Wednesday, March 28, 2007

எனது கிறுக்குத்தனங்கள்

பொதுவாக தொடர் விளையாட்டுக்கள் நடக்கிற நேரம் வேடிக்கை பார்ப்பதோடு சரி. அஞ்சலி திடீர்னு சுடரை கையில குடுத்தாங்க. தொடர்ந்து தருமி அய்யா "கிறுக்குத்தனங்களை சொல்லு" ன்னு நம்மளையும் மாட்டி விட்டுட்டார். ம்ம்ம் தப்பிக்கலாம்னா வேற வழியே இல்ல.

கிறுக்குத்தனங்களும் இணைந்த வாழ்க்கை தான் சுவையானது. எப்போதாவது நம் அனைவருக்குள்ளும் கிறுக்குத்தனங்கள் இருந்துகொண்டே தான் இருக்கும். நம்மிடம் இருக்கும் கிறுக்குத்தனங்கள் எவை என அறிவது நமக்கு எளிதான விசயமல்ல. சில கிறுக்குத்தனங்கள் சுவையானவை, சில சோம்பேறித்தனமானவை, சில மாற்றப்படவேண்டியவை என பல நமக்குள் இருப்பதை கண்டுபிடிப்பதும், இனம் பிரிப்பதும் ஒரு வகை கலை. இந்த விளையாட்டு அதற்கு உதவுகிறது எனலாம்.

இனி எனக்குள் இருக்கும் கிறுக்குத்தனங்கள் சில...

எதாவது செய்யணும்னு நினைத்து திட்டம் எல்லாம் ஒழுங்கா தீட்டிடுவேன். செயல்படுத்தும் போது இன்னும் நிறைய நேரம் இருக்கு, கொஞ்சம் சாவகாசமா செய்யலாம்னு கடைசிநேரம் வரை காலம் தள்ளுவது. கடைசியில் வேற வழியில்லாம பந்தயக்குதிரை வேகத்துல ஓடி செய்யுற நேரம் 'இனி இப்படி செய்யக்கூடாது'னு நினைக்கிறது உண்டு. மறுபடியும் பழைய கதை தான் :). ஒரு வகையில் இதுவும் பிடித்திருக்கிறதோ? அது தான் இந்த பதிவு கூட கடைசி நேரத்தில் தான் பதிவு செய்கிறேன்.

எப்போதும் கையில் புத்தகம் ஏதாவது இருந்து கொண்டிருக்கும். வேலையில்லாமல் நண்பர்களுடன் அரட்டையடித்த காலத்தில் இந்த பழக்கம் துவங்கியது. இந்தியாவில் இருந்த காலங்களில் நீண்ட தூரம் பேருந்து பயணம் செல்லும் போது புத்தக மூட்டையே கைவசம் இருந்தது. இப்போ அந்த பழக்கம் கையில புத்தகத்தோட ரோட்டில் நடக்க வைக்குது. நடந்துகொண்டே படிக்கிறதை நிறுத்திடணும்னு பார்த்தாலும் முடியவில்லை. வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையில் சிறிய தூரத்தில் கூட நடந்துகொண்டே படிக்கும் பழக்கம் இருக்கவே செய்கிறது.

வரிசையில, புதுசா வந்து சேர்ந்த பழக்கம் இயற்கையை வேடிக்கை பார்ப்பது. போகிற வழியில் எங்காவது பூ, குருவி, புறா, குழந்தைகள், விந்தையான காட்சிகள் எதாவது பார்த்தால் சிறிது நேரம் நின்று ரசித்த பின் தான் போவேன்.

ராத்திரி நீண்டநேரம் உறங்காமல் இருக்கிறது. அதன் பலன் காலையில் 8 மணிக்கு பிறகு தான் உறக்கம் எழும்புவது. அதுவும் கைத்தொலைபேசியில் காலையில் 6 மணிக்கு ஒரு தடவை, 8 மணிக்கு இன்னொரு தடவை என மணியடிக்கும். இருந்தும் எழும்புறது 8.15 மணிக்கு தான்.

திடீர்னு பாட்டு படிக்கிறது (நமக்கு தான் பாட வராதே :)). பக்கத்துல இருக்கிறவங்க பாடு தான் பாவமா இருக்கும்.

இப்படி பல கிறுக்குத்தனங்கள்...

அடுத்து யாரை மாட்டி விடலாம்?

1. அஞ்சலி
2. மதி கந்தசாமி
3. ஆழியூரான்
4. பாலபாரதி
5. பொன்ஸ்

ஏற்கனவே உங்க கிறுக்குத்தனங்களை சொல்லியிருந்தா வேற ஆளை மாட்டி விடுங்க...

யப்பா... தப்பிச்சாச்சு

7 பின்னூட்டங்கள்:

கண்மணி/kanmani said...

ஐயோ கடவுளே நீங்களுமா திரு இந்த 'வியர்டு' வலையில மாட்டினீங்க/
என்ன கொடுமையிது சரவணா?
லெவன்த் அவர் அவசரம்,தூக்கம் ரெண்டும் எனக்கும் பொருந்தும்.

Anonymous said...

sila samayam nanum unkalai pola thann.Unkal kirukuthanam nalla iruku.hahaaa

Cheers
pavithra

தருமி said...

'இனி இப்படி செய்யக்கூடாது'னு நினைக்கிறது உண்டு. மறுபடியும் பழைய கதை தான் :)//

இந்தப் பிரசவ வைராக்கியம் இல்லாதார் யாருமேயில்லையோ?

ஆனால்...
The perfectionist is one who gets up right at 12 midnight to tear the daily calendar sheet அப்டின்னு சொல்லிட்டு, நான் ஏறக்குறைய அது மாதிரின்னு நமக்குத் தெரிஞ்ச கேசு ஒண்ணு சொல்லிச்சு...

-L-L-D-a-s-u said...

கையில புத்தகத்தோட ரோட்டில் நடக்க வைக்குது
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது

வெற்றி said...

திரு,
உங்களின் கிறுக்குத்தனங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

/* எதாவது செய்யணும்னு நினைத்து திட்டம் எல்லாம் ஒழுங்கா தீட்டிடுவேன். செயல்படுத்தும் போது இன்னும் நிறைய நேரம் இருக்கு, கொஞ்சம் சாவகாசமா செய்யலாம்னு கடைசிநேரம் வரை காலம் தள்ளுவது. கடைசியில் வேற வழியில்லாம பந்தயக்குதிரை வேகத்துல ஓடி செய்யுற நேரம் 'இனி இப்படி செய்யக்கூடாது'னு நினைக்கிறது உண்டு. மறுபடியும் பழைய கதை தான் :). */

இந்த விடயத்தில் நானும் உங்களை மாதிரித்தான்.

bala said...

திரு அய்யா,
உங்க முக்கியமான கிறுக்குத்தனத்தை விட்டுட்டீங்களே.உண்மையான பூனை,உண்மையான போகி,உண்மையான பொங்கல் கண்டுபிடிக்கப்போகிறேன்னு அடிக்கடி காணாமப்போயிடுவீங்களே.அதைவிட பெரிய கிறுக்குத்தனம் யாரிடம் இருக்க முடியும்.

பாலா

பாரதி தம்பி said...

அட...இந்த ஆட்டையில் என்னையும் அழைத்திருக்கிறீர்களா..? விரைவில் வருகிறேன்..

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com