Friday, August 11, 2006

இராஜாஜியும் குலக்கல்வியும்

இராஜாஜியும் குலக்கல்வியும்

கிழக்கிந்திய கம்பெனியார் 1773ல் உருவாக்கிய துருபிடித்த ஆங்கிலேய அடக்குமுறையின் அடையாளமான கவர்னர் ஜெனரல் பதவியை கடைசியாக அலங்கரித்த பெருமை சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்களைச் சாரும். 1950இல் இந்தியா குடியரசாக மாறி அரசியல் சாசனத்தை நிறைவேற்றியது முதல் இராஜாஜியுடன் அந்த துருப்பிடித்த பதவியும் முடிந்தது. இராஜாஜி கொண்டுவந்த “குலக்கல்வியின்” அருமை பெருமைகளை மூடி மறைத்து பதிவுகள் வருவதாக மனம் நொடிந்து மீள்பதிவு போட்டு வலைப்பதிவாளர் டோண்டு லாறி நிறைய பொய்யை ஒரு வலைப்பதிவில் மறைக்கப் பார்க்கிறார். இதன் உண்மை வரலாறு இன்று 60 அல்லது 70 வயதானவர்களுக்கு அல்லது இது சம்பந்தமான நூல்களை படிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அதனால் குலக்கல்வி பற்றிய உண்மையை சமகால மனிதர்களுக்கு உரக்கச் சொல்லும் விதமாக இந்த வெளிப்படையான பதிவு.

அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக 1952 முதல் 1954 வரை இராஜாஜி இருந்தார். அவர் கொண்டு வந்த திட்டம் தான் “குலக்கல்வி” என தந்தை பெரியார், அண்ணா, பிராமணரல்லாதவர்கள், காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையினர் என துவங்கி முதல் சாதாரணமானவர்கள் வரை எதிர்த்த திட்டம். அந்த திட்டம் என்ன? அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம். எவ்வளவு அருமையான திட்டம்?

அதாவது இராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு சேவை செய்து சேகரித்த அரசு வேலைகளில் அவர்களது பிள்ளைகள் சுகம் காண அருமையான ஆரிய திட்டம். அதாவது இராஜாஜியின் அப்பா கிராம முன்சிப் வேலை பார்க்கிறார் என்றால் மகன் இராஜாஜி பள்ளியில் படித்து, சட்டம் பயின்று, ஆங்கிலேய ஆதிக்க அரசின் சென்னை மாகாண பிரதம அமைச்சராகி, இடைக்கால அரசில் பங்கு பெற்று பதவி சுகத்தில் நெளியலாம். அதே வேளை முடிவெட்டுகிற குப்பனின் மகன் பள்ளிக்கு செல்லலாம் அங்கு மூன்று மணி நேரம் இருந்து விட்டு வந்து முடிவெட்ட தகப்பனாருடன் வீடு வீடாக சென்று ‘தொழில்’ பழகலாம். அப்படியே காலப்போக்கில் படிப்பை நிறுத்தி முடி திருத்தும் தொழிலில் ஈடுபடலாம். என்ன உயரிய சிந்தனை? துணி வெளுப்பவன் மகன் துணி வெளுக்கவும், பிணம் புதைப்பவன் மகன் பிணம் புதைக்கவும், மீன் விற்பவன் மகன் மீன் விற்கவும், மணியாட்டி பூஜை செய்பவன் மகன் மணியாட்டவுமான சாதிச் சாக்கடையை கட்டிக்காக்கிற சாக்கடை நாற்றெமெடுக்கிற ஆரிய சிந்தனையின் வக்கிரம் தான் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்.

அன்று இந்த குலக்கல்வித் திட்டத்தை முழுவேகமாக சிலிர்த்தெழுந்து சிங்கமாக தந்தை பெரியார் எதிர்த்ததால் இன்று அனைவருக்கும் அடிப்படைக் கல்விம் தொழில்நுட்ப கல்வி என்பது நடைமுறையாகி இருக்கிறது. அந்த எதிர்ப்பை தாங்காது இராஜாஜி பதவியை துறக்க நிற்பந்திக்கப்பட்டார் என்பதும் உண்மை. (டோண்டு சொல்வது போல நோயினால் இராஜாஜி பதவியை துறக்கவில்லை. இராஜாஜி பதவி துறந்தது 1954, அதற்கு பின்னர் அரசியலில் ஈடுபட்டார் என்பதும் 25ம் டிசம்பர் 1972 வரை இராஜாஜி உயிர் வாழ்ந்தார் என்பதும் உண்மை. இறக்கும் தருவாயில் குறுகிய காலம் மட்டுமே நோயுற்றிருந்தார்). எதற்காக இராஜாஜி நோயினால் பதவி துறந்ததாக பொய்யுரை? சிறந்த நிர்வாகி, அறிவுக்கடல் என புகழப்படுகிற இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பை தாங்காது பதவியை இழந்தார் என உண்மையை ஒத்துக்கொண்டால் இழுக்கு என்பதாலா?

//குழந்தைகள் இரண்டு வேளையும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த முறை அமுலில் இருந்தது. பல ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கே வர இயலாத நிலை. நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. 40 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தனர். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. // இந்த நிலையில் அனைவருக்கும் கல்வியும், தொழிற்கல்வியும் வழங்குவது தான் இராஜாஜி கொண்டுவந்த திட்டம் என அடுத்த பொய்யுரை.

இராஜாஜி பதவியிழந்த பின்னர் தந்தை பெரியாரால் ஆதரவளிக்கப்பட்டு படிக்காத மேதை காமராஜர் முதலமைச்சரானார். முதல்வரை தேர்ந்தெடுக்க நடந்த வாக்கெடுப்பில் தன்னை எதிர்த்த சி.சுப்பிரமனியம் (இராஜாஜியின் ஆதரவு பெற்றவர்) 41 வாக்குகள் பெற்றிருக்க 93 வாக்குகள் பெற்று காங்கிரஸ் உறுப்பினர்களால் 31ம் மார்ச்ம் 1954இல் தேர்ந்தெடுக்கப்பட்டர் காமராஜர். அந்த வாக்கெடுப்பு கூட்டத்தை தலைமை தாங்கியது இராஜாஜி. குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து அனைவருக்கும் கல்வியை தந்து இந்தியாவிற்கே கல்வியில் முன் மாதிரியை ஏற்படுத்தியவர் காமராஜர். இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார். அதன் விளைவு தான் இன்று பிராமணர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் கல்வி என்பது நடைமுறையானது. பிணம் புதைப்பவன் மகன் மருத்துவம், சட்டம், பொறியியல் என படிக்க முடிந்தது. (திராவிட இயக்கங்களின் சாதனை, தாக்கமென்ன என முகமூடியணிந்து கேட்பவர்களுக்கு இதுவும் சாதனைகளில் ஒன்று என்பது புரியட்டும்.)

இராஜாஜி பதவியை விட்டு இறங்கியதும் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது எப்படி? பள்ளிகளுக்கு கட்டிடங்கள், ஆசிரியர்கள், புதிய பள்ளிகள், கல்லூரிகள், மதிய உணவு என திட்டங்கள் வந்தது எப்படி? அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை! அல்லது அவர் சார்ந்த பிராமண குலத்தின் வேதங்கள் சொல்லுகிற சாதியை கட்டிக்காக்க அரசு திட்டங்கள் தீட்டி தனது ‘சாணக்கியத்தனத்தை’ நிரூபித்தார். அந்த குலக்கல்வி சாணக்கியம் காமராஜர், பெரியார், அண்ணா என்கிற திராவிடர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.

இராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மனிதனை அடிமையாக வைத்திருக்கும் தந்திரமுடையதே தவிர கல்வியை வழங்குவதோ அல்லது வேலைவாய்ப்பின்மையை கழையும் நோக்கமுடையதோ அல்ல. வேலையில்லா திண்டாட்டத்தையும் அதன் காரணங்களையும் புரியாவிடில் இப்படிப்பட்ட உப்பு சப்பில்லாத பொய்யுரைகளை நிறுத்துவது நல்லது. கல்வி பயிலும் பிராமணரல்லாத ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய தலைவர்கள் பெரியார், அண்ணா, காமராஜர் என்பதை தமிழக வரலாறு பதிவு செய்துள்ளது. இதை ஓராயிரம் பதிவுகள் எழுதினாலும் அழிக்கமுடியாது.

திரு

12 பின்னூட்டங்கள்:

Anonymous said...

thanks for clarifying things.

what happened to the thamizmanam tool bar?

a double ++

விழிப்பு said...

நல்ல பதிவு.

dondu(#11168674346665545885) said...

"இதன் உண்மை வரலாறு இன்று 60 அல்லது 70 வயதானவர்களுக்கு அல்லது இது சம்பந்தமான நூல்களை படிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்."
எனக்கு வயது 60 முடிந்து விட்டது. மேலும் ராஜாஜியின் கல்வித் திட்டத்தைப் பற்றி எழுதுவதற்காகவே மெனக்கெட்டு அக்காலக் கட்ட கல்கி பத்திரிகைகளை படித்து விட்டு பதிவு போட்டவன். உங்கள் தகுதிகளைப் பற்றி இப்போது கூறவும்.

"அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்."
நான் எனது பதிவில்; எழுதியதை சரியாகப் பார்க்காமல் உளறினால் என்ன செய்வது? உண்மை நிலைமை என்னவென்றால் அக்காலக் கட்டத்தில் குழந்தைகளை பள்ளிகளுக்கே அனுப்பாமல் முழு நேரமும் குலக்கல்வி தரப்பட்டது. அவர்களிடம் போய் "ஐயா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" எனக் கூறப்பட்டது. அவ்வளவே. அதைப் புரிந்து கொள்ளாது அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ளாதது போல நடிக்கும் நீங்கள்தான் லாரி லாரியாகப் பொய்யை உதிர்க்கிறீர்கள்.

இன்னொரு விஷயம், குலக்கல்வித் திட்டம் என்பது அதன் பெயரே விஷமத்தனமாகக் கொடுக்கப்பட்டது. அதை பிடித்துக் கொண்டு நீங்கள் தொங்குவதுதான் பரிதாபம்.

"அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை!"
என்ன பைத்தியக்காரத்தனமான வாதம்? அப்படியென்றால் 1952-ல் ஏன் எல்லோரும் அவர் காலில் போய் விழுந்தார்களாம்? அவர் இருந்த இரண்டு வருடங்களும் எவ்வளவு நெருக்கடியான ஆண்டுகள் என்பதை அறிவீர்களா?

"அதாவது இராஜாஜியின் அப்பா கிராம முன்சிப் வேலை பார்க்கிறார் என்றால் மகன் இராஜாஜி பள்ளியில் படித்து, சட்டம் பயின்று, ஆங்கிலேய ஆதிக்க அரசின் சென்னை மாகாண பிரதம அமைச்சராகி, இடைக்கால அரசில் பங்கு பெற்று பதவி சுகத்தில் நெளியலாம்."
எப்படி? அன்புமணி அவர்கள் மந்திரியானது போலவா? தயாநிதி மாறன் மந்திரியானது போலவா?

"சிறந்த நிர்வாகி, அறிவுக்கடல் என புகழப்படுகிற இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பை தாங்காது பதவியை இழந்தார் என உண்மையை ஒத்துக்கொண்டால் இழுக்கு என்பதாலா?"
உண்மையான காரணம் அவர் கட்சிக்காரர்கள் யாரையுமே அரசு அலுவலகங்களிலோ, செக்ரட்டேரியட்டிலோ வரவிடவில்லை என்பதே. யாரையுமே சம்பாதிக்க விடவில்லை. அவர் கை சுத்தம் உலகறிந்ததே. அவர் பதவி விலகியதில் அவருக்கு இழுக்கு ஏதும் இல்லை. தமிழ்நாட்டுக்குத்தான் இழப்பு.

இப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய ராஜாஜி பற்றிய மீள்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

திரு,
ராஜாஜி அவர்களின் சதித்திட்டத்தை அனைவரும் புரிந்தே இருந்தாலும் இந்த நேரத்தில் இந்த பதிவு அவசியமாகிறது..நன்றி!

அருண்மொழி said...

பணம் இல்லை என்று ஆயிரக்கணக்கான பள்ளிகளை இழுத்து மூடினார் அந்த "அறிஞர்". ஆனால் அதே நேரத்தில் வேதபாடசாலைகள் திறக்கப்பட்டன.

காமராசர் முதல்வராக ஆனதற்கு பின்னிருந்து செயல்பட்டவர்களில் முக்கியமானவர் பெரியார். காமராசர் ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஆயிரக்கனக்கான பள்ளிகளை திறந்தார். அதன் மூலம் தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டது.

இவ்விதம் செயல்பட்டவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி. "எதற்காக மூடிய பள்ளிகளை திறந்தீர்கள்" அதற்கு காமராசர் அற்புதமான பதில் அளித்தார். "ஆச்சாரியார் எதற்காக பள்ளிகளை மூடினாரோ அதற்காகத்தான் நான் திறந்தேன்".

தமிழகத்தில் கடந்த 60,70 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தெரியவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயம்.

Anonymous said...

திரு அவர்களே,

பார்ப்பன வந்தேறிக் கூட்டத்திற்கு சரியான செருப்படி. ராஜாஜி என்ற பார்ப்பன வெறியனை உலகுக்கு அடையாளம் காட்டும் உங்கள் எழுத்துப்பணி வாழ்க!

டோண்டு, வக்ரா, கால்மாரி, மூசு, பாலா போன்ற பார்ப்பன மிருகங்கள் இதனைப் படித்து பைத்தியம் தெளிந்தால் சரிதான்!

Anonymous said...

!! நெத்தியடி !!

Machi said...

/குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து அனைவருக்கும் கல்வியை தந்து இந்தியாவிற்கே கல்வியில் முன் மாதிரியை ஏற்படுத்தியவர் காமராஜர். இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார்/


அரசு கஜானாவில் பணம் இல்லை என்பதால் பள்ளி நேரத்தை பாதியாக குறைத்து குல கல்வி கொண்டுவந்த இராஜாஜி எங்கே? அரசு கஜானாவில் பணம் இல்லாத போதும் காமராசர் நிறைய பள்ளிகள் திறந்தார், இலவச கல்வி கொடுத்தார், மதிய உணவு வழங்கினார். எப்படிப்பா இவருக்கு மட்டும் இது முடிந்தது? "எல்லோரும்" படிக்கனும் முன்னேருனும்ன்னு இவர் சிரத்தை எடுத்தது தான் காரணமா?

என்னமோ போங்க புரியறவங்களுக்கு ஒழுங்கா புரிஞ்சா சரி.

Muse (# 01429798200730556938) said...

Pasting my comments put in Mr. Dondu's blog:

டோண்டு ஸார்,

தங்களின் இந்த கட்டுரையிலிருந்து நான் புரிந்து கொண்டது இது.

உண்மையில் ராஜாஜியின் இந்தத் திட்டம் ஒரு வகையில் குலத் தொழில் ஒழிப்புத் திட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறது.

குலத்தொழிலில் ஈடுபடுவது மேன்மையாக போதிக்கப்பட்டிருக்கக் கூடிய சூழல் இருந்த காலம் அது. அது பீ அள்ளுவதோ, அல்லது கோயிலில் மணியடிப்பதோ பரம்பரை தொழில் என்று செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இது சிலருக்கு லாபகரமானதாகவும், பெரும்பான்மையோருக்கு அவமானத்தைத் தருவதாகவும் இருந்தது. இந்தச் சூழலில் மூதறிஞரின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை அவர்களின் குலத் தொழிலிருந்து விடுபட வைத்திருக்கும். ஏனெனில், உண்மையில் இந்த திட்டம் "குலத்தொழிலில் கட்டாயத்தின் காரணமாய் ஈடுபட்டுவந்தவர்களை பள்ளிக்கு பாதி நாளாவது அனுப்பும் திட்டம்தானே தவிர", "பள்ளியில் இருப்போர்களை குலக்கல்விக்கு கட்டாயப்படுத்தும் சட்டம் இல்லை".

அதாவது இது ப்ரச்சினை எதுவும் தராத ஒருவகை ரிஸர்வேஷன். இந்த வகை ரிஸர்வேஷன் தாழ்த்தப்பட்ட ஸகோதரர்களுக்கு மிக உபயோகமாக இருந்திருக்கும். ஹ்ம்ம்ம்ம்ம்... அவர்கள் முன்னேறுவதை தடுக்கத்தானே பெரும்பாலான உயர்குல மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எப்படி இதை ஆதரிப்பார்கள்?

இருந்த போதிலும், தற்போதைய ரிஸர்வேஷன் மாற்ற முடியாத பலத்தையும், ஏற்றுக்கொள்ளுதலையும் அடைந்துவிட்ட சூழ்நிலையில், சக்ரவர்த்தியாரின் இந்தத் திட்டத்தின் மற்றொரு பகுதி இன்னும் பலனளிக்கக் கூடும்.

உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், கல்வி நிலையங்கள் இந்த கட்டமைப்பு வஸதிகளின் தேவைகளும், எண்ணிக்கைகளும், அதற்கான செலவுகளும் அதிகரிக்குமே என்கிற கவலையில் இருக்கும் போது, ஆச்சாரியாரின் இந்தத் திட்டம் கைகொடுக்கும். அதாவது பேட்ச் பேட்ச்களாக மக்கள் படிக்கலாம், அதே கட்டமைப்பு வசதிகளில். இதனால் பேட்ச் பேட்ச்களாக மாணவர்கள் மட்டுமன்றி, ஆசிரியர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி பலனும் பெறுவர். வேலையில்லா திண்டாட்டமும் ஓரளவு குறையும்.

அதுவுமன்றி, பல பணக்கார நாடுகளில் இருப்பதைவிட நமது கல்வித்தரம் அதிகம். எனவே வெளிநாட்டு மாணவர்களையும் நமது நாட்டில் கல்வி கற்க தூண்டலாம். இந்திய மாணவர்களைவிட கொஞ்சம் அதிகம் அவர்களிடம் வசூலிக்கலாம். அந்த அதிகப்படி பணத்தை இந்திய ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் தர பயன்படுத்தலாம்.

>>> .... எங்கிருந்தோ திடீரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது. <<<<

ஓ, அப்படியானால் இது முழுக்க முழுக்க மூதறிஞரின் திட்டமில்லையா. பேசாமல் ராஜாஜியென்ற பார்ப்பனரின் திட்டமாக இது அறிமுகம் ஆகாமல், இந்த திட்டத்தின் வரைவில் முக்கியமானவராகவிருந்த வேறு ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு அதிகாரியின் பெயரில் வெளியிட்டிருந்தால் இதை மக்கள் பேசாமல் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அப்படி யாரும் இல்லாவிட்டால் ஜாதி பாகுபாடுகள் பற்றி தெளிவான கருத்துக்கள் கொண்டிருந்த நம் மதிப்பிற்குரிய ஸ்ரீமான் அம்பேத்கார் அவர்களின் பெயரில் இதை வெளியிட்டிருக்கலாம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. பெரும்பாலான தாழ்த்தப்பட்ட குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்ட முடியாத சூழலில் இருக்கிறார்கள். இப்போதும் இந்த திட்டம் பலனளிக்கும்.
# எழுதியவர்: Muse (# 5279076) : August 11, 2006 10:44 AM

Anonymous said...

"ஆச்சாரியார் எதற்காக பள்ளிகளை மூடினாரோ அதற்காகத்தான் நான் திறந்தேன்".
What a shot ::::)))
An absolute right answer, so glad he did it.

Anonymous said...

Truth is Rajaji closed schools, one claim is no money in budjet, but where check here for what Kamaraj done right after Rajaji's action:
http://kamaraj101.blogspot.com/2005/12/101-4.html

Anonymous said...

Feelings which are diluted today are exposed by your article. Youngsters of this age may question "Why reservation?". If it was not there the same youngster would be doing only "kulathozhil".
keep it up.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com