Monday, January 15, 2007

பொங்கல் சிறப்பு வாரம்!

அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்!


பொங்கலுக்கு வாழ்த்தி, வரவேற்க வெற்றிலை, பாக்கு, பழங்கள் இல்லாத நாட்டில் இருப்பதால் பறை முழக்கத்துடன் வரவேற்கிறேன். (கேட்க இங்கே அழுத்தவும்)

2002 முதல் இரண்டு மன்றத்தில் சமூகம், அரசியல், சுற்றுச்சூழல், மனித உரிமை என பல பிரச்சனைகளை பற்றி எழுத, விவாதிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து படித்து வந்த நண்பர் ஒருவர் (நமக்கு போய் வாசகர் வேறயா?) "திரு, இந்த நல்ல சிந்தனைகளை உலகம் எங்கும் பரவ நீங்க ஏன் பிளாக் பண்ணக்கூடாது" என அன்பாய் விசாரிக்க. பிளாக்னா என்ன என தேடலில் ஆலமரம், பனித்துளி, சித்திரவாசல், பெரியார் என பல வலைப்பூக்கள் உருவானது.

நம்மை பாதிக்கிற விடயங்களை தொடர்ந்து எழுதி வருகிறேன். வேலைப் பளுவினால் நேரமின்மை, தொடர்ந்த கவனம் செலுத்தாமை என பல காரணங்களால் எழுதுவதில் தடங்கல் வந்து விடுவதுண்டு. வலைப்பூவில் எழுதும் அனுபவங்கள் பலவற்றை கற்றுத்தந்துள்ளது. வலைப்பூவில் எழுதி வருகிற பலரிடமிருந்து நல்ல விடயங்கள் பலவற்றை கற்றுக்கொள்கிறேன். அந்த விதத்தில் எனது படைப்புகளை சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நட்சத்திரமாக முடியுமா என எனக்கு வசதியான நேரம் கேட்டு எதிர்பாராத ஒரு நாளில் தமிழ்மணத்திலிருந்து மின்மடல் வந்தது. அய்யய்யோ! நம்மளையா கூப்பிடுறாங்க?

நாடோடியா அலைந்ததால் நேரம் இல்லாமல் ஆறு மாதங்கள் கடந்தன. இனியும் தள்ளிப்போடுவது சரியல்ல என உங்கள் முன் வந்து நிற்கிறேன். நான் அறிந்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்வேன்.

உழவர்கள் உழைப்பின் உன்னதமான பண்டிகையாம் பொங்கள் சிறப்பு வாரத்தில் நட்சத்திரமாக கிடைத்தது சந்தோசமாக இருக்கிறது. தமிழ்ப்புலவன் திருவள்ளுவர் தினம் இந்த வாரத்தில் அமைவதால் இரட்டிப்பு சந்தோசம்.
காலநிலை மாற்றம், ஈழம், பெண்ணியம், சமூகம், தொழிலாளர், குழந்தை தொழிலாளர், சேகுவேரா, அகதிமுகாம் நிலை, குறும்பேட்டி என பலவற்றுடன் இந்த வாரத்தில் பதிவு செய்வேன். இந்த பதிவுகள் மூலம் சமூகத்தின் அவலங்களையும், நல்லவற்றையும் அடையாளம் காட்ட முனைவேன்.

பொங்கலுக்கு தீமூட்டும் வாய்ப்பை தந்த தமிழ்மணம் நிர்வாகத்திற்கும், எழுத்துக்களை படித்து கருத்துக்களை தருகிற வலைப்பதிவாளர் நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை, கருத்துக்களை பதியுங்கள்!

அனைவர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் சந்தோச, சமத்துவ பொங்கல் பொங்கட்டும்!

பொங்கலோ பொங்கல்!அன்புடன்
திரு

படங்கள் உதவி: வாழ்த்து அட்டை இணையத்தளம்.

27 பின்னூட்டங்கள்:

திரு said...

பதிவுகளை வலையேற்றும் போது ஏதோ தொழிற்நுட்ப கோழாறு. அனுமதிக்காத பதிவுகளும் வலையேற்றப்பட்டன. அவற்றை நீக்கிவிட்டேன். குழப்பத்திற்கு பொறுத்தருள்க!

திரு said...

மலைநாடான் has left a new comment on your post "பொங்கல் நட்சத்திரம்!":

திரு! அட்டகாசமான ஆரம்பம். இவ்வாரத்தில் உங்களிடமிருந்து மேலும் பல சிறப்புக்களை எதிர்பார்க்கின்றேன். இனிய பொங்கல் வாழ்த்துக்களும், நட்சத்திர வாழ்த்துக்களும். சிறு ஆலோசனை. 'ஆலமரம்' எழுத்தை வெள்ளை நிறத்துக்கும், பதிவு எழுத்தைச் சற்றுப் பெரிதாக்குவதும் புதிய அடைப்பலகைக்கு மெருகு சேர்க்குமென நினைக்கின்றேன்.
Posted by மலைநாடான் to ஆலமரம் at 1/15/2007 06:25:00 AM
_________

மலைநாடான் நன்றி! நீக்கிய முந்தைய பதிவில் உங்கள் இந்த பின்னூட்டமும் சிக்கிவிட்டது! :(

கோவி.கண்ணன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள் திரு.

நட்சத்திர வாரத்தில் சிறப்பான ஆக்கங்கள் வரும் என ஆவலோடு இருக்கிறேன்.

மணியன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வார வாழ்த்துக்கள் ! வள்ளுவரை அடையாளயுருவாகக் கொண்ட உங்கள் நட்சத்திரப் பதிவுகள் இவ்வாரம் அமைவதும் பொருத்தமே.

✪சிந்தாநதி said...

பொங்கல் நட்சத்திரத்துக்கு பொங்கும் பொங்கல் நாளில் பொன்னான வாழ்த்துக்கள்!

ஜோ / Joe said...

பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள் திரு.

நட்சத்திர வாரத்தில் சிறப்பான ஆக்கங்கள் வரும் என ஆவலோடு இருக்கிறேன்

நன்றி: கோவியார்

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே

இந்த இனிய பொங்கல் நன்னாளில் இந்த வார நட்சத்திரமாக பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

இந்த வாரம் இனிய வாரமாக திகழ்ந்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.

kanags said...

பொங்கல் வாழ்த்துக்களுடன் நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

அழகு said...

வாழ்த்துகள்!


வாழ்த்துகள்!!


இரண்டிற்கும் சேர்த்து.

செந்தில் குமரன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நட்சத்திரமானதற்கும் வாழ்த்துக்கள். சிறப்பான பதிவுகளை இந்த வாரம் எதிர்பார்க்கிறேன்.

மாசிலா said...

'திரு' ஐயாவுக்கு எனது இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.
இந்த வார நட்சித்திர பதிவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
'பறை' கேட்டு இன்புற்றேன்.
ந்ன்றி.
என்றும்போல், தொடர்க உமது சேவை.
அன்புடன் மாசிலா.

Sivabalan said...

திரு,

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

ஆதிபகவன் said...

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆதிபகவன் said...

உங்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கலை said...

திரு! இந்த வார நட்சத்திர பதிவராகியமைக்கு நல்வாழ்த்துக்கள். கூடவே பொங்கல் நல்வாழ்த்துக்களும்.

உங்களது ஆக்கபூர்வமான ஆக்கங்களை எதிர்பார்த்திருக்கின்றேன்.

திரு said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே! தொடர்ந்து உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்

சின்னக்குட்டி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

யாழ்த்தமிழன் said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் திரு. :)

சேதுக்கரசி said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

சாத்வீகன் said...

பொங்கல் மற்றும் நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

தமிழி said...

அன்புமிகு பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள் திரு.

நட்சத்திர வாரத்தில் சிறப்பான ஆக்கங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

என்றென்றும் அன்புடன்.

தமிழி said...

அன்புமிகு பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள் திரு.

நட்சத்திர வாரத்தில் சிறப்பான ஆக்கங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

என்றென்றும் அன்புடன்.

Dharumi said...

camping at chennai.. so unable to write in tamil. i have read all posts of your star-week till date. will come with comments in tamil later. this is just to congratulate you for the 'stardom'.

congrats....

திரு said...

வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி நண்பர்களே!

வெற்றி said...

திரு,
இனிய [தாமதமான]பொங்கல் வாழ்த்துக்கள்.

அத்துடன், இவ் வார நட்சத்திரமாக ஒளிவீசவும் என் நல்வாழ்த்துக்கள்.

திரு said...

//வெற்றி said...
திரு,
இனிய [தாமதமான]பொங்கல் வாழ்த்துக்கள்.

அத்துடன், இவ் வார நட்சத்திரமாக ஒளிவீசவும் என் நல்வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி வெற்றி!

திரு said...

//வெற்றி said...
திரு,
இனிய [தாமதமான]பொங்கல் வாழ்த்துக்கள்.

அத்துடன், இவ் வார நட்சத்திரமாக ஒளிவீசவும் என் நல்வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி வெற்றி!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com