Tuesday, January 23, 2007

பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!

வழக்கம் போல ராஜாக்கமங்கலம் சந்தை கூட்டமாக இருக்கிறது.

வாழைக்குலைகளும், பாக்கும், வெற்றிலையும், நெல்லும், மரச்சீனி கிழங்கும் விற்கிற கூட்டம்.

'எப்போ இதெல்லாம் விக்குமோ (விற்பனையாகுமோ) ஓல மாடமா இருந்தாலும் மானத்தை மறைச்சிகிட்டு குடிசையில கெடக்கலாம். ஒருத்தரும் வந்து வெலையும் கேக்கெல' என்கிறாள் பச்ச புள்ளைக்கு தாயான முத்தாரு.

சந்தையில தீருவை (ஆயம்/வரி) பிரிக்கிற கிஷன் நாயர் தூரத்தில் வாறார்.

"அய்யோ இந்த பாவி வறானே! இவன் கண்ணு மேயுறது மட்டுமில்ல, இவன் பேச்சும், தொந்தரவும் மனுசனை கொல்லுற மாதிரி இருக்கு. இவன்கிட்ட தப்பிக்க நம்ம சாதி பெண்ணுங்க படுற பாடு...மானத்த மறைக்க ஒரு மொழம் துணி கூட மாருல மூட நமக்கு உரிமை இல்ல....எப்போ தீருமோ இந்த கருமம்...ம்ம்" வேதனையில் முணுமுணுக்கிறாள்.

"தீருவ எங்க? எத்திர கடவம் கொண்டு வந்தே? எடு முக்கா ரூவா." அதிகாரமான குரலில் கேட்டபடி பேனாவால் முதாருவின் மாராப்பில்லா முலைகளை தட்டுகிறான் கிஷன் நாயர்.

பச்சிளம் குழந்தை குடிக்கவேண்டிய பால் தெறித்து கிஷன் நாயரின் முகத்தில் விழுகிறது.

கோபக்கனலாய் மாறி இடுப்பில் இருக்கும் கத்தியால் முத்தாருவின் மார்பை சீவி எறிகிறான் நாயர்.

அலறல் சத்தத்துடன் சாயும் முத்தாருவை பார்த்தபடியே பதைபதைக்கிறது சந்தை.

முத்தாருவை பற்றி கவலைப்பாடாது திமிராக நடந்து போனான் கிஷன் நாயர். சந்தையின் மனங்கள் குமுறியது.

(கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலத்தில் இந்த கொடுமை நடந்தது. பெயர்கள் மட்டும் கற்பனை)

~0OO0OO0OO0~

நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது.

~0OO0OO0OO0~

முத்தாரு, மாடத்தி போல அடிமையாக பலரை கொலைசெய்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இவை மட்டுமா? எத்தனை வகையான வரிகள் மற்றும் அபராதங்கள்?

 • புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.
 • 'பார்த்தால் தீட்டு' என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது "எட்டிப்போ" என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.
 • நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.
 • ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.
 • ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.
 • பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).
 • பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.
 • திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.
 • குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.
 • தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.
 • செருப்பு அணியக்கூடாது.
 • படிக்கக்கூடாது.
 • பொது குளத்தில் குளிக்கக்கூடாது.
 • இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.

இன்னும் பல...

~0OO0OO0OO0~

பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தரால் சொல்லப்பட்ட மனுதர்மத்தின் கோட்டையாக இருந்த திருவிதாங்கூரில் நடந்த கொடுமைகள் தான் இவை அனைத்தும். கன்னியாகுமரியில் இந்து சமயம் செய்த அடிமைத்தனத்திற்கு சாட்சியாக திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன.

இந்த கொடுமைகளை நிகழ்த்தியது யார்? ஆங்கிலேயர்களா? மிசனரிகளா? மொகலாய மன்னர்களா? யார் செய்தார்கள்?

1826 முதல் 1857 வரை மூன்று முறைகள் இக்கொடுமைகளை எதிர்த்து மக்கள் போராடினர். முறையீடுகள் பிரிட்டீஸ் மகாராணி வரை அனுப்பப்பட்டது. நாயர்களும், நம்பூதிரிகளும் இந்த உரிமைக்குரல்களை கடுமையாக எதிர்த்தனர்.

போராடிய நாடார் பெண்களுக்கு 1829ல் மேலாடை உடுத்த அரசாணை அனுமதி கொடுத்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த விடவில்லை ஆதிக்க சக்திகள். திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவு பெற்ற நாயர் குழுக்கள் பெண்களின் ஜாக்கெட்டைக் கிழித்துக் கலகம் செய்ததனர். மனிதத்தனமற்ற கீழத்தரமாக நடந்துகொண்ட இந்த ஆதிக்க சாதியினரின் மதம் இந்துமதம்.

பாளையங்கோட்டையில் நாடார் சாதியை சார்ந்த மக்கள் மானம் காக்க துணி அணிய உரிமை இருந்தது; கன்னியாகுமரியில் அந்த உரிமை இல்லை. காரணம் கன்னியாகுமரி பார்ப்பனர்கள் கரம் ஓங்கிய திருவிதாங்கூர் இந்து மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு 'குப்பாயம்' போட உரிமையிருந்தது. இந்துவாக இருந்து மார்பை மறைக்க கூட உரிமையில்லாமல் சுயமரியாதையை இழப்பதை விட தடையாக இருந்த மதத்தை தூக்கியெறிவது மேல் என கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். அப்போதும் திருவிதாங்கூர் இந்து மன்னனின் ஆதிக்கம் தான் நடந்துகொண்டிருந்தது. மன்னனின் காலத்தில் மதம் மாறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன (தேவசகாயம் பிள்ளைக்கு கிடைத்த தண்டனைகள் இதற்கு ஒரு உதாரணம்). கிறிஸ்தவ மதம் பரவ இந்துமதத்தின் சாதிச்சாக்கடை சனாதான தர்மமே காரணமாயிற்று.

~0OO0OO0OO0~

அய்யாவழி என்னும் விடுதலை மதம்

வைதீக இந்துமதத்திற்கும் (பார்ப்பனீய மதம்) முத்துக்குட்டி சுவாமிகளின் அய்யா வழிபாட்டு முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆங்கிலேயர்களை அய்யா எதிர்க்கும் சில வரிகளை மட்டும் காட்டி பார்ப்பனீய இந்துமதம் தப்பிக்க இயலாது. அய்யா வழிபாடு முறை முற்றிலும் இந்துமதத்திற்கு எதிரானது. அதனால் தான் அய்யாவை இராஜாங்க எதிரியாக அன்றைய இந்து ஆதிக்க சாதியினர் திருவாங்கூர் மன்னரிடம் குற்றம் சாட்டினர். நம்பூதிரிகளின் ஆலோசனையின் பேரில் திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை சித்திரவதைக்குள்ளாக்கினான்.

'தாலிக்கு ஆயம், கம்புத்தடிக்கு ஆயம் ' என அகிலத்திரட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திருவிதாங்கூர் மன்னன் சுமத்திய வரிக்கொடுமைகளை அய்யா எதிர்த்திருக்கிறார். (ஆயம் = வரி; கம்புத்தடி= பனையேறும் தொழிலுக்கு உதவும் கருவி). அய்யாவின் முதல் பெயரான "முடிசூடும் பெருமாள்" என்ற பெயரை மாற்றி 'முத்துக்குட்டி' என ஆக்க காரணமும் பார்ப்பனீய இந்துமத ஆதிக்க சாதியினர். 'முத்துகுட்டி' அய்யா வழியை உருவாக்க காரணமும் அவர்களது அடக்குமுறையே.

அய்யாவழியில் இந்துமதத்திற்கு நேர் எதிரான வழிகளை தான் அய்யா வகுத்தார். அவற்றில் சில:

 1. பூசை செய்யக்கூடாது.
 2. பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
 3. யாகம், ஹோமம் கூடாது
 4. மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 5. எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
 6. எந்த வழிபாடும் கூடாது
 7. ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
 8. காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
 9. மாலையிடுதல் கூடாது
 10. யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
 11. லஞ்சத்தை ஏற்காதீர்கள்
 12. ஆசைகளை துறந்துவிடுங்கள்.
 13. உண்மையாக இருங்கள்

இவை அனைத்தும் அய்யா வழியினரின் நூலான 'அகிலத்திரட்டில்' சாட்சியாக இருக்கிறது.

பார்ப்பனீய இந்துமதத்திற்கு எதிர்திசையில் அய்யாவழி!

 • சாதியை படைத்தவன் நீசன் என்கிறார் அய்யா. இந்துமதத்தில் சாதியை படைத்தவன் கடவுள். அய்யாவழிக்கும், இந்துமதத்திற்கும் இடைய்லான அடிப்படி முரண்பாட்டில் இது முக்கியமானது.
 • இந்து மதம் உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையது. அய்யா வழியில் இறைவனுக்கு உருவமில்லை.
 • இந்து மதத்தில் சாதி அமைப்பு தான் அதன் அடித்தளம். அய்யா வழியில் சாதி வேற்றுமைகள் இல்லை. அனைவரும் சேர்ந்து துவையலுடன் கஞ்சி அருந்தும் 'துவயல் பந்தி' உண்பார்கள்.
 • இந்து மதத்தில் கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் அர்ச்சகர் என்ற இடைத்தரகர் உண்டு. அய்யா வழியில் எந்த பூசாரியோ/அர்ச்சகரோ இடைத்தரகராக இல்லை.
 • இந்து மதத்தில் பிறர் கருவறைக்குள் செல்ல உரிமையில்லை. அய்யா வழியில் 'பள்ளியறை' வரை சென்று (ஆண், பெண் வேறுபாடு உட்பட) எந்த வேறுபாடுகள் இல்லாமலும் வணங்கலாம். தலையில் சுயமரியாதையுடன் தலைக்கட்டுடன் தான் அய்யாவழியில் வணக்கம் செலுத்த வேண்டும்.
 • அய்யா வழியினர் எந்த இந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவதோ, பிரசாதங்களை உண்பதோ இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையை உருவாக்க இந்துமதத்தை புறக்கணித்து தனது மக்களுக்காக புதிய வழியான 'அய்யா வழியை' தோற்றுவித்து அன்றைய பார்ப்பனீயத்தின் குரல்வளையை இறுக்கியவர் அய்யா!

இன்றைய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் ஆதிக்க குரல்களை அடக்க இந்த மதம் தனித்தன்மையுடன் இருப்பது தடையாக இருக்கிறது. அதனால் இந்துவெறியாளர்கள் அய்யா வழியும் இந்து மதம் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் நடத்திய மண்டைக்காடு கலவரத்தின் போது அதற்கு எதிராக குன்றக்குடி அடிகளார், அரோக்கியசாமி ஆண்டகை, இஸ்லாமிய தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து அய்யா வழியின் இன்றைய 'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார் ஒற்றுமை பேரணிகளை முன்னின்று நடத்தினார். அன்று முதல் அய்யா வழியை தனக்குள் விழுங்கும் பிரச்சரங்களை இந்து மதவெறியர்கள் ஆரம்பித்தனர்.

ஆதிக்கசாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் மாற்று மதங்களில் ஒன்று அய்யாவழி! ஆம் இது ஒரு தனிமதம்! பார்ப்பனீயத்தின் பிடரியை நெரித்ததில் அய்யா வழி தனிமதமே!

~0OO0OO0OO0~

அய்யாவழி பற்றிய முந்தைய பதிவிற்கு இங்கே

அய்யாவழி உருவாக காரணமான திருவிதாங்கூரின் சூழல் பற்றிய பதிவு சுட்டி இங்கே

16 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Mr.Thiru,

Some people are spreading false theory as history. Thanks for brining out the facts through your post.

Rajakumar
Bangalore

Anonymous said...

திரு அய்யா ,

உங்க அய்யா வழி நல்லா இருக்குதுங்க அய்யா

ஆனா வரவனையான் கூட சேர்ந்து சுத்துனேன்னு சொல்லி இருக்கிங்க அய்யா . அதான் கொஞ்சம் இடிக்குதுங்க அய்யா

பாலா

thiru said...

பாலா,

என்னோட அய்யா வழியில்ல. அய்யாவோட வழி இது. கட்டுரை என்னோடது.

வரவனையான் பற்றி இந்த கட்டுரையில் எங்கும் இல்லையே. நீங்க எங்கே எடுதீங்க? நல்லா படியுங்க. அவசரத்துல படிச்சு பின்னூட்டம் போட்டீங்களோ?

நலமா?

அன்புடன்
திரு

கோவி.கண்ணன் [GK] said...

திரு,

அய்யா வைகுண்டரின் வாழ்வும் வளமும் என்ற நூலில் இதனைப் படித்திருக்கிறேன்.

முலைவரி எல்லாம் எவ்வளவு கொடுமை ?
:(
முலைவரி கட்ட மாட்டேன் என்று ஒரு பெண் அறுத்து எரிந்துவிட்டு இறந்து போனாளாம் !

இக்கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்கு வக்காலத்து இன்றும் வாங்குபவர்கள் உண்டு, இன்றைக்கு இவர்களாகவே திருந்தியது போல் அதெல்லாம் அந்த காலம் இப்போது நடக்கிறதா என்று கேட்கிறார்கள் கொஞ்சமும் கூச்சமோ வருத்தமோ இல்லாமல் !

Anonymous said...

Hi Thiru,

It is a really good post by you. Hope some of the spreading of false history will be stopped by this.

Please continue your effort to keep true history alive in this society where history seems to become what some of the upper caste people say.

Hats-off to your effort.

RV

அசுரன் said...

07//பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது//

இதை அய்யா சொன்னதாக உறுதியாகச் சொல்ல முடியுமா?

இது உறுதி எனில் அய்யாவை உரிமை கொள்ள எந்த அரை டவுசர் அல்லக்கைகளுக்கும் அருகதை இல்லை.

ஏனேனில், ஞானகங்கை எனும் கோல்வால்கரின் குப்பை புத்தகத்தின் முதல் பாகத்தின் முன்னுரையிலேயே RSS விரும்பும் சமூக அமைப்பு வருகிறது.

இவர்களின் நால் வர்ண அமைப்பில் முதல் பிரிவு வழிபாட்டை செய்யும் பிரிவினர் என்று சொல்கிறது அந்த புத்தகம்.

இது குறித்து விரைவில் ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

அசுரன்

thiru said...

//கோவி.கண்ணன் [GK] said...
திரு,

அய்யா வைகுண்டரின் வாழ்வும் வளமும் என்ற நூலில் இதனைப் படித்திருக்கிறேன்.

முலைவரி எல்லாம் எவ்வளவு கொடுமை ?
:(
முலைவரி கட்ட மாட்டேன் என்று ஒரு பெண் அறுத்து எரிந்துவிட்டு இறந்து போனாளாம் !

இக்கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்கு வக்காலத்து இன்றும் வாங்குபவர்கள் உண்டு, இன்றைக்கு இவர்களாகவே திருந்தியது போல் அதெல்லாம் அந்த காலம் இப்போது நடக்கிறதா என்று கேட்கிறார்கள் கொஞ்சமும் கூச்சமோ வருத்தமோ இல்லாமல் !//

உண்மை கண்ணன்.

வரிகட்டாமல் முலையை அறுத்து கொடுத்து போராடிய ஒடுக்கப்பட்ட இனத்தின் பெண் இன்றைய கேரளத்தில் பிறந்தவள்.

thiru said...

//Anonymous said...
Hi Thiru,

It is a really good post by you. Hope some of the spreading of false history will be stopped by this.

Please continue your effort to keep true history alive in this society where history seems to become what some of the upper caste people say.

Hats-off to your effort.

RV //

நன்றி நண்பரே!

thiru said...

// அசுரன் said...
07//பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது//

இதை அய்யா சொன்னதாக உறுதியாகச் சொல்ல முடியுமா?//

உறுதியான தகவல் தான் அசுரன். அய்யாவழி பதிகளிலும், தாங்கல்களிலும் பூசாரிகள் யாருமில்லை. புரோகித கூட்டத்திற்கு அங்கு தனி வேலையில்லை.

//இது உறுதி எனில் அய்யாவை உரிமை கொள்ள எந்த அரை டவுசர் அல்லக்கைகளுக்கும் அருகதை இல்லை.//

அவர்களுக்கு அடியாட்களாக ஆட்கள் தேவைப்படுகிறார்கள் தானே. அதற்காக எல்லோர்ர்ம் இந்து என எண்ணிக்கை சேர்க்க முனைகிறார்கள்.

//ஏனேனில், ஞானகங்கை எனும் கோல்வால்கரின் குப்பை புத்தகத்தின் முதல் பாகத்தின் முன்னுரையிலேயே RSS விரும்பும் சமூக அமைப்பு வருகிறது.

இவர்களின் நால் வர்ண அமைப்பில் முதல் பிரிவு வழிபாட்டை செய்யும் பிரிவினர் என்று சொல்கிறது அந்த புத்தகம்.

இது குறித்து விரைவில் ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

அசுரன்//

எழுதுங்கள் படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். எண்ணங்களின் தொகுப்பு (Bunch of Thoughts) என்ற புத்தகத்திலும் காழ்ப்புணர்ச்சியும் வர்ணாஸ்ரம நரித்தனமும் நிறைந்து காணப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். அது பற்றி விரிவாக எழுத ஆவல். புத்தகம் இருந்தும் நேரம் தான் இல்லை...

மாசிலா said...

நல்ல பதிவு.

இப்பதிவின் ஆரம்பத்தில் தத்ரூபமாக எழுதப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளை படித்தே மக்களின் மன நிலையை புரிந்துகொள்ள முடிகிறது.

நினைவில் நிற்கும் பதிவு.

நன்றி திரு.

bala said...

//அது பற்றி விரிவாக எழுத ஆவல். புத்தகம் இருந்தும் நேரம் தான் இல்லை//

திரு அய்யா,
அப்படி என்ன நேரமில்லைன்னு வெட்டி முறிக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?மிஞ்சி போச்சுனா,கேவலமா வஞ்சி கவிதை,இல்லை புரட்சி தலைவி மாதிரி அரைவேக்காட்டு குட்டி கதைகள் சொல்வீங்க.இதுல இந்த அலட்டல் வேற.

பாலா

Anonymous said...

திரு - பாலா போன்ற வாய்க்கால்திருப்பி வடிவேலுகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள். விவரமான பதிவுக்கு நன்றி.

மறைகழண்ட பாலா அய்யா, தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வார்களே அய்யா, கீழ்க்கண்ட வலிகள் வந்தால் என்ன செய்வீர்கள் அய்யா? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன அய்யா? திசைதிருப்புவது மட்டும்தான் உங்கள் வேலையா அய்யா? பாலா அய்யா என்று உங்கள் பெயரைப் போட்டிருப்பது, கேட்ட தைரியவான் நீங்கள்தான் என்பதால்தான் அய்யா. உங்களை மாதிரிக் கேட்கும் அனைவரும் உங்கள் பெயரை எடுத்துவிட்டு தங்கள் பெயரைப் போட்டுப் பார்த்து மகிள்ச்சியடையலாம் அய்யா. நன்றி அய்யா.


பாலாவும் அவர் குடும்பத்தினரும் மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

\'பார்த்தால் தீட்டு\' என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது \"எட்டிப்போ\" என பாலாவையும் அவர் குடும்பத்தினரையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.

பாலா குடும்பத்து ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.

பாலா மீசை வளர்க்கக்கூடாது.

பாலா தலையில் துணி கட்டக் கூடாது.

பாலா குடும்பத்துப் பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது). (சொல்லவே நா கூசுகிறது...)

பாலாவின் பேண்ட் சட்டை, அண்டர்வேர் என அனைத்திற்கும் வரி.

திண்ணை வைத்து பாலாவோ அவர் குடும்பத்தாரோ வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.

பாலா குடும்பத்தினர் குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.

பாலா குடும்பத்துப் பெண்கள் தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.

பாலாவும் குடும்பத்தினரும் செருப்பு அணியக்கூடாது.

பாலாவும் குடும்பத்தினரும் படிக்கக்கூடாது.

பாலாவும் குடும்பத்தினரும் பொது குளத்தில் குளிக்கக்கூடாது.

பாலாவும் குடும்பத்தினரும் இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது

Anonymous said...

அந்த காலத்து கேரளா எப்படி இருந்தது என்று
இந்த படத்தில் ஓரளவு காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Vaanaprastham

Anonymous said...

அந்த காலத்து கேரளா எப்படி இருந்தது என்று
இந்த படத்தில் ஓரளவு காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Vaanaprastham

ஜோதிஜி said...

திரு நலம் தானே?

இப்போது தான் துளசி கோபால் இந்த தலைப்பு குறித்து எனக்கு அனுப்பி வைத்தார். காரணம் இது குறித்து தான் இப்போது எழுதிக் கொண்டு இருக்கின்றேன். வெறும் பாலா என்று போட்டு உள்ளாரே? வலையுலகில் பல பாலாக்கள் இருக்கிறார்களே?

thiru said...

//ஜோதிஜி said...
திரு நலம் தானே?
இப்போது தான் துளசி கோபால் இந்த தலைப்பு குறித்து எனக்கு அனுப்பி வைத்தார். காரணம் இது குறித்து தான் இப்போது எழுதிக் கொண்டு இருக்கின்றேன். வெறும் பாலா என்று போட்டு உள்ளாரே? வலையுலகில் பல பாலாக்கள் இருக்கிறார்களே?//

நலம் ஜோதி. நீங்கள் நலமா?

எழுதுங்கள். தற்போதைய அய்யாவழியில் சங்பரிவார அமைப்புகளின் ஊடுருவல் உள்ளது. பாலபிரஜாதிபதி தனிப்பட்ட இலாப நோக்கங்களுக்காக அய்யாவழியின் ஆரம்பகால நோக்கத்தை அழித்துவிட்டார்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com