Sunday, December 31, 2006

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பு?

தமிழக பயணத்தின் போது தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, சிற்பக் கலையை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு வைத்திருக்கும் மாமல்லபுரம் சென்றேன். வாகனம் ஓட்டி வந்த நண்பர் "கிருஸ்ணாவின் வெண்ணை உருண்டை" பார்க்கவேண்டுமா என கேட்டார். கிருஸ்ணா இனிப்பகம் வெண்ணை உருண்டை கண்காட்சி நடத்துகிறதோ என நினைத்து, வெண்ணை உருண்டை கண்காட்சி எதாவது நடக்கிறதா என கேட்டேன்.

மீண்டும் விசாரித்ததில் அவர் குறிப்பிட்டது ஒரு உருண்டை வடிவிலான கல் என்பது புரிந்தது. இதற்கு ஏன் Krishna's Butter Ball என பெயர்? இந்த பெயர் எப்படி வந்தது? தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில் இது சரியான பெயர்தானா?

மகாபாரத கதை நடந்ததாக சொல்லப்படுகிற பகுதிகள் அனைத்தும் வட இந்தியாவில் இருக்கிறது. கிருஸ்ணனது நடமாட்டமோ, கோபியர்கள் நடமாட்டமோ, வெண்ணை கதைகளோ நடந்த பகுதி மாமல்லபுரம் சார்ந்ததல்ல. பிறகு ஏன் இப்படி ஒரு பெயர்? பார்ப்பனீய இந்து மதத்தை தென்னிந்தியர்கள் மீது திணித்து நமது கலாச்சார அடையாளங்களை, வழிபாட்டுமுறைகளை அபகரித்த வரலாறும் இப்படி தான் துவங்கியிருக்கிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள அடையாளங்களை, சின்னங்களை, இயற்கையை, இடத்தை பார்ப்பனீய இந்து மத பெயர்களை வழங்கி அழைத்திருக்கிறார்கள். மண்ணின் மக்கள் வழங்கிய பெயர்கள் காலப்போக்கில் மறைக்கப்பட்ட வரலாறு அரங்கேறியது இப்படி தான். ஆரியர்களின் பெயர்களும், வெள்ளைக்காரனின் பெயர்கள் என அடையாளங்கள் வரலாற்றில் நிறைந்து காணப்படுகிறது.

****
பத்மனாபபுரம் அரண்மனை பகுதியில் மூன்று கோட்டைகள் அமைந்துள்ளன. ஒன்று யுத்தங்களில் கொல்லப்படும் சவங்களுக்கானது. இன்னொன்று அரண்மனை அமைந்துள்ள கோட்டை. மற்றொன்று மருந்துவாழ் மலையில் காணப்படுகிற மருந்துக்கோட்டை. மருந்துவாழ்மலை என்ற பெயர் காரணம் திருவிதாங்கூர் மன்னன் மூலிகைகளை பயிரிட்டு யுத்தத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கிய இடம் என்பதால் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். அந்த மலையை சுற்றி இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீய கும்பல் புதிய "கதையை" திரித்திருக்கிறது.

அவர்களது திரித்தல் கதை: யுத்தகளத்தில் இருந்த இராமனுக்கு சிரஞ்சீவி மலையை அனுமன் கொண்டு சென்ற வேளை விழுந்த துண்டு ஆதலால் அது மகேந்திரகிரி மலை என்றழைக்கப்பட்டது.ஆகவே இது இந்துக்களுக்கு புனிதமான இடமாம்.

இப்படி மகாபாரத, இராமாயண கதைகளை சொல்லி வரலாற்றை மாற்றி எழுத அதிகார மையங்கள் மட்டுமல்ல நமது நாட்டின் சிற்றூர், கிராமங்களிலும் பார்ப்பனீயம் ஊடுருவியிருக்கிறது. பார்ப்பனீயத்தின் புதிய வடிவம் சங்பரிவார அமைப்புகளாக இந்துமுன்னணி, இந்துதேசம், ஆர்.எஸ்.எஸ் என பல பெயர்களில் இயங்குகிறது. பார்ப்பனீய சிந்தனையை எல்லா சாதியினருக்கும் திணிக்க இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது. சித்பவன் பார்ப்பனர் கோல்வால்கரால் (குருஜி) துவங்கப்பட்ட மதவெறி, வர்ணாஸ்ரம அமைப்பான ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கலாச்சார பண்பாட்டு சிதைவுகளை சீர்படுத்த ஆண்டுகள் ஆயிரம் வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பு தான்! நமது கலாச்சாரத்தை பார்ப்பனீயமயமாக்குகிற அமைப்பு அது. காந்தியின் கொலைக்காரர்கள் சத்தமில்லாமல் செய்கிற இந்த வரலாற்று சிதைத்தலில் வரும் தலைமுறைகளின் வாழ்வும் அடையாளமும் தொலையப் போகிறது.

____

பூங்கா இதழில் இது வெளிவந்தது.

6 பின்னூட்டங்கள்:

nagoreismail said...

உண்மையான சரித்திரத்தை நம் சந்ததிகளாவது தெரிந்து கொள்ளுமா என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது?
- நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

//
பார்ப்பனீய இந்து மதத்தை தென்னிந்தியர்கள் மீது திணித்து நமது கலாச்சார அடையாளங்களை, வழிபாட்டுமுறைகளை அபகரித்த வரலாறும் இப்படி தான் துவங்கியிருக்கிறது.
//

ஆரம்பிச்சிட்டீங்களாய்யா...

சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் வம்சம் பாரதப் போரின் போது படைகளுக்கு உணவு வழங்கியதாகச் சொல்கிறது சங்கத் தமிழ் பாடல்கள்.

தென்னிந்தியர் மீது கிருத்தவ இஸ்லாமிய கலாச்சாரம் (கன்றாவிச்சாரம்) கூடத்தான் வாயில் funnel வைத்து மூக்கை மூடிவிட்டு கட கடவென்று குச்சிவைத்து திணிக்கிறார்கள் ? அதைக் கேட்டு ஒரு பதிவு போட்டு உங்கள் secular credential ஐ வெளிக்காட்டிக் கொள்ளுங்களேன் ?

புனித தாமஸ் இந்தியா பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை என்று போப்பே சொல்லிவிட்டார் ஆனால் இன்னும் st thomas mount என்று சொல்லி மாதா கோவில் மணி அடிக்கிறார்கள் தமிழ் நாட்டில்.

எங்கோ பாலைவனத்தில் இருக்கும் ஒரு ஆவியை கடவுள் என கட்டாயப்படுத்தி வணங்க வைக்கிறார்கள் குல்லா போட்ட முல்லாக்கள். தமிழகத்தில் அதற்கு ஜல்லி அடிப்பதற்கு உங்களைப் போன்ற கூட்டங்கள் கிருஷ்ணனைத் திட்டுவது !

கோனார் தமிழுரையைப் படித்து தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் போல் கிருஷ்ணனைப் பார்ப்பானீயக் கடவுள் என்பது!

thiru said...

//Anonymous said...
சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் வம்சம் பாரதப் போரின் போது படைகளுக்கு உணவு வழங்கியதாகச் சொல்கிறது சங்கத் தமிழ் பாடல்கள்.//

அனானி சங்கத்தமிழ் பாடல் எந்த வரிகளில்? யார் எழுதிய பாடல்கள்? காய்கறி வகை உணவா? இல்லை மாமிச உணவா? விரிவாக எழுதுங்கள் அறிய ஆவலாய் இருக்கிறேன். :)

//தென்னிந்தியர் மீது கிருத்தவ இஸ்லாமிய கலாச்சாரம் (கன்றாவிச்சாரம்) கூடத்தான் வாயில் funnel வைத்து மூக்கை மூடிவிட்டு கட கடவென்று குச்சிவைத்து திணிக்கிறார்கள் ? அதைக் கேட்டு ஒரு பதிவு போட்டு உங்கள் secular credential ஐ வெளிக்காட்டிக் கொள்ளுங்களேன் ?//

ஆர்.எஸ்.எஸ் செய்யும் கலாச்சார அழிப்பை பற்றி எழுதினால் ஏன் இவ்வளவு அடுத்த மதத்தினர் மீது ஆத்திரம்?

//புனித தாமஸ் இந்தியா பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை என்று போப்பே சொல்லிவிட்டார் ஆனால் இன்னும் st thomas mount என்று சொல்லி மாதா கோவில் மணி அடிக்கிறார்கள் தமிழ் நாட்டில்.// இதற்கு பதில் சொல்ல யாராவது கிறிஸ்தவர்களை அல்லது போப்பை கேளுங்கள். எனது பதிவில் "ஆரியர்களின் பெயர்களும், வெள்ளைக்காரனின் பெயர்கள் என அடையாளங்கள் வரலாற்றில் நிறைந்து காணப்படுகிறது." இந்த வரிகள் மண்ணின் மக்களது தொன்மையான அடையாளங்களை அழித்த/அழிக்கிற அனைவருக்கும் தான். சமகாலத்தில் இந்த திரித்தல் வரலாற்றை மற்ற எல்லோரையும் விட அதிகமாக செய்வது பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ் என்பதில் சந்தேகமில்லை.

//எங்கோ பாலைவனத்தில் இருக்கும் ஒரு ஆவியை கடவுள் என கட்டாயப்படுத்தி வணங்க வைக்கிறார்கள் குல்லா போட்ட முல்லாக்கள். தமிழகத்தில் அதற்கு ஜல்லி அடிப்பதற்கு உங்களைப் போன்ற கூட்டங்கள் கிருஷ்ணனைத் திட்டுவது!//

கிருஸ்ணன் யார்? பாரத கதையின் அரசியல் சூட்சுமம் என்ன என்பது பற்றி கீதை பற்றிய எனது கட்டுரைகளை படியுங்கள். உங்களுக்கு தெளிவு கிடைக்கலாம்.

//கோனார் தமிழுரையைப் படித்து தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் போல் கிருஷ்ணனைப் பார்ப்பானீயக் கடவுள் என்பது!// பார்ப்பனீயத்தை கட்டிக்காக்க பயன்படுத்தப்படுகிற கடவுளை வேறு என்ன என்று அழைப்பீர்கள்? தலித்-பகுஜன் மக்களின் கடவுள் என்றா அழைப்பீர்கள்?

சீனு said...

B-)

╬அதி. அழகு╬ said...

//எங்கோ பாலைவனத்தில் இருக்கும் ஒரு ஆவியை கடவுள் என கட்டாயப்படுத்தி வணங்க வைக்கிறார்கள் குல்லா போட்ட முல்லாக்கள்.//

அறிவும் அதுவும் கெட்டுப்போன அனானியே,

எதைப் பற்றி எழுதத் துணிந்தாலும் அதைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு எழுது; முற்றாக உளறாதே!

தருமி said...

தலைப்பைப் பார்த்து என்னடா இப்படி இருக்கேன்னு ஓடிவந்தேன் :))

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com