Monday, May 01, 2006

தமிழக முதலமைச்சருக்கு சில கேள்விகள்!

தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு,

உங்களைப் மிக திறமையான அதிகார திறன் படைத்தவர் என வியந்து பூரித்து போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகால உங்களது ஆட்சியும், அதிரடி திட்டங்களும் இவற்றிற்கு எதிர்மாறாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மக்களிடம் வாக்குறுதி கொடுத்து வாக்குசேகரிக்கும் உங்களுக்கு சில கேள்விகள்.

ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவருகிறீர்கள் என்பதை கேட்கையில் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

"மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரப்படும். 32 லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தருவோம். கடந்த தேர்தலில் தந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டித்தான் உங்கள் அன்புச் சகோதரியான நான் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கிறேன்." என்று தாங்கள் முழக்கமுடுவதை பார்க்கையில் சில கேள்விகள் எழுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்தது தாங்கள் தலைமையில் உள்ள அ.தி.மு.க. உங்களது ஆட்சியில் தானே வேலை நியமன தடை சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தினால் லட்சக்கணக்கான பேர் தமிழகமெங்கும் படித்து வேலையில்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர் பயிற்சி, பட்டமேற்படிப்புகள், தொழிற்கல்வி படித்த பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியது தாங்கள் கொண்டுவந்த இந்த சட்டம். நிரந்தர வேலைகளை ஒழித்து ஒப்பந்த அடிப்படையில் உழைப்பை சுரண்டிய தாங்களது அரசு; தேர்தலில் தரும் வாக்குறுதியை எப்படி மக்கள் நம்ம முடியும்? உங்களது வாக்குறுதிக்கும் நீங்கள் கொண்டுவந்த சட்டத்துக்கும் இருக்கிற முரண்பாடுகள் பற்றி என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? வழக்கம் போல இதுவும் எதிர்கட்சியினரது சதியா?

வேலை நியமன தடை சட்டத்தால் மூடப்பட்ட அரசு பள்ளிகளும், ஆசிரியர் பற்றாக்குறையில் இயங்கும் பள்ளிகளுமாக இன்று தமிழகத்தில் கல்வியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. தொலைநோக்கு பார்வையற்ற தாங்களது வேலை நியமன தடை சட்டம் உலக வங்கியை திருப்திபடுத்தலாம். ஆனால், உங்களை பதவியில் அமர்த்தி அழகு பார்த்த மக்கள் நிலை என்ன? அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தின் போது அவசரமாக தொகுப்பு ஊதிய முறையில் ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்டவர்கள் நிலை என்ன ஆயிற்று உங்களது ஆட்சியில்? முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு அரசு நடத்துகிற டாஸ்மார்க் மதுக்கடைகளில் மதுவுடன் சோடா கலந்து சாராயம் விற்க கற்றுத் தந்தது உங்கள் சாதனையில் ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மதுக்கடைகளில் பணி செய்ய கூட 10,000 முதல் 50,000 ரூபாய் வரை அ.தி.மு.க கட்சியினர் லஞ்சமாக பெற்றதும் உண்மை.

உலகில் எந்த நாட்டிலாவது பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் மூடிவிட்டு மதுக்கடைகளை திறந்த வரலாறு உண்டா? அந்த மிகப்பெரிய பெருமை புரட்சித்தலைவி உங்களையே சாரும். இந்த நிலையில் 32 லட்சம் வேலைகளை உருவாக்குவதாக சொல்லும் நீங்கள் அது எந்த துறைகளில் எத்தனை வேலை என பட்டியல் தருவீர்களா? அதை உருவாக்கும் வழிமுறைகள், எப்படிப்பட்ட வேலை என்பதையும் சொல்லுவீர்களா? தி.மு.க ஆட்சியின் போது பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டு அல்லல் படுத்தப்பட்ட 10,000 சாலைப்பணியாளர்களின் 5 ஆண்டு அவலம் நிறைந்த வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

யானைகள் எல்லாம் இன்புற்று இருந்தால் நாடு (உங்களது தோழியர் குடும்பம் தானே நாடு) நலம்பெறும் என உங்களது ஆஸ்தான ஜோதிடன் சொன்னதன் விளைவாக, யானைகள் முகாம் அமைத்து பல நூறு கோடி வீணாக்கியது உங்கள் அரசு. யானைகள் முகாமில் கொழுத்துக்கிடந்த அதே வேளையில், தமிழகத்தின் நெற்கழஞ்சியம் தஞ்சையில் பசிக்கு உணவில்லாமல் எலிக்கறி, நத்தை, வயல்நண்டு சாப்பிட்ட விவசாயிகளை பழித்தது உங்களது அரசு தானே. கடன் தொல்லையில் விவசாயிகள் தற்கொலை செய்ததை உங்களது அமைச்சர்களும் நீங்களும் கேலிசெய்தீர்களே இது தான் நல்ல நிர்வாகத்திற்கு அழகா? தற்கொலைக்கு காரணத்தை கண்டுபிடித்து அதை மாற்ற தாங்கள் தலைமையில் அரசு எடுத்த திட்டம் என்ன? எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு, கருணாநிதி குடும்பம் மீது வசை மாரி பொழிவதற்கு தான் உங்களது அரசு என்றால் மீண்டும் உங்களுக்கு எதற்கு பதவியும் மக்களின் வாக்குகளும்? உங்கள் பரம்பரை பகையில் அழிவது தமிழக மக்களின் வாழ்வெனில் உங்களுக்கு மீண்டும் மகுடம் எதற்கு?

சுனாமி நிவாரண பணியில் மாநில அரசு சிறப்பாக பணியாற்றியதாக சொல்லும் நீங்கள், எந்த பகுதியில் எத்தனை வீடுகளை, எத்தனை கோடி ரூபாய் செலவில், வேலைவாய்ப்பு திட்டங்களை, கல்வி, சாலைவசதி போன்ற அடிப்படை திட்டங்களை மாநில அரசின் திட்டத்தில் மட்டும் நிறைவேற்றப்பட்டன என விபரமாக சொல்வீர்களா? அதோடு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணிசார்ந்த திட்டங்களை தனியாக புள்ளிவிவரம் தருவீர்களா? நல்ல நிர்வாகத்திற்கு அழகு வெளிப்படையான தன்மை. தாங்களது அரசு இந்த விடயத்தில் வெளிப்படையாக இல்லை, காரணம் சுனாமி புனரமைப்பில் தாங்களது கட்சியினர் செய்த ஊழல் வெளிவரக்கூடாது. இந்த முறை ஆட்சியில் ஊழலில் நிற்வாகதிறனுடன் ஈடுபட்டதால் தான் பெரிதாக வெளியில் தெரியாமல் போயிற்று.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் வேலை பெருக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் உருவாக்கினார் அவர் படிக்காத மேதை மட்டுமல்ல, அதிகாரத்திறன் படைத்த மக்கள் நலனை முன்வைத்து செயல்பட்ட தலைவர். உங்களை அந்த வரிசையில் வைத்து பார்க்க முடியவில்லை. இந்த முறை உங்களது ஆட்சியில் மணல் வியாபாரத்தில் வெளிப்படையற்ற தன்மை. மதுகொள்முதல் செய்வதில் உங்கள் தோழி சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தங்களின் முறையற்ற தன்மை. சுனாமி நிதி பற்றிய வெளிப்படையற்ற தன்மை. காவல்துறையின் அடக்குமுறை, ரேசன் அட்டை விநியோக குழறுபடிகள் என பட்டியல் நீழுகிறது. முதல்வர் என்ற முறையில் உங்களது ஆட்சி நேர்மையானது, அதிகாரத்திறன் வாய்ந்தது என நிரூபிக்க மேற்காணும் பிரச்சனைகளுக்கு என்ன பதில் தருவீர்கள்? வழக்கம் போல மத்திய அரசின் அமைச்சர்கள், திரு.கருணாநிதி மீது வசைபாடுவதை விட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. மக்கள் பதில் சொல்வார்களா?

திரு

24 பின்னூட்டங்கள்:

தருமி said...

ஓட்டுப் போட முடியவில்லையே உங்கள் இந்தப் பதிவுக்கு. ஏன்?

நல்ல கேள்விகள்... பரவ வேண்டுமே என்ற ஆதங்கம் உண்டு.

Sivabalan said...

// மக்கள் பதில் சொல்வார்களா? //

We have to wait & See till May11th.

மயிலாடுதுறை சிவா said...

திரு
நான் மட்டும் தமிழகத்தில் இருந்து இருந்தால் இந்த பதிவை அனைத்து மக்களுக்கும் பரப்புவேன்.
அல்லது மேடைப் போட்டு இதனை மக்களிடம் பேசுவேன்.
மிக அருமையாக, நிதானமாக தொகுக்கப் பட்ட கேள்விகள். தொடரட்டும் தங்களது எழுத்துப் பணி
நன்றிகள் பல.
மயிலாடுதுறை சிவா...

thiru said...

//Dharumi said...
ஓட்டுப் போட முடியவில்லையே உங்கள் இந்தப் பதிவுக்கு. ஏன்?

நல்ல கேள்விகள்... பரவ வேண்டுமே என்ற ஆதங்கம் உண்டு.//

நன்றி தருமி அவர்களே!

ஓட்டு போடுவதில் ஒரு சிறு தொழில்நுட்ப தகராறு. தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

thiru said...

//மயிலாடுதுறை சிவா said...
திரு
நான் மட்டும் தமிழகத்தில் இருந்து இருந்தால் இந்த பதிவை அனைத்து மக்களுக்கும் பரப்புவேன்.
அல்லது மேடைப் போட்டு இதனை மக்களிடம் பேசுவேன்.
மிக அருமையாக, நிதானமாக தொகுக்கப் பட்ட கேள்விகள். தொடரட்டும் தங்களது எழுத்துப் பணி
நன்றிகள் பல.
மயிலாடுதுறை சிவா...//

நன்றி சிவா! தமிழகம் விழிப்புறட்டும். கேட்போம் தொடர்ந்து. தவறு செய்பவர் யாராக இருப்பினும் கடிந்துரைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு.

thiru said...

//Sittukuruvi said...
சில கேள்விகளை பல கேள்விகளாக தொடருங்கள். நன்றி//

ஆலோசனைக்கும் வருகைக்கும் நன்றி சிட்டுக்குருவி!

thiru said...

// Sivabalan said...
// மக்கள் பதில் சொல்வார்களா? //

We have to wait & See till May11th.//

காத்திருப்போம். யார் பதவியில் வரினும் நேர்மை தவறாத ஆட்சி மக்களுக்கு காலத்தின் அவசியம்

VSK said...

நேர்மையான நேரடிக் கேள்விகள்!
கிட்டத்தட்ட இதேபோன்ற கேள்விகளை கருணாநிதியை நோக்கியும் கேட்கமுடியும் என்பதே கசப்பான உண்மை.
இக்கேள்விகளை ஆதரிப்போரும், இவர்களில் ஒருவருக்கு ஆதரவாகப் பேசுவதே இன்னும் வேதனை!

இவை மறையவாவது, மாற்றம் வர வேண்டும்.

வரும்ம்ம்ம்ம்ம்ம்!
இன்னும் ஒரு வாரம்

நந்தன் | Nandhan said...

அரசியல் பேசுபவரின் சார்புதன்மை கேள்வி கேட்க படும் இவ்வேளையின் சும்மா நச்சுன்னு! ஒரு பதிவு. தெளிவாய், மறுக்கமுடியாத கேள்விகள், எதிர்கட்சியை இழுக்காமல் இதற்கு பதில் சொல்லமுடியுமெனில் என் வோட்டு அ.தி.மு.கவிற்கே.
வாழ்த்துக்கள் திரு.
இதையும் தவறாய் புரிந்துகொண்டு வசைப்பாட வருபவரும் உண்டு.

Darren said...

mummy க்கே கேள்வியா????

காத்திருக்கிறது KANCHA

thiru said...

// SK said...
நேர்மையான நேரடிக் கேள்விகள்!
கிட்டத்தட்ட இதேபோன்ற கேள்விகளை கருணாநிதியை நோக்கியும் கேட்கமுடியும் என்பதே கசப்பான உண்மை.
இக்கேள்விகளை ஆதரிப்போரும், இவர்களில் ஒருவருக்கு ஆதரவாகப் பேசுவதே இன்னும் வேதனை!

இவை மறையவாவது, மாற்றம் வர வேண்டும்.

வரும்ம்ம்ம்ம்ம்ம்!
இன்னும் ஒரு வாரம்//


தவறு யார் செய்தாலும் கேட்க பழகுவோம். ஒரு வாரத்தில் மாற்றம் நிகழுமா என்ன? நமது மக்களின் அரசியல் பார்வை, அடையாளங்கள் விசாலமாக இன்னும் காலமும் தளமும் தேவைப்படலம்.

thiru said...

//நந்தன் | Nandhan said...
தெளிவாய், மறுக்கமுடியாத கேள்விகள், எதிர்கட்சியை இழுக்காமல் இதற்கு பதில் சொல்லமுடியுமெனில் என் வோட்டு அ.தி.மு.கவிற்கே.//

உண்மையே! நன்றி நந்தன்

thiru said...

//மத்தளராயன் said...
கேள்வி நச்சென்று இருக்கிறது.//

நன்றி மத்தளராயன்!

thiru said...

//இது அரசியல் புரிந்தோர்களில் சிறுபான்மையான கூட்டத்தின் கருத்தாக எனக்கு படுகிறது. தன்மானம், அவமானம் எல்லாம் தூக்கி எறிந்து விட்ட இன்றைய டவுசர் இழந்த வெள்ளுடுப்பு விலங்கு அரசியலால், உருவாக இருந்த எத்தனயோ காமராஜர்கள் காணாமல் போய் விட்ட மேலதிகமான குற்றமும் இவர்களை சாரும்.//

உண்மை நெருப்பு!

நன்றி

thiru said...

//chithi said...
சூப்பர் எழுத்து திரு,
ஆமா!!! இந்த அம்மா இப்ப தமிழ்நாட்டுல வேலையில இருக்குறவங்க எல்லாரையும் தூக்கிட்டு புதுசா வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை தரப்போராங்களோ..... ஆத்தாடியோவ்!!!! மம்மி செஞ்சாலும் செய்வாங்கப்பா....//

:D அடுத்தமுறையும் பதவி வந்தா தெரியும். பார்ப்போம்.

//எந்த அரசு அப்படி வெவரமா கணக்கு சொல்லிருக்கு.... மம்மிய மட்டும் கேக்குறீக???//

எல்லா அரசையும் வெளிப்படையாக இருக்க வைப்போம். நாட்டில் லஞ்சம், ஊழல் குறையும்.

//சமீபத்துல ஒரு பெரியவரு சொன்னாரு.... அந்த காலத்துல அரசாங்கம் பள்ளீக்கூடத்தை நடத்திச்சு, தனியார் சாரயக்கடையை நடத்தினாங்க, இப்ப என்னடான்னா எல்லாம் தலைகீழா நடக்குதுன்னு.... உண்மைதானே! அரசாங்கம் நாட்டின் முக்கியத்தேவை சாராயம்னு நெனைக்குது.... //

வேதனையான உண்மை இது.

//குடி மகன்கள் மட்டுமாவது ஓட்டு போடட்டுமேன்னு இருக்குமோ!!!...... இல்ல அவங்களோட ஓட்டுதான் அதிகமா?..... //

குடிமக்களாக மாறினா தானே சிந்திக்கும் அறிவு இல்லா அடிமைகளாக இருப்பாங்க.

நன்றி சித்தி!

thiru said...

//Dharan said...
mummy க்கே கேள்வியா????

காத்திருக்கிறது KANCHA//

:D :P

krishjapan said...

என்னாங்கய்யா இது. அம்மாவக் கேள்வி கேட்டு, இவரு பதிவ போட்டா, நிறைய பின்னூட்டம் வருது, +குத்து விழுது. அங்க ஒருத்தரு அய்யாவக் கேள்வி கேட்கிறாரு, சீந்தவே மாட்டேன்றாங்க, பதிவே எங்கியோ போயுடுது. என்ன நடக்குது இங்க....

Bharaniru_balraj said...

அண்ணா தி மு க விற்கு அண்ணா பாணியில் தீர்க்கமான கேள்விகள்.

சட்ட சபையில் ஜெயலலிதா சொன்னது
" அவர்கள் எலிக்கறியை பசிக்காகச் சாப்பிடவில்லை
ருசிக்காகச் சாப்பிட்டார்கள்."

இப்படிச்சொன்னவுடன் பெஞ்சுதட்டிகள் அனைவரும் கரகோஷம் செய்கிறார்கள்.

மக்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது.

Muthu said...

நல்ல கேள்விகள்...வாழ்த்துக்கள் திரு..ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டை குத்தும் பெண்களுக்கு இவை போய்சேருமா?

Radha N said...

எல்லா அரசியல்வாதியும் தேவையற்ற செலவுகள் (ஓட்டுக்காக மக்களை கவர) செய்யும் போது அரசு கஜானா காலியாகின்றது. தொடர்நிகழ்வுகளுக்கு செலவுசெய்ய பணம் தேவையாகும் பட்சத்தில் அடுத்தவனிடம்(வேற யா ரு?) கடன்வாங்க கையேந்தவேண்டியது. பின்பு அவன் சொன்னபடியெல்லாம் செலவினத்தினை குறைக்க புதியசட்டங்களை இயற்றி நிறைவேற்றுவது. ஆனால் ஒன்று இந்த விசயத்தில் ஜெயலலிதாவை பாராட்டியே ஆகவேண்டும். உண்மையில் உங்கள் மனசா ட்சியைத் தொட்டுக்கேட்டுப்பாருங்கள் (நான் சொல்லுறது எரிய கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளி ଭ ஆனாலும் அளவு வித்தியாசம் இருக்கில்லே!)

நீங்க ஜெயலலிதாவை இவ்வளவு சாடினாலும்... கருணாநிதியின் தேர்தல் அறிவிப்பு, தான் அடுத்தமுறை வருவதற்கு வாய்ப்பு இல்லையோ என்ற பயத்தினைதானே காட்டுகிறது. அப்படியானா ல் அவர் ஏதோ ஒருவகையில் ஜெயின் ஆட்சிக்கு அங்க ଡ଼'அ3காரம் அளிப்பதாகவே தான் தோன்றுகிறது.

பழம்பெரும் அரசியல்வாதி கலர்டீவி, இரண்டு ரூபா ய்க்கு அரிசி என்று இவ்வளவு கீழே ஏன் இறங்கவேண்டும்?

thiru said...

//selvan said...
Just like that we cannot blame jaya administration since she has taken stringent action against govt. employees. Public were supported jaya. Only opposition parties made this as a big issue.//

செல்வன், உங்கள் வரவிற்கு நன்றி!

அரசியல் அறியாமை நினைத்து வருத்தப்படுவதை தவிர வேறு என்ன செய்ய இயலும் என்னால்? அரசு ஊழியர் விவகாரம் பற்றிய எனது கேள்விகளுக்கு முடிந்தால் இந்த பதிவில் பதில் சொல்லுங்கள் http://aalamaram.blogspot.com/2006/04/blog-post_09.html

ஊழியார்களின் உரிமையை பறிப்பது தான் administrative skill என்றால் அதற்க்கு மறு பெயர் அடக்குமுறைத்தனம்.


//Bloody the same opposition parties do not have any interest to support jaya on cauvery issue, sunami relief, flood relief etc. You can understand from the above that all opposition parties are not bothered in public welfare and their aim is only to blame jaya. Jaya spent more times on convinicing public for the issues twisted by opposition parties. All should note one thing that she is alone handling the opposition parties. If jaya not exist in politics, nobody can save TN from DMK's family hand.//

காவேரி விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கையில் ஜெயலலிதா அரசு என்ன செய்தது என்பதையும் உணர்ந்து கருத்தை சொல்லுங்களேன். I am least bothered about DMK. மாநில ஆட்சி அதிகாரம் யாருடைய கையில் இருந்தது? ஜெயலலிதா-சசிகலா-நடராஜன் குடும்பம் தமிழ்நாட்டிற்கு பாலும் தேனும் வழங்குகிறதா? மணற்கொள்ளையிலும், மது விற்பனையிலும் பணம் சசிகலா குடும்பம் கொள்ளையிடுகிறதா இல்லையா?

எந்த குடும்பமாக இருப்பினும் அவர்களது மோசடிகளிலிருந்து நாட்டை காப்பது கடமை. என் பதிவு முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு. இவை கேள்விகளில் சில மட்டுமே.

thiru said...

//நாகு said...
எல்லா அரசியல்வாதியும் தேவையற்ற செலவுகள் (ஓட்டுக்காக மக்களை கவர) செய்யும் போது அரசு கஜானா காலியாகின்றது. தொடர்நிகழ்வுகளுக்கு செலவுசெய்ய பணம் தேவையாகும் பட்சத்தில் அடுத்தவனிடம்(வேற யா ரு?) கடன்வாங்க கையேந்தவேண்டியது. பின்பு அவன் சொன்னபடியெல்லாம் செலவினத்தினை குறைக்க புதியசட்டங்களை இயற்றி நிறைவேற்றுவது. ஆனால் ஒன்று இந்த விசயத்தில் ஜெயலலிதாவை பாராட்டியே ஆகவேண்டும். உண்மையில் உங்கள் மனசா ட்சியைத் தொட்டுக்கேட்டுப்பாருங்கள் (நான் சொல்லுறது எரிய கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளி ଭ ஆனாலும் அளவு வித்தியாசம் இருக்கில்லே!)

நீங்க ஜெயலலிதாவை இவ்வளவு சாடினாலும்... கருணாநிதியின் தேர்தல் அறிவிப்பு, தான் அடுத்தமுறை வருவதற்கு வாய்ப்பு இல்லையோ என்ற பயத்தினைதானே காட்டுகிறது. அப்படியானா ல் அவர் ஏதோ ஒருவகையில் ஜெயின் ஆட்சிக்கு அங்க ଡ଼'அ3காரம் அளிப்பதாகவே தான் தோன்றுகிறது.

பழம்பெரும் அரசியல்வாதி கலர்டீவி, இரண்டு ரூபா ய்க்கு அரிசி என்று இவ்வளவு கீழே ஏன் இறங்கவேண்டும்?//

தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள இலவசங்கள் பற்றிய உங்கள் கேள்விக்கும் பதிவிற்கும் சம்பந்தமில்லை. இலவசங்களின் பிறப்பு திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் காலம் முதல் இன்று வரை இலவசங்கள் பற்றி ஆராயவேண்டிய தேவை தமிழக அரசியலுக்கு அவசியம். இது பற்றி தனிப் பதிவில் விவாதிக்கலாம்.

செல்வி.ஜெயலலிதா அரசின் வெளிப்படையற்றதன்மை, சுனாமி நிவாரண முறைகேடுகள், வேலைவாய்ப்பை ஒழித்தது என அலசப்பட்டுள்ள விடாயங்களை பார்க்கையில் செல்வி.ஜெயலலிதா ஒரு மிகவும் மோசமான, ஆபத்தான முதல்வர். அடக்குமுறை, அதிகாரத்திமிர் பிடித்த ஆட்சியாளர் யாராக இருப்பினும் பாராட்ட எனக்கு தாராள மனதில்லை. மக்கள் தேர்ந்தெடுத்த நாம்பிக்கையை கெடுத்துவிட்டு அதே வாக்குறுதியை மீண்டும் சொல்வது செல்வியின் மோசடி என்பதை நாம் அறிந்துகொள்ளல் அவசியம்.

திரு.கருணாநிதியுடன் ஒப்பீடு செய்வீர்களானால் அவரது கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு பாருங்கள். பதிவின் நோக்கம் அதுவல்ல.

செல்வி.ஜெயலலிதாவையும் தமிழகத்தின் கடந்தகால முதல்வர்களையும் ஒப்பிட்டு பார்க்கமுடியாது அது தான் உண்மை. ஆடம்பர வீண்செலவுகள், சட்டமன்ற கூட்டத்தை துதிபாடும் மாடமாக்கியது, காவல்துறை அத்துமீறல்கள், மிகவும் மோசமான பொருளாதார திட்டங்கள் என பலவற்றை குறிப்பிடலாம்.

சன்.டி.வி - ஜெயா டிவியை குறிவைத்து பார்ப்பதல்ல அரசியல் பார்வை. தமிழக மக்கள் வாழ்வின் வளர்ச்சி, வீழ்ச்சி அடிப்படையாக வைத்து பார்த்தால் கேள்வியின் நியாயம் புரியும்.

Machi said...

நல்ல கேள்விகள். திமுக மேடைப்பேச்சாளர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மணிக்கணக்கா அதிமுக அரசை விளாசலாம்.
நாளைக்கு மந்திரியா இருப்பமான்னே தெரியாம ஐயமா இருக்கறப்போ எப்படி மந்திரி துறையை நிர்வகிப்பார்? அப்புறம் நிர்வாகம் எப்படி ஒழுங்கா நடக்கும்? கேள்வி மாதிரி போயிடுச்சோ? :-))

கப்பி | Kappi said...

நல்ல கேள்விகள் திரு...

அதிமுக ஆட்சி திரும்ப வர வேண்டும் என்பவர்களிடம் நான் கேட்பது ஒரே கேள்வி தான்...

'2004 தோல்விக்குப் பிறகு இந்த அரசு தவறுகளை திருத்திக் கொண்டதாக கூறிக்கொண்டாலும், அதிமுக ஜெயித்தால் மீண்டும் 2001-04 போல் தான்தோன்றி தனமான ஆட்சியை தராது என்பதற்கு என்ன நிச்சயம்??'

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com