Tuesday, August 15, 2006

ஹிந்து பத்திரிக்கையின் சிங்கள விசுவாசம்

இலங்கை, முல்லைத்தீவில் 16 குண்டுகளை வானிலிருந்து பொழிந்து 61 சிறார்களை அப்படியே புதைகுழிக்கு அனுப்பி வைத்திருக்கிறது இலன்கையில் புத்தன் வழி நடக்கும் சிங்கள அரச படைகள். இந்த குழந்தைகள் போராளிகளல்ல, அவர்கள் யுத்த பயிற்சியில் ஈடுபடவும் இல்லை, அவர்களது சடலங்களால் பிணக்காடாய் காட்சி தந்த செஞ்சோலை என்றளைக்கப்படுகிற அந்த வளாகத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்கான எந்த தடையமும் இல்லை என ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பு, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரான நார்வே பிரதிநிதிகள் என அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், மீண்டும் மீண்டும் சிங்கள அரசு, சிங்கள தரப்பு மற்றும் கருணா குழு ஊடகங்களும் (அவற்றில் சில வலைப்பதிவுகளும் அடங்கும்) உண்மையை மூடிமறைத்து புலிகளை எதிர்ப்பதை அப்பாவி குழந்தைகளின் உயிர் மீது ஈவிரக்கமற்று கொடும் பரப்புரை மேற்கொள்ளுகின்றன. போரிடுவது அரசும் புலிகளுமாக இருக்கையில் அவர்கள் தரப்பில் உயிரிழப்புகள் வருவது யுத்த நடைமுறை என எடுத்துக்கொள்ளலாம். இந்த அப்பாவி மழலைகள் என்ன பாவம் செய்தார்கள், தமிழ் பகுதி குழந்தைகளாக பிறந்ததை தவிர அவர்கள் செய்த துரோகம் என்ன?

இந்த படுகொலையை கண்டிப்பதை விட்டு கொழும்பில் குண்டுவெடிப்பில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் கொலை செய்யப்பட்டதை கடுமையாக உலக நாடுகள் பத்திரிக்கைகள் என கண்டித்து செய்திகள், தலையங்கம் என வெளியிட்டிருக்கிறது. மழலைகள் உயிரையும், மனிதநேயத்தையும் விட சர்வாதிகாரத்தின் குரலுக்கு வல்லமை அதிகம் தானோ?

இந்திய ஊடகங்கள் சிங்கள சார்பு தன்மையில் செயல்படுகிறது என்பது கண்கூடான உண்மை. பார்ப்பனீயத்தை கட்டிக்காக்க மார்க்ஸீயம் பேசும் ராம் பணி செய்யும் இந்து பத்திரிக்கை நேற்றைய இலங்கை செய்திகளை எப்படி வெளியிட்டிருக்கிறது? கொழும்பு குண்டுவெடிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் சில வரிகள் கூட சிறார் படுகொலை பற்றிய செய்திக்கு கொடுக்கவில்லை. ஹிந்து ராம் இலங்கை அரசிடமிருந்து வாங்கிய அதிஉயர் விருதுக்கான நன்றிக்கடனா இது? அல்லது பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உளவுப்படையினர் இந்திய ஊடகங்களில் இராணுவ பரப்புரை செய்கிறார்களா? என்ன இருப்பினும் பார்ப்பனீயம் சிங்களவர்களின் மச்சான் முறை தானே!

இத்தனைக்கும் கொழும்பு குண்டுவெடிப்பு பற்றி பல சந்தேகங்கள் எழுகின்றன. பாகிஸ்தானிய தூதுவரை கொல்ல புலிகள் இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் திட்டமிடவேண்டும்? இது 61 குழந்தைஅக்ளை படுகொலை செய்ததை உலகநாடுகலின் கண்டன பார்வையிலிருந்து திசைதிருப்ப இலங்கை இராணுவம் மற்ரும் அவர்களது உளவுப்படை, நட்பு உளவுப்படையினரின் திட்டமிடட்ட திசை திருப்பும் நாடகமாக ஏன் இருக்கக்கூடாது? எப்படியிருப்பினும், 7 இராணுவ வீரர்களது உயிரை விட 61 அப்பாவி குழந்தைஅக்ள் உயிர் ஒன்றும் குறைந்தவையல்ல. இந்த படுகொலைகள் போர்க்குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படவேண்டியவை. யார் செய்திருந்தாலும் இந்த படுகொலைகள் குற்றமே.

திரு
15-08-2006

11 பின்னூட்டங்கள்:

Anonymous said...

The pictures attached to the articles circulating the internet about the subject bombing bring doubt to anyone’s mind when closely scrutinized them.

According to the article associated to these pictures the victims were from a bomb blast.

According to the article the bombs were dropped from a Kfir Jet. These types of bombs cause massive explosions and do quite a bit of damage unlike claymore mines.

The average bomb is roughly 250 kgs of high explosives with quite heavy fragmentation, big enough to bring down a two storied building.(eg. current Lebanon bombings)

However the injuries are not consistent with injuries incurred in a bomb blast.
Upon close examination the injuries appear to be limited to head wounds which appear to be gun shot wounds from a small caliber weapon at close range.
According to the article the victims (who were under-aged girls) were attending a first aid training session at a children's home.

Taking into account the past behavior of the LTTE, where they have grossly mislead the international community with false news and propaganda, one may arrive at the following conclusion.

The current high attrition rate of the LTTE has pushed them to forcibly enlist new recruits to LTTE ranks. This has led to the LTTE luring school children to attend these so called first aid camps and try to forcibly enlist them into LTTE ranks. For some reason these girls must have been shot in the head for refusing to join, by a rampaging LTTE carder or gang or these may be LTTE girls who tried to escape from the LTTE's grasp and surrender to the local authorities, hense the execution style wounds and the opportunist LTTE media has linked this with the recent air bombing of the LTTE training camp.

The truth may not be what is written here or what others write.

In these types of incidences the truth is almost always left unrevealed.

However the ghosts of these young girls will haunt the perpetrators' lives as long as they exist in this universe.

Basic Forensics

Anonymous said...

ICRC warns of LTTE disinformation campaign
COLOMBO: The International Committee of the Red Cross yesterday unravelled a ploy by the pro LTTE website TamilNet to make use of the ICRC to add weight to the canard spread by it accusing the SLAF of bombing an LTTE orphanage in Mullaithivu.

In an internal correspondence ICRC information head Davide Vignati has in an Email stated that the LTTE was using a quote by the ICRC made in 1999, where the ICRC deplored a bombing incident carried out in a civilian area in an attempt to give credence to the canard.

Smartly included at the bottom of its latest article he said the 1999 quote conveyed the impression that the ICRC confirmed the killing of the 50 schoolchildren in Mullaithivu. The ICRC correspondence reads as follows:

"Dear all, we would like to draw your attention to the last case of manipulation/disinformation brought about the "50 schoolgirls killed" article by Tamil Net today.

Quote

... In September 1999, SLAF jets killed 21 people in a similar daylight raid. Commenting at the time, the International Committee of the Red Cross (ICRC) said: "We can confirm that 21 civilians were killed consequent to the air strike at Manthuvil junction ... The ICRC deplores the fact that the air strikes were carried out in a civilian area."

Quote

This old quote - smartly put at the bottom of the daily article - gave the idea that today ICRC effectively confirmed the killing of 50 schoolchildren in Mullaitivu. Almost all the national media this morning called us to have confirmation of the above-mentioned statement. It's not the first time that Tamil.Net has the impudence to turn to such kind of manipulations.

Therefore, be careful when approached with questions concerning the ongoing conflict situation.

Thanks for your attention

Have a nice day

Gyanadevan said...

//
இத்தனைக்கும் கொழும்பு குண்டுவெடிப்பு பற்றி பல சந்தேகங்கள் எழுகின்றன. பாகிஸ்தானிய தூதுவரை கொல்ல புலிகள் இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் திட்டமிடவேண்டும்? இது 61 குழந்தைஅக்ளை படுகொலை செய்ததை உலகநாடுகலின் கண்டன பார்வையிலிருந்து திசைதிருப்ப இலங்கை இராணுவம் மற்ரும் அவர்களது உளவுப்படை, நட்பு உளவுப்படையினரின் திட்டமிடட்ட திசை திருப்பும் நாடகமாக ஏன் இருக்கக்கூடாது? எப்படியிருப்பினும், 7 இராணுவ வீரர்களது உயிரை விட 61 அப்பாவி குழந்தைஅக்ள் உயிர் ஒன்றும் குறைந்தவையல்ல. இந்த படுகொலைகள் போர்க்குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படவேண்டியவை. யார் செய்திருந்தாலும் இந்த படுகொலைகள் குற்றமே.
//

இதையே திருப்பி கேட்கலாம்.
செஞ்சோலை குண்டுவெடிப்பு பற்றி பல சந்தேகங்கள் எழுகின்றன. 61 சிறார்களை கொல்ல இலங்கை இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் திட்டமிட வேண்டும்? இது 7 பாதுகாப்பு படையினரை கொலை செய்ததை உலக நாடுகளின் கண்டன பார்வையிலிருந்து திசை திருப்ப புலிகளின் நாடகமாக ஏன் இருக்கக் கூடாது?....

61 சிறார்களுக்காக வருந்துகிறேன். யார் கொன்றிருந்தாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்கள்

Machi said...

சிங்கள அரசு புலி எதிர்ப்பை விட்டாலும் விடும் இந்து ராம் விடமாட்டார் என்பது தெரிந்த கதை தானே. பத்திரிக்கை தொழிலுக்கு துரோகம் செய்யும் இச்செயலை இவர் நிறுத்துவார் என்பது கனவாக தான் இருக்கும்.
இதில் பொதுவுடமை வாதி என்ற போர்வை வேறு. :-(

யாரோ - ? said...

thanks, நீங்களாவது சில உண்மைகளை தெரியப்படுத்துகிறீர்கள்.. மீண்டும் நன்றி

Anonymous said...

இலங்கையில் இந்திய கிரிகெட் அணியின் பாதுகாப்பை பற்றிய கவலையில் நாம் துளியேனும் குண்டு வீச்சில் இறந்து போன சிறுமிகளின் மீது காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம் ஊடகங்களில் இது குறித்து பெரிதாக செய்திகள் இல்லை. முக்கிய தலைவர்களிடமிருந்து ஒரு கண்டண குரல் கூட இல்லை. நாம் கவலை எல்லாம் இன்று விளையாட்டு நடைபெறுமா என்பது தான். சக மனித உயிர்கள் இறக்கும் பொது கூட நமக்கு விளையாட்டு முக்கியமாக இருக்கிறதா??? இது தான் மனிதமா???

ப்ரியன் said...

தம்பி த.அகிலன்ஜூலை 19 வாக்கில் 'செஞ்சோலை' இல்லம் சென்று அதைப்பற்றிய ஒரு கட்டுரை எழுதி அன்புடன் குழுமத்தில் இட்டிருந்தார் அதனை மீள்பதிவு செய்துள்ளார் பாலபாரதி. அதன் சுட்டி இதோ தாயாய் ,சகோதரியாய், தோழியாய்.... அரசாங்கத்திற்கு ஒத்து ஊதுபவர்களே படித்துவிட்டுச் சொல்லுங்கள் அவர்கள் குழந்தைப் போராளிகளா என்று.

Jeyapalan said...

ஐயோ ஐயா ஞானதேவனே!

செஞ்சோலையில் குண்டு போட்டதை சிங்கள அரசே ஒத்துக்க்கொண்டுவிட்டது, நீங்கள் மட்டும் கிணற்றிலிருந்து வெளியில் வர மாட்டேன் என்றீர்களே. வராதீர்கள். அங்கேயே இருங்கள்.

Anonymous said...

போர் முகத்தில் ஒப்பாரி ஏது?
யார் நல்லவர்கள் இரண்டுமே ஓரே குட்டையில் ஊரிய மட்டைகள்
பிரபாகரன் என்ன யோக்கியன்

கொழுவி said...

||இது 7 பாதுகாப்பு படையினரை கொலை செய்ததை உலக நாடுகளின் கண்டன பார்வையிலிருந்து திசை திருப்ப புலிகளின் நாடகமாக ஏன் இருக்கக் கூடாது?....||

குண்டு வீசப்பட்டது காலை 7 மணிக்கு
கொழும்பு குண்டு வெடிப்பு மதியம் 2க்கு

ஈழநாதன்(Eelanathan) said...

//61 சிறார்களை கொல்ல இலங்கை இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் திட்டமிட வேண்டும்? இது 7 பாதுகாப்பு படையினரை கொலை செய்ததை உலக நாடுகளின் கண்டன பார்வையிலிருந்து திசை திருப்ப புலிகளின் நாடகமாக ஏன் இருக்கக் கூடாது?....//

ஞானதேவன் இந்தக் கொலைகளுக்கு நீங்களும் உடந்தை என்கிறேன்.அதை மறைக்க நீங்கள் ஆடும் நாடகம் தான் இந்த எல்லாக் கொலைகளையும் கண்டிக்கிறேன் என்ற வரிகள்.ஆதாரமிருக்கிறதா மறுக்க?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com