Friday, March 30, 2007

கொக்கு பிடிக்க வெண்ணையும், பார்ப்பனீய தேசியமும்!

கொக்கு பிடிப்பது எப்படி என்பது பற்றி கிராமத்தில் ஒரு கதை சொல்லுவார்கள். "கொக்கு தலையில் வெண்ணை வைத்து, வெண்ணை உருகி கொக்கு தலையில் வழிந்து அதன் கண்களை மறைக்கும் போது, கொக்கை அமுக்கி பிடிக்கலாமாம். கேட்க அழகாக இருக்கும் இந்த கதை நடைமுறை சாத்தியமா? 'கலாச்சார தேசியம்' என்னும் வெண்ணையை ஒடுக்கப்பட்ட மக்கள் தலையில் வைத்து கொக்கு போல அமுக்கப் பார்க்கிறார்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள். அந்த தந்திரத்தை வெளியிடுபவர்களை அல்லது எதிர்ப்பவர்களை 'தேசத்தின் எதிரிகள்' என அழுவது வாடிக்கை. எந்த தேசத்துக்கு எதிரிகள்?

பிராமணா அல்லாத எவரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை! இது ஆங்கிலேய காலனியாதிக்க காலத்தில் வைத்த அறிவிப்பு பலகையல்ல. தமிழகத்தின் இராமேசுவரத்தில் இன்றும் இருக்கிற அறிவிப்பு தான் இது (படம்: நன்றி! யெஸ். பாலபாரதி). "பிராமணாள் ஹோட்டல்" நடத்திய பார்ப்பனீய கும்பல் பெயரை மாற்றும் நிலையை ஏற்படுத்தியது பெரியாரியம். இருந்தும் இன்றைக்கும் கூட இப்படி ஒரு அறிவிப்பு பலகை தமிழகத்தில் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனீயமே ஆட்சியாக இருந்த நிலையில் எப்படி இருந்திருக்கும்? இன்றும் வட இந்தியாவில் தமிழகத்தை விட கேவலமான நிலையில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தப்படுகிறார்கள். "ஆர்.எஸ்.எஸ் காரன் தலித் கடையில் சாயா சாப்பிட்டு சாதியை ஒழிக்கிறான். தலித்தை உள்ளே விடாத கோயில்களில் பிச்சை எடுக்கிறான்." என சம்பந்தமில்லாது பேசி பார்ப்பனீயத்திற்கு வால் பிடிக்கும் நரிகள் இந்த படத்திற்கு என்ன மழுப்பல் வைத்திருக்கிறார்களோ?

புனித பண்டமான பார்ப்பனீய இந்துமதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தருவது பார்ப்பனீயத்தின் கண்டுபிடிப்பான தீட்டு மட்டும் தான். 19ம் நூற்றாண்டில் பார்த்தாலே தீட்டு "எட்டிப்போ". 21ம் நூற்றாண்டில் பிராமணா அல்லாத எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை! தீட்டு கோவில்களிலும், தெருக்களிலும் மட்டுமல்ல, உயர்கல்வி நிலையங்களிலும் தான். தீட்டின் வடிவம் தான் மாறுபடுகிறது. தெருக்களுக்கு அறிவிப்பு பலகை. IIT, IIM போன்ற உயர் கல்விநிலையங்களாக இருந்தால் உச்சநீதிமன்ற போய் எழுதி வாங்கி வரும் இடைக்கால தடை. நீதிமன்றம் எதை அடிப்படையாக வைத்து தீர்ப்பு எழுதுகிறது என கேட்காதீர்கள். தேசிய துரோகி ஆகிவிடுவீர்கள். எந்த தேசமா? அது தான் பார்ப்பனீய தேசியம்.


Nationalism is an infantile disease. It is the measles of mankind. Albert Einstein

இப்படித்தான் பார்ப்பனீய தேசியத்தை சுட்டும் விதமாக கடந்த பூங்கா இதழில் ஆசிரியர் குழு எழுதிய தலையங்கத்தை வைத்து பார்ப்பனீய/இந்துத்துவ தீவிரவாதிகள் திசைதிருப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் கொலைசெய்யப்பட்டதையொட்டி, பார்ப்பனீயத்தின் பன்முக வடிவங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்குள் இயங்குவதை தலையங்கம் குறிப்பிட்டிருந்தது. பார்ப்பனீயத்தை எதிர்ப்பது தேசவிரோதமாம். மனுதர்ம குப்பையை உயர்ந்ததாக தூக்கிப்பிடிக்கும் வரிசையில் இது அடுத்த வருகை.


The Brahmana is declared (to be) the creator (of the world), the punisher, the teacher, (and hence) a benefactor (of all created beings); to him let no man say anything unpropitious, nor use any harsh words.
- மனுதர்மம் 11 அத்தியாயம், 35.

வலதுசாரி இந்துத்துவம் இன்று உழைக்கும் மக்களை தங்களது தீவிரவாத செயல்களுக்கு அடிமையாக்க காவிப்பட்டாளத்தை உருவாக்கி வருகிறது. இந்துத்துவ தீவிரவாதத்திற்கு அமெரிக்கா,ஆஸ்திரேலியா, பிரித்தானியா, கானடா, ஐரோப்பிய நாடுகள் என பல வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான பணம் வசூலிக்கப்படுகிறது. தனது நோக்கத்திற்கான மறைமுக நிதியை திரட்ட இயற்கை பேரிடர்களையும், வறுமை, கல்வியின்மை போன்ற அவலங்களை பயன்படுத்தி சேவை என்ற பெயரில் பெரும் நிதி வசூலிக்க தனி அமைப்புகளை பார்ப்பனீய இந்துத்துவம் இயக்குகிறது. இவ்வாரு திரட்டப்படும் பெரும் தொகையில் சிறுபகுதி நிதியை சேவைகளுக்கும், பெரும் தொகை இந்துத்துவ நிழல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு 'மிசநரிகளுக்கு' ஒரு முகமும், உள்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னொரு முகமுமாக மத தீவிரவாதத்தை வளர்ப்பது தான் இன்றைய இந்துத்துவம். இதன் துவக்கம் இன்று நேற்றல்ல காலனியாதிக்க காலத்திலேயே துவங்கியது.

வலதுசாரி தீவிரவாத இந்துத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பை உருவாக்கி 1925ல் துவங்கி வைத்தார்கள் மராட்டிய மாநில சித்பவன் பார்ப்பனர்கள். All road goes to Rome என்பது போல இந்தியாவின் மத தீவிரவாதம் துவங்கும் முடிச்சு ஆர்.எஸ்.எஸ். அதன் பின்னால் சித்பவன் பார்ப்பனீய கனவு! பார்ப்பன மேலாதிக்கம் எப்போதெல்லாம் ஆட்டம் கண்டுவிடுமோ அப்போதெல்லாம் தாக்குதல்களை புது முகங்கள் வழியாக தொடுத்தே பார்ப்பனீயம் வந்திருக்கிறது. ஒவ்வொரு முகமூடிக்கும் ஒரு வேலை பார்ப்பனீயத்தில் இருக்கும். கொலைக்களத்தை அதிகாரமயப்படுத்திய மோடிக்கும் இடமுண்டு. சட்டத்துக்கு புறம்பாக மசூதியை இடிக்க ஆள் சேர்த்த அத்வானிக்கும் இடமுண்டு. பசப்பு வார்த்தைகள் பேசும் வாஜ்பாய்க்கும் இடமுண்டு. தங்களது சித்பவன பார்ப்பனீய கனவை பாதிக்காது என்றால் அப்துல்கலாமையும் சேர்த்துக்கொள்வார்கள்.

ஆனால், தங்களது கனவிற்கு சிறு இடைஞ்சலானால், இராமனை கும்பிட்ட காந்தியாக இருப்பினும் கொன்று கைலாயத்துக்கு அனுப்ப கோட்சே என்னும் கொலைகாரனை உருவாக்குவார்கள். காந்தியை கொலை செய்த கோட்சே கண்டதும் இந்துத்துவ கனவு தான். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை தீயிட்டு பொசுக்கியதும் இந்துத்துவ முகங்கள் தான். குஜராத்தில் உயிருக்கு பயந்து தப்பியோடிய பெண்களை சுற்றி வளைத்து பாலியல் பலாத்காரம் செய்து படுகொலைகள் செய்தது இந்த முகம் தான். காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரை உயிரோடு எரித்து கொன்ற காலிகள் கூட்டத்தின் முகங்கள் இந்துத்துவம். சாதிக்கலப்பு திருமணம் செய்தவர்களை வேட்டையாடி கொலை செய்த தொடர் கொலையாளனின் முகம் இந்துத்துவம். ஒரிசாவில் பாதிரியார் மற்றும் இரு பிள்ளைகளை உயிரோடு கொழுத்திய 'புண்ணியவான்' தாராசிங்குக்கு இந்துத்துவ முகம் தான். உழைப்பை சுரண்டியதை எதிர்த்து எழும்பிய தலித்களை கொன்று குவிக்க ரன்வீர் சேனா படையும் இதில் ஒரு முகம் தான். இந்தியா பாகிஸ்தான் என எல்லைப் பிரிவினைக்கு முதல் அடி எடுத்து வைத்தவரும், காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவட்டவருமான சாவர்க்கர் உருவாக்கியது இந்துத்துவ முகம் தான். இந்த இந்துத்துவ முகத்தை பெற்றெடுத்தவரும் இவரே. அவர் உருவாக்கிய இந்துத்துவம் என்கிற பார்ப்பனீய கொள்கை தான் இன்று இந்து தீவிரவாதிகளை உருவாக்கும் மூளைச்சலவை பட்டறைகளாக உருவெடுத்து நிற்கிறது. எதிர்காலத்தில் இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் எதிரான பயங்கரவாதிகள் இந்துத்துவவாதிகள்.

உழைக்கும் மக்களின் கருப்பசாமி, மூதேவி, மதுரை வீரன், சுடலைமாடன்....போன்ற நாட்டார் தெய்வங்களை தங்களது பார்ப்பனீய கடவுள்களின் புட்டியில் அடைத்து, "நாமெல்லாரும் இந்து! வாங்க! வாங்க...!" என அடியாள் படையை திரட்டும் இவர்கள் உழைக்கும் மக்களது எந்த பிரச்சனைக்கும் உண்மையாக போராடியதில்லை. தெய்வங்களை அடிமைப்படுத்துவதன் வழி ஒரு இனத்தையே அடிமைப்படுத்தலாம். இதையே பார்ப்பனீயம் வரலாற்று காலம் முதல் செய்து வருகிறது. கடந்த காலங்களில் தீட்டாக ஒதுக்கி வைக்கப்பட்ட சுடலைமாடனும், கருப்பசாமியும், பேச்சியும் இன்றைய இந்துத்துவ பார்ப்பனீயத்தின் அரசியல் ஆதாயத்திற்கு அவசியமாகிறது.

இந்துத்துவத்தின் மிதவாத வடிவம் காங்கிரஸ் அமைப்பில் இருந்தது. இன்னும் இருக்கவே செய்கிறது. அடிப்படைக் கொள்கையும், அமைப்பு மாற்றமும் இல்லாவிட்டால் ஆட்சி மாறினாலும் பார்ப்பனீயம் நிலைத்திருக்கும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இந்திய அரசு கொடுத்த அறிக்கை.

Mr. GUPTA (India): "......The so-called fourfold scheme of the Brahmin, the warrior, the commoner and the untouchable was a myth and did not exist in reality..."

Fifteenth to nineteenth periodic reports of India
COMMITTEE ON THE ELIMINATION OF RACIAL DISCRIMINATION
Seventieth session
SUMMARY RECORD OF THE 1796th MEETING
Held at the Palais Wilson, Geneva,
on Friday, 23 February 2007 at 3 p.m.


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மாயை தரும் பரிசு இது தான். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று சொல்லப்படும் நான்கு அடுக்குநிலை என்பது ஒரு கற்பனை, இந்தியாவில் அது இருந்ததில்லை. என சாதிப்பது பா.ஜ.க அரசு அல்ல. பார்ப்பனீய அதிகாரிகளால் நிறைந்திருக்கும் இந்திய ஒன்றியத்தின் காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆட்சிகள் மாறினாலும் அதிகார வர்க்கம் பார்ப்பனீயத்தின் கையில் தான். இது தான் இந்திய தேசியம். இந்த பார்ப்பனீய தேசியத்தை கேள்வியெழுப்பினால் தேசதுரோகிகள் தான். பகத்சிங் வரிசையில் இந்த தேசதுரோகிகள் பலர் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். பார்ப்பனீய தேசிய மாயை ஒழிக்கப்படும் வரை இன்னும் இருப்பார்கள்.

இந்தியா என்கிற துணைக்கண்ட நிலப்பரப்பில் பல கலாச்சாரங்கள், மதங்கள், இனங்களை சார்ந்த மக்கள் வாழுகின்றனர். இந்தியா என்ற பெயர் உருவாகும் முன்னரே இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையோரின் ஆதி நிலமாகவே இந்திய நிலம் இருந்து வந்திருக்கிறது. ஆரியர்கள் 'படையெடுப்பிற்கு' (யுத்தம் நடத்துபவன் மட்டுமல்ல படையெடுப்பவன், கலாச்சாரத்தை அழிப்பவனும் தான்) முன்னரே இங்கு மக்கள் குழுக்களாக, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தியா என்கிற துணைக்கண்ட நிலப்பரப்பையும் அதில் வாழும் மக்களையும் 'இந்து' என்கிற பார்ப்பனீய 'கலாச்சார தேசியத்தில்' அடைத்து பார்க்கும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

ஆங்கிலேயர்கள் காலனியாதிக்கத்திற்கு முன்னர் இந்தியா ஒற்றை நாடாக எந்த காலத்திலும் இருக்கவில்லை. ஆதியில் நாடு, தேசியம் என்னும் கோட்பாடுகள் தோன்றியிருக்கவில்லை. நிலப்பரப்புகள் அனைத்தும் பொதுவாகவே இருந்தன. அடுத்தடுத்த கட்டங்களில் மனித குழுக்கள் தாங்கள் நடமாடிய இடங்களை சொந்தம் கொண்டாடவும், கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் துவங்கினர். முதலாளித்துவத்தின் முதல் கட்டமான நிலவுடமை சமுதாயம் துவங்கியது இப்படி தான். பின்னர் மனிதக்குழுக்களின் தலைமைகள் கட்டுப்பட்டில் மக்களும், உடமைகளும் இயங்க ஆரம்பித்தன. சட்டங்கள், ஒழுங்குமுறைகள், காவலாளிகள் என அதிகார மயப்படுத்தல் உருவானது. தொடர்ந்து மன்னராட்சி உருவானது. மன்னர் காலங்களில் கூட இந்தியா என ஒற்றை நாடு இல்லை. மகத நாடு, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என பகுதிகளாகவே இயங்கியது. சில நாடுகள் இன்றைய சிறு மாவட்ட அளவு கூட இருக்கவில்லை. ஆங்கிலேயர்களின் காலனியாதிக்க நிர்வாக வசதிக்காக தான் இந்தியா என்னும் ஒற்றைமுறைப்படுத்தல் முதலில் துவங்கியது. இந்தியாவை உருவாக்கும் போது காலனியாதிக்க தலைமை இந்த நிலப்பரப்பின் தேசிய இனங்களின் கனவு என்ன என பார்க்கவில்லை. ஒரே நாடாக எல்லைக்கோட்டை வரையறுத்த ஆங்கிலேயனின் மாயையில் ஒரே தேசியம் என பார்ப்பனீயம் பேசி திரிகிறது. இந்தியா ஒரு துணைக்கண்டம் இங்கு வாழும் மக்கள் ஒரே தேசிய இனத்தை சார்ந்தவர்களல்ல. பல்வேறு தேசிய இனங்களில் கூட்டமைப்பே இந்தியா. இந்த பன்முகத்தன்மை தான் அழகு.

1947 ஆகஸ்டு செல்வாக்கு மிக்க பார்ப்பனீயவாதிகளுக்கு அதிகாரத்தை எழுதி கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள். அன்று முதல் இன்று வரை அரசு அதிகாரம், நீதிமன்றம், பாராளுமன்றம், பத்திரிக்கை என அனைத்தும் பார்ப்பனீய ஆதிக்க மயம் தான் தேசியமாக கற்பிக்கப்படுகிறது. இதன் செயல், சிந்தனை என அனைத்தும் பார்ப்பனீய ஆதிக்கமாகவே இருக்கிறது. இந்த பார்ப்பனீய அதிகார ஒற்றைமயப்படுத்தலுக்கு என்றும் சவாலாக இருப்பவர்கள் பொதுவுடமையாளர்கள், பெண்ணின விடுதலையாளர்கள், தலித்தியம்/அம்பேத்காரியம், பெரியாரியம் போன்ற முற்போக்காளர்கள். அதனால் தான் முற்போக்கான எந்த விசயத்தையும், சொல்லையும், செயலையும் ஏற்க முடியாத நிலையில் பார்ப்பனீய இந்துத்துவம் இருக்கிறது. இந்துத்துவத்தின்/பார்ப்பனீயத்தின் எதிரிகள் தேசவிரோதிகள் என்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது பார்ப்பனீய 'கலாச்சார தேசியம்'. மனிதம் என்னும் உயரிய விழுமியம் காக்கப்பட பார்ப்பனீய 'கலாச்சார தேசிய மாயை' உடைக்கப்பட வேண்டியது அவசியம்.

இப்போது சொல்லுங்கள் பூங்கா தலையங்கம் எந்த தேசியத்திற்கு எதிரானது? நேரடியாகவே பார்ப்பனீய 'ஒற்றைமுறைப்படுத்தலுக்கு' எதிரானது. தேசியத்தையும் பார்ப்பனீயத்தையும் போட்டு குழப்பும் இந்துத்துவ வேடங்களை அடையாளம் கண்டு கொள்வோம்.

Our true nationality is mankind. H. G. Wells

19 பின்னூட்டங்கள்:

Anonymous said...

என்ன வெங்காயமோ, ஒண்ணும் புரியல்ல.... பெரியாரையும், மார்க்ஸ், ஸ்டாலின் இப்படின்னு செத்த கொள்கைகளை கட்டிகிடு அழுவது உங்களுக்கு பிடிக்கிறது செய்யிங்க.....

அருண்மொழி said...

வந்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ மாதரம் (மூச்சு வாங்குதுபா).

ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்.
.
.
.
.
.
பாரத் மாத்தாகி ஜே.

thiru said...

//Anonymous said...
என்ன வெங்காயமோ, ஒண்ணும் புரியல்ல.... பெரியாரையும், மார்க்ஸ், ஸ்டாலின் இப்படின்னு செத்த கொள்கைகளை கட்டிகிடு அழுவது உங்களுக்கு பிடிக்கிறது செய்யிங்க.....//

பெரியாரியம், மார்க்ஸியம் எல்லாம் செத்து போச்சுங்களா? எத்தனை மணிக்குங்க? அப்புறம் ஏனுங்க பெரியார் பெயரை கேட்டாலே இந்த நடுக்கம்? உங்களோட பெரிய சிரிப்பா இருக்கு.

thiru said...

//அருண்மொழி said...
வந்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ மாதரம் (மூச்சு வாங்குதுபா).

ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்.
.
.
.
.
.
பாரத் மாத்தாகி ஜே.//

ஆமா அருண்மொழி நானும் சொல்ல மறந்தது இது. என்னோட நண்பர் ஒருவர் சொல்லுவார் "வந்தே....ஏமாத்திறோம்"

"பாரத் மாத்தக்கி ஜொயிங்..."

:))

Anonymous said...

//ஏனுங்க பெரியார் பெயரை கேட்டாலே இந்த நடுக்கம்? உங்களோட பெரிய சிரிப்பா இருக்கு//

எத்தனை முறை சூப்ரிம் கோர்ட் அடித்தாலும் மண் ஒட்டாத கும்பல பார்த்து எங்களுக்கும் தான் சிரிப்பா இருக்கு. பெரியார் ஏங்கே?...

thiru said...

//Anonymous said...
எத்தனை முறை சூப்ரிம் கோர்ட் அடித்தாலும் மண் ஒட்டாத கும்பல பார்த்து எங்களுக்கும் தான் சிரிப்பா இருக்கு. பெரியார் ஏங்கே?...//

மனுதர்மம் தான் நீதின்னு சொல்ல வறீங்களா அனானி? இந்த தீர்ப்புகள் மாறும். மாற்றப்படும் அனானி. இதுக்கே சிரிச்சீங்கன்னா...

சரி கட்டுரையில 'பார்ப்பனீய தேசியம்' பற்றி எழுதியிருக்கேன். அதுக்கு பதில் சொல்லுங்க. இடப்பங்கீடு பற்றி தனிப்பதிவு போடுவேன். அப்போ தவறாம வாங்க. சொந்த பெயரிலயே வாங்க.

Anonymous said...

//அன்று முதல் இன்று வரை அரசு அதிகாரம், நீதிமன்றம், பாராளுமன்றம், பத்திரிக்கை என அனைத்தும் பார்ப்பனீய ஆதிக்க மயம் தான் தேசியமாக கற்பிக்கப்படுகிறது. இதன் செயல், சிந்தனை என அனனத்தும் பார்ப்பனீய ஆதிக்கமாகவே இருக்கிறது. இந்த பார்ப்பனீய அதிகார ஒற்றைமயப்படுத்தலுக்கு என்றும் சவாலாக இருப்பவர்கள் பொதுவுடமையாளர்கள், பெண்ணின விடுதலையாளர்கள், தலித்தியம்/அம்பேத்காரியம், பெரியாரியம் போன்ற முற்போக்காளர்கள். அதனால் தான் முற்போக்கான எந்த விசயத்தையும், சொல்லையும், செயலையும் ஏற்க முடியாத நிலையில் பார்ப்பனீய இந்துத்துவம் இருக்கிறது. இந்துத்துவத்தின்/பார்ப்பனீயத்தின் எதிரிகள் தேசவிரோதிகள் என்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது பார்ப்பனீய 'கலாச்சார தேசியம்'. மனிதம் என்னும் உயரிய விழுமியம் காக்கப்பட பார்ப்பனீய 'கலாச்சார தேசிய மாயை' உடைக்கப்பட வேண்டியது அவசியம்.
//நன்று சொன்னீர் திரு.


இணையத்தில், இந்த தேசிய மாயையைத்
(எல்லாம் கலிகாலம்டீ இது, நம்ம தெருவுக்குள் கூட நுழைய அனுமதி இல்லாததுகளெல்லாம், இணையத்துள் நுழைந்து கேள்வி கேக்குதுகள், கலிகாலம்)
தக்கவைத்துக் கொள்ள முடியாதோ என்ற பதைப்பு நிறையத் தெரிகிறது பலபேரிடம். அதைக் கூட அறியாமலா இணையத்தில் எழுத "இது வரை அடிமைப் படுத்தப் பட்ட, அடுமைப் படுத்தப்பட்டவருக்காகப் போராடும் கூட்டம்" வந்திருப்பார்கள் என நினைக்கிறார்கள். ஆகா.


பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்த அற்புத வாழ்க்கை இந்த "சிறுபிள்ளைத்தனமான பெரியாரியவாதிகள், தேசிய விரோதிகள்.... இன்ன பிற அடையாளங்களைக் கொண்ட மக்களால்" அழிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அப்படி ஆட்டுவிக்கிறது அவர்களை, சிரிக்கத்தான் முடிகிறது என்னால் இதனைப் பார்த்து.


நன்றி, இந்தப் பதிவுக்கு. இன்னும் எழுதலாம், நேரமின்மை காரணமாக இத்துடன் முடிக்கிறேன், மன்னிக்கவும்.


எழுதுங்கள் திரு.


சாரா.

தருமி said...

//எத்தனை முறை சூப்ரிம் கோர்ட் அடித்தாலும் மண் ஒட்டாத கும்பல பார்த்து ...//

இதற்குத்தான் அதிகார மமதை என்று பெயர் சொல்லுவார்களோ?

தருமி said...

//தங்களது கனவிற்கு சிறு இடைஞ்சலானால், இராமனை கும்பிட்ட காந்தியாக இருப்பினும் கொன்று கைலாயத்துக்கு அனுப்ப கோட்சே என்னும் கொலைகாரனை உருவாக்குவார்கள்...//

தாக்கம் தந்த வரிகள்..

நல்ல கட்டுரை. நன்றியும் வாழ்த்துக்களும்.....

Anonymous said...

எத்தனை பெரியார் வந்தாலும் இந்த இந்துத்வா வந்திகளை திருத்த முடியாது.அவ்வளவு கேவலமான பிறவிகள் அவர்கள்

Anonymous said...

very good article with deep resarch of cuases and effects hindu society,
keep it up... and continue your writings to abolish this dirty system from indian sub continent.
apparently it is confirmed that the concept of india is a very true cheating to dominate the very diversified locals of this continent.we need to create strong force to counter this brain washing terrorism
sundar

Anonymous said...

//எத்தனை முறை சூப்ரிம் கோர்ட் அடித்தாலும் //

Reservation should be implemented in Supreme court to avoid biased judgements..

Hariharan # 03985177737685368452 said...

//பெரியாரியம், மார்க்ஸியம் எல்லாம் செத்து போச்சுங்களா? எத்தனை மணிக்குங்க? அப்புறம் ஏனுங்க பெரியார் பெயரை கேட்டாலே இந்த நடுக்கம்? உங்களோட பெரிய சிரிப்பா இருக்கு. //

"வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை " என முழங்கினால் அது ஜனநாயக சாதி ஒழிப்பு முழக்கம் என்று ஆட்சி அதிகாரத்திற்குத் தேர்தல் கூட்டணி காணும் பகுத்தறிவு சுயமரியாதை இயக்க இஸ ஈயங்களோட பெரிய சிரிப்பா இருக்குங்க!

ராமேசுவரக் கோவில் மடப்பள்ளியில் இருக்கும் அறிவிப்பு அநாகரீகம், நீக்கப்படவேண்டியதுன்னு சொல்லுங்க சரி! நியாயாமானது!

அன்னியருக்கு இல்லாத வன்னியர் ஓட்டைப் பெற்று தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் கையாலாகாத அரசு பதவி விலகலாமே! இந்த ஒரு காரணத்துக்காகவே!

அடிங்க அடிங்க ஜல்லி! நல்லா நல்லாச் சொல்லி! :-))))

thiru said...

//Hariharan # 03985177737685368452 said...
அன்னியருக்கு இல்லாத வன்னியர் ஓட்டைப் பெற்று தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் கையாலாகாத அரசு பதவி விலகலாமே! இந்த ஒரு காரணத்துக்காகவே!//

ஹரிஹரன்,

படத்தில் இருக்கிற அறிவிப்பு இருப்பது பார்ப்பனீயம் கோலோச்சும் ஒரு கோவிலில்.

பார்ப்பனீயவாதிகள் சுவரில் எழுதிய பலகையையும், மனதில் இருக்கும் சாதி உயர்த்தல் அழுக்கையும் அழிக்க கருணாநிதியின் பதவி விலகல் தான் தீர்வு? அது நடந்தால் இந்தியா முழுமையும் சாதி பாகுபாடு இல்லாமல் சமமாக வாழ ஆரம்பித்து விடுவார்களா? கருணாநிதி தான் மொத்த இந்தியாவின் சாதிப் பிரச்சனைக்கும் காரணமா?

முன்பொருமுறை, இரட்டை டம்ளர் வைத்திருக்கும் கடைகளை புறக்கணித்து தலித் மக்கள் தங்களுக்கான கடைகளை திறக்க ஒரு வலைப்பதிவர் ஆலோசனை கூறியிருந்தார். அதே பதிலை இந்த கோவில் பிரச்சனைக்கு பயன்படுத்தினால், பார்ப்பனீய இந்து மதத்தை விட்டு பிராமணர் அல்லாதார் அனைவரும் வெளியேறுவது தான் நல்லது.

Hariharan # 03985177737685368452 said...

//கருணாநிதி தான் மொத்த இந்தியாவின் சாதிப் பிரச்சனைக்கும் காரணமா? //

கண்டிப்பாக கருணாநிதியும் ஒருவர்.
கருணாநிதியின் வளமான வாழ்வுக்கு சாதி அவசியம். 234 தொகுதிகளிலும் சாதிவாரியாக சட்டமன்ற வேட்பாளர்களை நிறுவி சாதிப்பிரச்சினையைத் தமிழகத்தில் பெரிதாக ஊதிப் பெருக்கவைத்துக்கொண்டிருபவர்.

மக்கள் பிரதிநிதியைத் தெரிவு செய்யவதற்கு "வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை" எனும் முழக்கத்தில் இல்லாத சாதி வெறியை கோவிலின் உண்டக்கட்டி பிரசாத அறைவாயிலின் பலகை அறிவிப்பு
பார்ப்பனீய ஆதிக்கம் என எப்படி சமூகநீதி பேசுகின்றீர்கள் ஐயா?

சாதியைக் கண்டிக்க வேண்டும் எனில் பார்ப்பனர் மட்டும் எனும் தெரிவில் நேர்மை இல்லையே!

சாதியை எவர் பேசினாலும், முன் நிறுத்தினாலும் கண்டிக்க வருவதில்லையே ஏன்????

Anonymous said...

//Mr. GUPTA (India): "......The so-called fourfold scheme of the Brahmin, the warrior, the commoner and the untouchable was a myth and did not exist in reality..."//

அட ங்$%$%, இன்னும் உயிரோடு இருக்கின்ற முழு பேயை பூவுக்குள் மறைக்கப் பார்க்கிறார்கள். (அந்த Gupta, பாலபாரதியோட படப்பதிவைப் பார்த்தால் கூட போதும்:)) )


//தங்களது சித்பவன பார்ப்பனீய கனவை பாதிக்காது என்றால் அப்துல்கலாமையும் சேர்த்துக்கொள்வார்கள்.ஆனால், தங்களது கனவிற்கு சிறு இடைஞ்சலானால், இராமனை கும்பிட்ட காந்தியாக இருப்பினும் கொன்று கைலாயத்துக்கு அனுப்ப கோட்சே என்னும் கொலைகாரனை உருவாக்குவார்கள். //

100 % உண்மை

//அதிகார ஒற்றைமயப்படுத்தலுக்கு என்றும் சவாலாக இருப்பவர்கள் பொதுவுடமையாளர்கள், பெண்ணின விடுதலையாளர்கள், தலித்தியம்/அம்பேத்காரியம், பெரியாரியம் போன்ற முற்போக்காளர்கள். //

ஆனால், வருந்த வேண்டிய உண்மை என்னவென்றால், தலித்-ஆதரவு கோட்பாடுகளுக்கு (பெரியாரியம்/பொதுவுடைமை) எதிராக தலித்துகளையே திருப்பி வருகின்றனர். பெங்களூரில் நடந்த ஒரு காவிகளின் மாநாட்டில் வள்ளுவர்/அம்பேத்கார் படங்கள் வைத்து ஏமாற்றினார்கள் :(

உங்கள் ஆய்வுக் கட்டுரை ஒரு நல்ல Summary ஆக உள்ளது. ஒவ்வொரு வரியும் உண்மை.

-வந்து சென்றவன்

அசுரன் said...

ஹரிஹரன்,

பார்ப்ப்னியம் என்பதை பிறப்பின் அடிப்படையில் நாம் வரையறுக்கவில்லை என்பதை ஒரு பாட்டம் பெரிய அளவில் விவாதம் செய்துள்ளோம் இதே தமிழ்மணத்தில் மேலும் பிற சாதியினர் யாரும் இங்கு உட்கார்ந்து கொண்டு தனது சாதிப் பெருமை, அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. ஒரிரு ஆதிக்க சாதி அபிமானிகளை தாண்டி இணையத்தில் யார் தமது சாதியை விளம்பரப்படுத்தியுள்ளனர்?

மேலும் ஒரு குறிப்பிட்ட சாதியை திட்டினால் அந்த சாதியை தனது அடையாளமாக் கொண்டவருக்கு அல்லவா கோபம் வரவேண்டும்? சாதி இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டே அந்த சாதி அடையாளத்தை தூக்கிக் கொண்டு அலைவதால்தானே சாதிப் பெயர் சொல்லி விமர்சிக்கும் பொழுது உள்ளே குத்துகிறது. தவறு எம்மிடம் இல்லை. உங்களிடம் இருக்கிறதா எனப்தை நீங்களே ப்ரிசீலித்துக் கொள்ளுங்கள்,

அசுரன்

thiru said...

//Hariharan # 03985177737685368452 said...

கண்டிப்பாக கருணாநிதியும் ஒருவர்.
கருணாநிதியின் வளமான வாழ்வுக்கு சாதி அவசியம். 234 தொகுதிகளிலும் சாதிவாரியாக சட்டமன்ற வேட்பாளர்களை நிறுவி சாதிப்பிரச்சினையைத் தமிழகத்தில் பெரிதாக ஊதிப் பெருக்கவைத்துக்கொண்டிருபவர்.

மக்கள் பிரதிநிதியைத் தெரிவு செய்யவதற்கு "வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை" எனும் முழக்கத்தில் இல்லாத சாதி வெறியை கோவிலின் உண்டக்கட்டி பிரசாத அறைவாயிலின் பலகை அறிவிப்பு
பார்ப்பனீய ஆதிக்கம் என எப்படி சமூகநீதி பேசுகின்றீர்கள் ஐயா?//

ஹரிஹரன்,

"தமிழகத்தில் உள்ள திருமடங்களின் வரலாற்றை வைத்து பார்க்கும் போது, இவை பொதுவாக குறிப்பிட்ட சாதிகள் சார்ந்த நிறுவனங்களாகவே இருந்துவந்துள்ளன என்பது கண்கூடு" என்கிறார் மதங்கள் மற்றும் மடங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவரும் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவு தலைவராகவும் உள்ள டாக்டர். தொ.பரமசிவம்.

சாதிப்பிரிவுகளாகவே இயங்கி வந்த.வரும் மடங்களை என்ன செய்யலாம்?

கட்சி அரசியலும், சாதி தீண்டாமையும் ஒன்றல்ல. தமிழ்நாட்டில் சாதி சங்கமாக பிரமணாள் சங்கம் துவங்கியது 1950களில் என்பதையும் நினைவூட்டுகிறேன். இடபங்கீடு ஏற்பட காரணமான அரசியல் சட்டப்பிரிவை எதிர்க்க ஆதிக்கச்சாதியினர் இந்த சங்கத்தை உருவாக்கினர் என்பதும் வரலாறு.

வர்ணாஸ்ரமத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சாதி அடையாளங்களால் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக/உரிமைக்காக போராடுவதற்கும், ஆதிக்கவாதிகளின் சாதித் திமிரை கட்டிக்காக்கும் சங்கங்களுக்கும் வேறுபாடு உண்டு. இது தனி விவாதத்துற்குரியது.

//சாதியைக் கண்டிக்க வேண்டும் எனில் பார்ப்பனர் மட்டும் எனும் தெரிவில் நேர்மை இல்லையே!
சாதியை எவர் பேசினாலும், முன் நிறுத்தினாலும் கண்டிக்க வருவதில்லையே ஏன்????//

பார்ப்பனர் என ஒரு சாதியை மட்டும் குற்றம் சுமத்தவில்லை. பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடம் மட்டுமல்ல, பிற ஆதிக்கச்சாதிகளிடமும் இருக்கவே செய்கிறது.

பார்ப்பனீயம்/இந்துத்துவம் பற்றிய விவாதங்களில் விதண்டாவாதம் பேசி பார்ப்பனீயத்தை தான்குவது யாரென்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த கட்டுரையின் தேசியம் பற்றிய கருத்துக்களுக்கு பதில் சொல்லுங்கள்!

Hariharan # 03985177737685368452 said...

//சாதிப்பிரிவுகளாகவே இயங்கி வந்த.வரும் மடங்களை என்ன செய்யலாம்?//

சைவ திருமுறை ஆதீன மடங்களைச் சொல்கின்றீர்களா?

காஞ்சி மடத்தைச் சொல்கின்றீர்களா?

மேல்மருவத்தூர் மடத்தைச் சொல்கின்றீர்களா?

//கட்சி அரசியலும், சாதி தீண்டாமையும் ஒன்றல்ல.//

சாதிப்பிரிவு, பேதம் உரைத்து வளர்க்கும் கட்சி அரசியலும் தீண்டாமையும் எப்படி ஒன்றல்ல? political Party agenda is nothing but the derivative of the same caste division pioneeing priority based on caste discrimination!

//வர்ணாஸ்ரமத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சாதி அடையாளங்களால் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக/உரிமைக்காக போராடுவதற்கும், ஆதிக்கவாதிகளின் சாதித் திமிரை கட்டிக்காக்கும் சங்கங்களுக்கும் வேறுபாடு உண்டு. இது தனி விவாதத்துற்குரியது. //

ஆதிமுதல்ஆட்சி அதிகார ஆதிக்கத்தில் இருக்கும் வன்னியரும், தேவரும், கவுண்டரும் வர்ணாசிரமத்தால் பாதிக்கப்பட்டு விடுதலை /உரிமை மறுக்கப்பட்டவர்களா??


வன்னியர் சங்கமும், தேவர் பேரவையும் இழந்த உரிமை மீட்டெடுக்க அவதரித்தனவாமா??

//பார்ப்பனர் என ஒரு சாதியை மட்டும் குற்றம் சுமத்தவில்லை. பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடம் மட்டுமல்ல, பிற ஆதிக்கச்சாதிகளிடமும் இருக்கவே செய்கிறது. //

சாதிவெறியர்கள் சாதிவெறி கொண்டு செய்யும் செயல்கள் அவர்கள் சார்ந்த சாதி ஈயமாக இருந்து விளிக்கப்பட்டு, சுட்டப்பட வேண்டியது மிக அவசியம்.

பொத்தாம் பொதுவாக பார்ப்பனீயம் என அழைப்பது எஸ்கேப் ரூட்டை வசதியாக இதர ஆதிக்க சாதியினர்க்கு ஏற்படுத்தித்தருவதைத் தவிர நல்ல சரியான விமர்சனமாக தவறிழைக்கும் சாதியை விமர்சிப்பது தடுக்கப்படுகிறது!

சமூகத்தில் மாற்றம் வர எவர் தவறு செய்கிறார்களோ அவர்கள் குறிப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுவது மிக அவசியம்!

அசுரன்,

//மேலும் ஒரு குறிப்பிட்ட சாதியை திட்டினால் அந்த சாதியை தனது அடையாளமாக் கொண்டவருக்கு அல்லவா கோபம் வரவேண்டும்? சாதி இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டே அந்த சாதி அடையாளத்தை தூக்கிக் கொண்டு அலைவதால்தானே சாதிப் பெயர் சொல்லி விமர்சிக்கும் பொழுது உள்ளே குத்துகிறது. தவறு எம்மிடம் இல்லை. உங்களிடம் இருக்கிறதா எனப்தை நீங்களே ப்ரிசீலித்துக் கொள்ளுங்கள்,//

சாதி அடையாளமாக இருந்து எனக்கு தினசரிக்கு பிழைப்பு ஓடிக்கொண்டு இருக்கவில்லை.

என்ற போதும் ஒரு சமூகத்தை விமர்சிப்பது என்பது வசைபாடுதல் வழியாகத்தான் சாத்தியம் என்பதை மறுக்கிறேன்.

நானாகத் தெரிவு செய்து இன்ன சாதியில் பிறந்து அதை நேர்மையற்று தாங்கித்திரியவும் இல்லை.

ஒரு சாதியின் மீது வெகு மிகையான விமர்சனங்கள் தேவையற்ற வசைபாடுதல், தாக்குதல்கள் எனும்மாதிரியாகத் தொடர்ந்து வருகின்ற போது 100% அப்படியாக இல்லை எனும் பார்வைக் கோணம் வெளிக்கொணரப்படவேண்டியதும் பார்வையாளர்களுக்கு நேர்மையாகத் தரப்படவேண்டிய அவசியம் இயல்பாக எழுகிறது.

விமர்சனம் செய்யுங்கள் தாராளமாக! வெகுதியான வீண் வசை ஏன்? தாக்குதல்கல் ஏன்?

வசையும் தாக்குதலும் நிரந்தரமான சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை!

பார்ப்பான் ஒழிக! என்றால் எல்லாப்பார்ப்பனரும் ஒழிந்துவிடப்போவதில்லை. அவரவர் உழைத்தால் மட்டுமே நிலைக்கமுடியும் காலகட்டம் இன்றைக்கு நிலவுவது!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com