் கூனிகுறுகி நடக்க வைக்கும்" சாதி சனாதான கொடுமை தான் தர்மமா? இந்த தர்மம் எப்போது மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் கிருஷ்ணன் குலதர்மம் காக்க அவதரிப்பார். ஆதிக்கசாதியினருக்கு சாதகமான தர்மத்தை காப்பாற்ற தான் கிருஷ்ணனின் கீ(க)தை உரையாடல்.

ஆனால் இந்திய நாட்டின் தர்மம் வேறு. அது மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சட்டங்களுக்குள் இயங்க வேண்டிய தர்மம். இந்திய சட்டப்படி தீட்டு என்பது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். கிருஷ்ணனின் மதுரா கோவில் முதல் கிராமங்களில் இருக்கும் பார்ப்பனீய கோவில்கள் வரை இந்த தீட்டு அர்ச்சகர் உரிமை வடிவில் இருக்கிறது. இந்திய சட்டமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் அளவு மனுதர்மத்தின் ஆதிக்கம் வலுவானது.

ஒடுக்கப்பட்ட மக்களே! "எங்கெல்லாம் மனித தர்மம் தலைதூக்குமோ அங்கெல்லாம் மனுதர்மத்தை காக்க அவதாரம் எடுப்பேன்" என கீதையை திருத்திபடியுங்கள்.
______

கீதை பற்றிய முந்தைய கட்டுரைகளை படிக்க: கீதையின் அடிமைக் கட்டுகள்!, சாதிமுறை பற்றி கீதை! பகவத்கீதை: யாருடைய புனிதநூல்?

23 பின்னூட்டங்கள்:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஆனால் இந்திய நாட்டின் தர்மம் வேறு. அது மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சட்டங்களுக்குள் இயங்க வேண்டிய தர்மம். இந்திய சட்டப்படி தீட்டு என்பது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். கிருஸ்ணனின் மதுரா கோவில் முதல் கிராமங்களில் இருக்கும் பார்ப்பனீய கோவில்கள் வரை இந்த தீட்டு அர்ச்சகர் உரிமை வடிவில் இருக்கிறது. இந்திய சட்டமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் அளவு மனுதர்மத்தின் ஆதிக்கம் வலுவானது.

Either you dont know what Constitution of India says
or you wantonly distort
facts.Constitution prohibits
untouchability and restriction
of entry into temples to dalits.
Entry into sanctum sanctorum
has nothing to do with this.
There are non-brahmin priests
and in such temples brahmins
cannot enter sanctum sanctorum.
Not even Shakaracharya can enter
sanctum sanctorum in such temples.
But just like your mentor Periyar
you are making allegations that
are false and misleading.Of course you also have little respect for facts.
Is Bhavat Gita the only text that
has problems on account of its biases.Is Tirukurral a progressive
text.

thiru said...

//Either you dont know what Constitution of India says
or you wantonly distort
facts.Constitution prohibits
untouchability and restriction
of entry into temples to dalits.//

சட்டம் இருப்பது பாமரனுக்கும் தெரியும் ரவி!

சட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

//Entry into sanctum sanctorum
has nothing to do with this.
There are non-brahmin priests
and in such temples brahmins
cannot enter sanctum sanctorum.
Not even Shakaracharya can enter
sanctum sanctorum in such temples.//
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை எதிர்ப்பதும், அதற்கு கைக்கூலு கூட்டத்தை பயன்படுத்துவதையும் திசைதிருப்பாதீர்கள். இங்கு பிராமணர்களை திட்டுவதல்ல என் நோக்கம். கீதை பார்ப்பனீயத்தை கட்டிக்காக்கிறதா இல்லையா என்பது தான் விவாதப்பொருள். இதுபற்றிய பதில் இருப்பின் சொல்லுங்கள்.

//But just like your mentor Periyar
you are making allegations that
are false and misleading.Of course you also have little respect for facts.//
எனக்கு பெரியார் ஆசான் என உங்களுக்கு யார் வழியாக தெரியும்? அப்படியே இருப்பின் அதில் என்ன தவறு? முன்முடிவுகளை விலக்கிவிட்டு பதிவை ஒட்டிய கருத்துக்களை மட்டும் படியுங்கள், உண்மையின் ஆழம் புரியும்.

//Is Bhavat Gita the only text that
has problems on account of its biases.Is Tirukurral a progressive
text.//

இங்கு ஒப்பிடுவதல்ல என் நோக்கம். திருக்குறள் பற்றி எந்த பதிவிலும் இதுவரை வாதிடவில்லை. கீதையில் இருக்கிறதா இல்லையா என்பதே கேள்வி! இருந்தால் திருத்தி படிப்பதில் என்ன தவறு? மாற்றம் மானிட வாழ்விற்கு அவசியம். 'மாற்றம்' என்ற ஒன்றைத் தவிர எல்லாம் மாறும். கீதையும் மாறும்!

கோவி.கண்ணன் [GK] said...

திரு,

பகவத் கீதையை ஆழமாக கற்ற அம்பேத்கார் 'கீதை மகாபாரத கதையின் இடைச் சொருகல்' என்றும் 'சுலோக அமைப்புகளில் வேறு பாடு இருப்பதால் ஒருவரே எழுதப்பட்டது அல்ல அதுவும் சமகாலத்தில் எழுப்பட்டதல்ல' என்றும் சொல்கிறார்

போர் நடக்கும் முன் 18 அத்யாயங்கள் வரை கீதை உபதேசம் நடந்து கொண்டிருந்த போது இரண்டு பக்கத்தில் இருந்த படைகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. யாராவது கீதை நன்கு தெரிந்தவர்கள் தான் இதுபற்றி விளக்கவேண்டும்.

ரவி said...

:)

சிறில் அலெக்ஸ் said...

//மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர்கள் என மிகைப்படுத்தல் கதைகள் அவசியமாகிறது. அவதாரங்களள ஒரு துரும்பை கூட தூக்க இயலாதவர் என என கதைகள் புனைந்தால் அவற்றை யாரும் கடவுளாக வழிபடமாட்டார்கள். //

இது எல்லா கடவுள்களுக்கும் பொருந்தும்.

மாயா பற்றிய விளக்கம் மேலோட்டமானது அதுக்கு இன்னும் ஆழமான அர்த்தம் இருக்கிறது என நினைக்கிறேன். (நான் அறிந்தவரையில்). அதை ஒரு மெய்யியல் கொள்கையாக எடுத்துக்கொள்ளலாம்.

Matrix படத்தில் கையாளப்பட்டிருக்கும் கதை மாயாவின் அடிப்படையிலானது.

இன்னுமொன்று.. எல்லா புனித புத்தகங்களும் நல்லதையும் கெட்டதையும் சொல்கின்றன. அவை பழங்காலத்திலே எழுதப்பட்டிருக்கின்றன. 60 வருடங்களுக்கு முந்தின அரசியலமைப்புச் சட்டத்தையே திரும்ப எழுதச் சொல்றாங்க...

இந்த மத நூல்களிலிருந்த்உ நல்லவற்றை மட்டுமே எடுத்து வாழும் மக்களும் இருக்காங்க.. கெட்டதப் புடிச்சிகிட்டு அல்லாடுறவர்களும் இருக்காங்க.

ஒரு சில கூறுகளுக்காக ஒட்டுமொத்தத்தையும் நிராகரிக்க முடியாது என்பதே என் கருத்து.

கலை said...

&&"ஆண்டவன் தர்மத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்துவருவது என்பது பெரிதும் பயனற்ற ஒன்றாகும். சர்வசக்தி படைத்தவனான கடவுள் அதன்மூலம் (கடவுளின் சக்தி மூலமே) நல்லதை, நியாயங்களைக் காப்பதையும், நல்லவைகளைப் போற்றுவதையும் செய்யலாமே" என்றார்.&&

இதை வாசிக்கும்போது, எனக்குள் அடிக்கடி எழும் கேள்விதான் நினைவுக்கு வருகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவன் எதற்கு தீயவைகளை, தீயவர்களை உருவாக்கி அல்லது படைத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் படைத்த ஆண்டவன், எல்லாமே நல்லதாக படைத்திருக்க கூடாதா? எதற்கு தீயவற்றையும் உட்புகுத்தினார்.

ஆதாம், ஏவாள் ஆப்பிள் சாப்பிட்டு எல்லாம் மாறிப் போனதிலும்கூட எனக்கு இதே கேள்வி உண்டு. பிரச்சனை தரும்படியான நிலமையை ஏன் ஆண்டவர் ஏற்படுத்தினார்? அப்படி ஏற்படுத்தியதன் நோக்கம் (பின்னணி?) என்னவாக இருக்கும்?

தவிர எனது கடவுள்தான் உண்மையான கடவுள், எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்பவர்களிடமும் எனக்கு இதே கேள்வி உண்டு. அப்படி எல்லாம் வல்ல கடவுள், எதற்கு வேறு மதங்கள், (கடவுள்கள்) உருவாக அனுமதித்தார். அனுமதித்துவிட்டு, அதன்மூலம் இத்தனை கலவரங்களுக்கும் வழிவகுத்ததன் நோக்கமென்ன?

Sivabalan said...

திரு,


//மனித இனத்திற்கு வரலாற்றையும், புராண கற்பனைக் கதைகளையும் பிரித்து அறியும் தன்மை மிக அவசியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்திய மக்களின் விடுதலைக் குரலுக்கு இந்த வேறுபாடு தான் மிகமுக்கியமானது. //


மிகச் சரியாக சொன்னீர்கள்..

மிக நன்று

G.Ragavan said...

கீதையை நான் படித்ததில்லை. அது உண்மையிலேயே வருணாசிரமக் கொள்கையை தூக்கி நிறுத்துகிறதா என்று தெரியாது. அப்படிச் செய்யுமானால் அது தவறே. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.

இந்தப் பதிவிற்கும் சமீபத்தில் நான் இட்ட 2007லாவது மாற வேண்டும் திருக்கோயில்கள் என்ற பதிவிற்கும் ஒரு தொடுப்பு இருப்பது போலத் தெரிகிறது.

ரவி ஸ்ரீநிவாஸ் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிச் சொன்னார். இருக்கலாம். ஆனால் செயற்பாட்டு முறை? இன்றைக்கும் கோயிலில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று பதிவிட்டாலே எதிர்ப்பு வருகிறது. பக்தியோடு செய்ய மாட்டார்கள் என்று விளக்கங்களும் வருகின்றன.

சங்கராச்சாரியாரால் சில கோயில்களில் உள்ளே போக முடியாது. சரி. பழைய கட்டுப்பாடுகள். சரி. அப்படியென்றால் முருகனுக்கு ஆடு வெட்டிக் கொண்டாடியதாக...முருகனுக்கு மட்டுமென்ன...கொற்றவைக்கும்தான்...சிலப்பதிகாரமும் திருமுருகாற்றுப்படையும் சொல்கின்றனவே. அது இன்னும் பழைய நூல்கள். அப்படியே செய்வோமா? மாயனுக்கு மீனை வைத்தார்களே...மாயனை வடமதுரை மைந்தனை வெண்ணை உண்ணனை மீனுண்ணியாக்கலாமா? தனியார் கோயில்கள் பொதுக் கோயில்கள் என்று பார்க்க வேண்டும் ரவி. தனியார் கோயில்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் செல்வர். அதே போல பொதுக் கோயில்களையும் மாற்றி விடலாமா? மற்ற சாதியினர் எல்லாம் அங்கே செல்ல வேண்டாம் என்று கூறி விடலாம்.

சிறில் சொல்வது போல, எல்லா மத நூல்களிலும் இந்த மிகைப்படுத்தும் விளக்கங்கள் உண்டு. ஹாரிபாட்டர் லார்டு ஆப் தி ரிங்கஸ், ஒடிசி, ட்ராய் எல்லாம் கொடுக்கும் அந்தப் பிரம்மாண்டம் இங்கும் கிடைக்கும். கதைக்குள் இருக்கும் நல்லதை மட்டும் கொண்டால் நன்று.

பிறப்பால், உழைப்பால், சாதியால், வேலையால், மதத்தால் வேறுபாடுகள்...இதற்கு எந்த மதநூல் ஒத்தூதினாலும் அது தவறுதான். தவறுதான். தவறுதான்.

Anonymous said...

mikavum porumaiyaaka (ennaippool sudaamal!!) arraywthu eluthikiriirkal. anaiththiyum padiththuvitteen, nandri!

வடுவூர் குமார் said...

இந்த மத நூல்களிலிருந்த் நல்லவற்றை மட்டுமே எடுத்து வாழும் மக்களும் இருக்காங்க.. கெட்டதப் புடிச்சிகிட்டு அல்லாடுறவர்களும் இருக்காங்கஇப்படி சொன்ன திரு சிறில் அலெக்ஸுடன் உடன்படுகிறேன்.
எப்போதோ நடந்தது அதை எழுத்துவடிவில் உள்ள வரிகளை இன்றும் செயல்படுத்த் முனையக்கூடாது.தேவையானால் எடுத்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் மூடி வைத்துவிட்டு வேறு வேலையை பார்க்கவேண்டும்.
அன்றிருந்த நிலமை வேறு இன்று நாம் வாழும் முறை வேறு.
நாளை நம் மக்கள், சமுதாயத்துக்கு என்ன தேவை என்று அறிந்து வாழ முற்படவேண்டும்.
நம் மூளையை பற்றியே இன்னும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சமயத்தில்,எப்போதோ எழுதிய புத்தகத்தை பிரித்துவைத்துக்கொண்டு இன்றைய வாழ்கையை வாழ முற்படக்கூடாது என்பது எண்ணம்.
இந்த இடைசெருகல் எல்லா மத புத்தகங்களிலும் உள்ளது.வாய்வழியாகவே வந்த இந்த விபரங்கள் இவ்வளவு தூரம் வந்ததே அதிசியம்.
மற்றபடி "பார்பனீயம்" பற்றி மறைமுகமாக விமர்சிக்கும் பதிவு என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இது வெறும் கருத்து மட்டும் தான்,தயவு செய்து உங்களை தாக்குவதாக எண்ணவேண்டாம்.
அது என்னுடைய எண்ணமும் இல்லை.

Anonymous said...

கண்ணைக்கட்டிக் கொண்டு தேடினால், தேடும் பொருள் கிடைக்காது!
இதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்ற புலம்பல் வேறு!

thiru said...

//கோவி.கண்ணன் [GK] said...
திரு,
பகவத் கீதையை ஆழமாக கற்ற அம்பேத்கார் 'கீதை மகாபாரத கதையின் இடைச் சொருகல்' என்றும் 'சுலோக அமைப்புகளில் வேறு பாடு இருப்பதால் ஒருவரே எழுதப்பட்டது அல்ல அதுவும் சமகாலத்தில் எழுப்பட்டதல்ல' என்றும் சொல்கிறார்//

உண்மை தான் கோவி. ஒன்றுக்கு இன்னொன்று முரண்பாடாகவும் இருக்கிறது. ஒரே நபரால் எழுத்தப்பட்டிருந்தால் இவை வந்திருக்குமா என்பது கேள்வியே!

//போர் நடக்கும் முன் 18 அத்யாயங்கள் வரை கீதை உபதேசம் நடந்து கொண்டிருந்த போது இரண்டு பக்கத்தில் இருந்த படைகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. யாராவது கீதை நன்கு தெரிந்தவர்கள் தான் இதுபற்றி விளக்கவேண்டும்.//

போர்க்களத்தில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது இது நடக்க வாய்ப்புண்டா என்ற கேள்வி எழுவது நியாயமே.

thiru said...

//செந்தழல் ரவி said...
:)

1/19/2007 02:05:00 PM //

அய்யா இந்த சிரிப்புக்கு பொருள் என்னவோ? :))

thiru said...

//சிறில் அலெக்ஸ் said...
இன்னுமொன்று.. எல்லா புனித புத்தகங்களும் நல்லதையும் கெட்டதையும் சொல்கின்றன. அவை பழங்காலத்திலே எழுதப்பட்டிருக்கின்றன. 60 வருடங்களுக்கு முந்தின அரசியலமைப்புச் சட்டத்தையே திரும்ப எழுதச் சொல்றாங்க...//

புனிதபுத்தகங்களும் காலத்திற்கு ஏற்ப திருத்தப்படவேண்டியவையே!

//இந்த மத நூல்களிலிருந்து நல்லவற்றை மட்டுமே எடுத்து வாழும் மக்களும் இருக்காங்க.. கெட்டதப் புடிச்சிகிட்டு அல்லாடுறவர்களும் இருக்காங்க.//

உண்மைதான். தங்களது மத நூல்களில் அனைத்திற்கும் தீர்வு இருப்பதாக சொல்பவர்களூம் கூடவே...

//ஒரு சில கூறுகளுக்காக ஒட்டுமொத்தத்தையும் நிராகரிக்க முடியாது என்பதே என் கருத்து.//

யாருக்கு, எது தேவை என்பதை பொறுத்தது இல்லையா?

thiru said...

// கலை said...
எனக்குள் அடிக்கடி எழும் கேள்விதான் நினைவுக்கு வருகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவன் எதற்கு தீயவைகளை, தீயவர்களை உருவாக்கி அல்லது படைத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் படைத்த ஆண்டவன், எல்லாமே நல்லதாக படைத்திருக்க கூடாதா? எதற்கு தீயவற்றையும் உட்புகுத்தினார்.

ஆதாம், ஏவாள் ஆப்பிள் சாப்பிட்டு எல்லாம் மாறிப் போனதிலும்கூட எனக்கு இதே கேள்வி உண்டு. பிரச்சனை தரும்படியான நிலமையை ஏன் ஆண்டவர் ஏற்படுத்தினார்? அப்படி ஏற்படுத்தியதன் நோக்கம் (பின்னணி?) என்னவாக இருக்கும்?

தவிர எனது கடவுள்தான் உண்மையான கடவுள், எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்பவர்களிடமும் எனக்கு இதே கேள்வி உண்டு. அப்படி எல்லாம் வல்ல கடவுள், எதற்கு வேறு மதங்கள், (கடவுள்கள்) உருவாக அனுமதித்தார். அனுமதித்துவிட்டு, அதன்மூலம் இத்தனை கலவரங்களுக்கும் வழிவகுத்ததன் நோக்கமென்ன? //

சிந்திக்கவைக்கும் கேள்விகள் கலை.

thiru said...

வருகைக்கு நன்றி சிவபாலன்!

G.Ragavan உங்கள் கருத்துக்களில் உடன்பாடே!

செல்லா (இணைய நாடோடி) முதல் வருகைக்கு நன்றி!

thiru said...

// வடுவூர் குமார் said...
நாளை நம் மக்கள், சமுதாயத்துக்கு என்ன தேவை என்று அறிந்து வாழ முற்படவேண்டும்.
நம் மூளையை பற்றியே இன்னும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சமயத்தில்,எப்போதோ எழுதிய புத்தகத்தை பிரித்துவைத்துக்கொண்டு இன்றைய வாழ்கையை வாழ முற்படக்கூடாது என்பது எண்ணம்.
இந்த இடைசெருகல் எல்லா மத புத்தகங்களிலும் உள்ளது.//

உண்மை தான் நண்பரே! இந்த புரிதல் இருந்தால் உலகில் மதச்சண்டைகளே இருக்காது. உங்கள் பண்பட்ட மனதின் வெளிப்பாட்டில் மெய்மறக்கிறேன்.

//மற்றபடி "பார்பனீயம்" பற்றி மறைமுகமாக விமர்சிக்கும் பதிவு என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இது வெறும் கருத்து மட்டும் தான்,தயவு செய்து உங்களை தாக்குவதாக எண்ணவேண்டாம்.
அது என்னுடைய எண்ணமும் இல்லை.//

இல்லை. ஒரு சார்பினருக்கு புனிதமாக இருப்பது, இன்னொரு சார்பினருக்கு எதிராக இருப்பதை காட்டுவதும்; அதன்ழை சிந்திக்க வைப்பதும் மட்டுமே இந்த பதிவின் நோக்கம். யாரையும் திட்டுவதால் எதுவும் நிகழப்போவதில்லை. நீங்கள் என்னை தாக்குவதாகவும் உணரவில்லை. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!

thiru said...

//ஜீவா said...
கண்ணைக்கட்டிக் கொண்டு தேடினால், தேடும் பொருள் கிடைக்காது!
இதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்ற புலம்பல் வேறு!//

ஜீவா!

நான் கண்ணை கட்டி தேடுவதாகவே இருக்கட்டும். கண்ணை திறந்து வைத்து கண்டறிந்த நீங்கள் என் கேள்விகளுக்கு (தேடல்களுக்கு) விடை தரக்கூடாது?

புலம்பல் அல்ல. என் தேடலில் விளைவான கருத்துக்கள். நீங்கள் கண்ணை கட்டிக்கொண்டா இந்த பதிவை படித்தீர்கள்? புலம்பலாக தெரிய...

பதிலை தாருங்கள் என் கருத்துக்கள் தவறெனில் மாற்றுகிறேன். வருகைக்கு நன்றி!

Unknown said...

//ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் எனது நம்பிக்கையை மட்டும் வைத்து உங்கள் வீட்டை இடித்து பூமியை தோண்டி குலதெய்வத்தை தேட இயலாது. அதற்கு எந்த அடிப்படையான ஆதாரமும் இல்லை. அது நம்பிக்கை என நான் சாதித்தால் நமக்குள் பிணக்குகள் தான் அதிகரிக்கும்//
'எங்கள் நம்பிக்கைக்கு மாறாக சட்டமும் நீதித்துறையும் எதுவும் சொல்லாது. அப்படிச் சொன்னால் அதை நாங்கள் மதிக்கப் போவதில்லை' என்று சொல்பவர்களிடம் இதைச் சொன்னால் புரியவா போகிறது.

//பாபர் மசூதியை இடித்த இந்துத்துவவாதிகள் அனுமார் பாபர்மசூதி கட்டிடத்தின் மீது நின்றதை காணமுடிந்ததாக சொன்னார்கள்.//
ஆமாம். நான் கூட வீடியோவில் பார்த்தேன்.
ஒன்று இல்லை. ஒரு கும்பலாக வெறியோடு நின்று கொண்டிருந்தன. ஆனால் அவை துணி உடுத்தியிருந்தன. அவற்றில் பல உடைப்பதற்கான ஆயுதங்களும் வைத்திருந்தன. யாரோ சில கேடு கெட்ட மனிதர்களுக்கு ஏவல் செய்வதைப் போலிருந்தன. அவற்றில் சில செத்தும் மடிந்தன.

சுந்தரவடிவேல் said...

திரு,
புதிய நிறம் கண்ணை உறுத்துகிறது :))

sundar said...

The most powerfull weapon in this world is conspiracy.

Bhagavat geethai is one of such a conspiracy which is a set of code and standards used on the original people of india

this is to ensure and maintain the aryians domination on this people.

the best platform to showcase this conspiracy is the people's mind
that is why bhramins they keep the people with full of fear and guilty feelings so that rest of the people will suordinate to bhramins
even in this modern age also they insisting these codes/standards for their absolute selfishness.Mankind must be liberated from this sinister minded people policies
Other than blacks and whites division,no other places in this world discriminated thier fellow people by birth in the name of cast.
sundar

Thamizhan said...

கீதையை அரைகுறையாகப் படித்துவிட்டும் படிக்காமலேயே ஆடுவோரின் ஆர்ப்பாட்டந்தான் பெரிதாக இருக்கிறது.மொழி பெயர்ப்பாளர்களும் வச்தியாக மறைத்தும் மாற்றியும் எழுதியுள்ளனர்.தர்மம் என்பது கீதையின் படி வர்ணாஷ்ரம நால்வருண தர்மம்,கொலை செய்யலாம் அதற்கு நல்ல(வக்கீல்)கதை மட்டும் சொல்லித் தப்பிக்க வேண்டும்,பெண்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தலாம்
மந்திரத்தின் பெயரால் எப்படி மற்றவர்களை மடையர்களாக்கலாம் என்பதையெல்லாம் மக்கள் படிக்க வேண்டும்.அவர்கள் சொல்வது போலக் குருட்டு நம்பிக்கையுடன் அல்ல,கொஞ்சம் சிந்திக்கும் மனத்துடன் இது எதற்காக யாரை மடையர்கள் ஆக்குவதற்காக எழுதப்பட்டது என்ற திறந்த கேள்விகளுடன்.
நன்கு வெளிக்கொணர்ந்துள்ளமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.

Anonymous said...

வணக்கம்,
ஓஷோ வின் பகவத் கீதை ஒரு தரிசனம் என்ற நூலில் சில பதில்கள் உள்ளன.
நன்றி.
சிவா.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com