Tuesday, September 12, 2006

வலைஞர்களே உதவுங்கள்!

என்ன பெரிய உதவியோ என பதட்டமடையாதீர்கள். உங்களால் முடிந்த உதவி தான்.

நீண்ட நாட்களாக பெருத்த சந்தேகமாக இருக்கிறது எனக்கு. எத்தனையோ சந்தேகங்களை தெளிவுபடுத்திவருகிற நீங்கள் எனக்கு இந்த கேள்விக்கான பதிலை தெளிவுபடுத்துங்கள்! மாமிச உணவிற்கும், ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டா?

இதை போன்ற கேள்வியை சுகி.சிவம் அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார். அவரும் அதற்கு தன்னைச் சார்ந்த பதிலை சொல்லியிருக்கிறார். அது விகடனில் வெளிவந்திருக்கிறது. அவரது பதிலும் அதற்கான கேள்வியும் இங்கே:

**************

கேள்வி: மாமிச உணவு, ஞானம் பெறுவதற்குத் தடையானதா? பெரிய ஆகமக் கோயில்களில் மாமிச உணவு உண்ட தினத்தன்று சிலர் நுழைவது இல் லையே! மற்ற மதங்களில் மாமிசம், மதத் தன்மைக்கு எதிரான ஒன்றாக இல்லையே... ஏன்?

-வே. ராமராஜ், திருச்செந்தூர்.

பதில்:
ஞானம் பெற மாமிசம் ஒரு தடையே அல்ல. ஆனால், மாமிச உணவு உண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ள வரையில் ஞானம் பெறவே முடியாது. எதன் மீதும் பிடிவாதமான பற்று இருந்தால், உண்மையை எவ்வாறு தரிசிக்க முடியும்? அதிர்ச்சியான ஒரு விஷயம் சொல்லட்டுமா? வங்காளிகளில் எல்லோருமே மீன் உண்ணும் பழக்கம் உடையவர்கள். விவேகானந்தர், ராமகிருஷ்ணரும்கூட மீன் உண்டிருக்கிறார்கள் என்று ஓஷோ பேசுகிறார்.

சாதாரணமாகவே உணவின்றி விரதத்துடன் நீங்கள் கோயிலுக்குப் போகும்போது உங்களிடம் ஏற்படும் அதிர்வு கள், உணவுண்ட பின் சென்றால் ஏற்படாது. அதிலும் எளிதில் செரிமானம் ஆகாத கடின மாமிச உணவுகள், உங்கள் இறை ஏற்புத் திறனை நிச்சயம் மட்டுப்படுத்தவே செய்யும். இது பொதுவான விதி. விதிவிலக்குகளும் உண்டு.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சைவ உணவு தருவதன் நோக்கம் என்ன? எளிய உணவு, நோயிலிருந்து விரைவில் உங்களை மீட்டு எடுக்கும். மன நோய்க்கு மருந்தான கோயில்களும் அதனால்தான் சைவ உணவை வற்புறுத்துகின்றன. அதை விடவும் உண்ணாமையை (வழிபாட்டுக் காலத்தில் மட்டும்) வற்புறுத்துகின்றன. திருவள்ளுவரோ என்னளவு கூட லிபரல் கருத்துடையவர் அல்லர்.

தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

என்கிறார். கொலைக் குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டவர் களில் பெரும்பாலோர் அசைவ உணவினர் என்பது ஒரு செய்தி. இவையெல்லாம் பரிசீலனைக்கு உரியவை என்பது மட்டுமே என் கட்சி. இதன் மூலம் மாமிசம் உண்ணாதவர்கள், கொலையே செய்ய மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. இரக்கமின்றி பிறரைக் கசக்கிப் பிழிந்து, ஹிம்சை செய்யும் சிலர் சைவ உண வில் தீவிரமாகவும் இருக்கிறார்கள்! பொதுவாக, சைவ உணவால் சாத்விக எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அசைவத்தில் அப்படி அல்ல!

**********

எது உண்மை?

வலைஞர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்களேன்! எனது கேள்வி: மாமிச உணவிற்கும், ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டா?

ஞானத்தை தேடி...

திரு

37 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

திரு,

கோவிச்சுக்காதீங்க.. பதிவில உ.கு. இல்லையே??

சும்மா ஜாலியாகதான் கேட்டேன்.. தப்ப நினைச்சுக்காதீங்க..

எனக்கு தெரிந்த விசயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்..

எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர் என்னிடம் பேசும் போது சொன்ன விசயம்..

உண்மையான ஞானம் என்பது பிறந்த குழந்தைக்கு உள்ள அறிவுதான்" என்று கூறினார். இது ஓரளவு உணமையே..

மற்றபடி ஞானத்தை பற்றி பேச எனக்கு ஞானம் இல்லை...Hi Hi Hi..

நல்ல பதிவு நன்றி

thiru said...

//கோவிச்சுக்காதீங்க.. பதிவில உ.கு. இல்லையே??//

:)

Thirumozhian said...

காய்ச்சலடிக்கும் போது சாதாரணமான எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ளச்சொல்வது பலவீனமான உடல் கடினமான உணவுகளைச் செரிக்க முடியாது என்பதால் தான். இரும்புச்சத்து குறைவாக இருந்தால் அதே மருத்துவர் பச்சைக்காய்கறிகளையும் மாமிசத்தையும் உண்ணச்சொல்கிறார். மாமிசம் சாப்பிட்ட கண்ணப்ப நாயனார் அதனையே கடவுளுக்கும் படைத்து முக்தி பெறவில்லையா? (அவரிடம் இருந்தது வெறும் பக்தி தான். ஞானம் எல்லாம் கிடையாது என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யக்கூடாது).

அதனால, என்னோட அபிப்பிராயத்துல, ஞானத்தை அடையனும்ன்னா அதுக்கு வெஜிடேரியனா இருக்கனுங்கறது அவசியம் இல்ல.


அப்புறம் ஒரு விஷயம்.

எனது பதிவுகளில் தலைப்பை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனது பதிப்புகள் என்றே வருகின்றன. நான் உபயோகிப்பது ப்லொக்ஸ்பாட்.காம் இணையதளம். அங்கு எடிட் போஸ்ட் என்னும் ஆப்ஷனில் எடிட் ஹெச்.டி.எம்.எல் - ஐ சொடுக்கி ஏதோஏதோ செய்து பார்த்துவிட்டேன். ஆனால் தலைப்பு 'அனுப்பு' பட்டைக்கு மேலே வர மாட்டேன் என்கிறது. தயவு செய்து உதவவும்.

திருமொழியான்.

கால்கரி சிவா said...

திரு, ஞானம் பெற உணவோ, மதமோ, பிறப்போ தடையில்லை.

மனம் மட்டும் தான் தடை.

மனிதன் தன் மனத்தடைகளை அகற்றிவிட்டால் அவனுக்கு எஞ்சி இருப்பது ஞானம்தான்

SP.VR. SUBBIAH said...

அன்பு நண்பர் திரு.அவர்களே!

இந்தக் கேள்விக்கான பதிலைத் திருவள்ளூவர் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்

அதிகாரம் 28
புலால் மறுத்தல்
The Renunciation of Flesh

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்."

புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும்
கை கூப்பி வணங்குமாம்

இதைவிட நல்ல விளக்கம் வேண்டுமா?

சொல்லுங்கள் நண்பரே!

மா.கலை அரசன் said...

நண்பர் திரு அவர்களே!
என்னைப் பொறுத்த மட்டில் ஞானம் பெற மாமிச உணவு தவிர்த்தல் அவசியமென்றே சொல்வேன்.
முதலில் ஞானம் என்றால் என்ன?.
கடவுளை அடைவதா?
எந்த கடவுளை? சிவனையா? விஷ்ணுவையா? புத்தனையா? ஏசுவையா? அல்லாவையா? அல்லது இன்ன பிற கடவுள்களையா?
என் சிற்றறிவில் ஞானம் என்பது, தொளிந்த அறிவு, எவ்வுயிரிடத்தும் கருணை, தான் வாழ பிறன் எய்க்காமை, ஆசைகள் விட்டொழித்தல் இவை தான்.
அந்த வகையில் ஞானம் பெற மாமிச உணவு தவிர்த்தல் அவசியமன்றோ?!.

மாசிலா said...

முதலில் ஞானம் என்றால் கிலோ எவ்வளவய்யா விலை?

இந்த மாதிரியான மன நோய் வியாதியஸ்தர்கள் கருத்தை எல்லாம் படித்து நீங்கள் குழம்பியது போதாது என்று எங்களையும் குழப்ப பார்க்கிறீரோ? குண்டர் சட்டம்தானய்யா உமக்கு சரிபடும்!

சுகி(சுத்த கிறுக்கு). சிவம் ஏதோ "அதிர்வுகள்" பற்றி கூறியிருக்காரே, என்ன அது?
ஏன், வீட்டிலேயே மின்சாரத்தை உபயோகித்து இந்த அதிர்வுகளை பெறலாமே!
இல்லை என்றால், மனைவியிடம் உருளை கட்டையால் மண்டையில் ஒங்கி ஒரு அடி பெற செய்யவும்! வரும் அதிர்வு!
//"கொலைக் குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டவர் களில் பெரும்பாலோர் அசைவ உணவினர் என்பது ஒரு செய்தி."//
இவ்வளவு காலமாக ஒன்றுமறியாத, எதிர்த்து பேச திராணி ஏதும் இல்லாத தலித்துக்களை நசுக்கி, ஒடுக்கி, சித்தரவதை செய்து, நாய் வாழ்க்கைக்கு தள்ளியும், கொலையும் செய்து வந்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் அசைவர்களா?
சைவம்-அஹிம்சை என சத்தம்போடும் பொன்வாயில் இருந்து "கொலை" என்பன போன்ற வார்த்தைகளா? சிவ, சிவா!

"கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய்!"

என் வலைப்பூ : www.naalainamathae.blogspot.com/

மாசிலா said...

//"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்."

(புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும்
கை கூப்பி வணங்குமாம்)//


வள்ளுவர் எழுதாமல் விட்டது :
"கொல்பவன் புலாலை உண்டபின்
கைகூப்பி மீதியிருக்கும் உயிர்மட்டும் தொழும்."

மாசிலா said...

//"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்."

(புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும்
கை கூப்பி வணங்குமாம்)//


வள்ளுவர் எழுதாமல் விட்டது :
"கொல்பவன் புலாலை உண்டபின்
கைகூப்பி மீதியிருக்கும் உயிர்மட்டும் தொழும்."

NoMad said...

ஹிட்லர் ஒரு சைவ உணவாளர் . பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அசைவத்தை தங்களின் விளையாட்டில் வெற்றி பெற வைக்கும் டானிக்காக கருதுகிறார்கள் .
அசைவத்திற்கு ஒரு ஜே !

சிறில் அலெக்ஸ் said...

புலால் உண்பவர்கள் எல்லாம் ஞானமர்றவர் என்றும் புலால் ண்ணாதவர் எல்லாம் ஞானம் பெற்றவர் என்றும் சுகி எண்ணுவாரென்றால் தவறான கருத்தாகும்.

நமக்கெல்லாம் நம்ம பழக்கவளக்கம் தான் மேலானதுன்னு ஒரு எண்ணம் இருப்பதுபோல அவருக்கும் இருக்குதென்றே நினைக்கிறேன் அதையே கொஞ்சம் தெளிவில்லாமல் சொல்லியிருக்கின்றார்.

நண்பர்களின் பின்னூட்டங்களிலுள்ள தகவல்களில் உள்ள தெளிவு அவரின் பதிலில் இல்லை.

thiru said...

//Thirumozhian said...
என்னோட அபிப்பிராயத்துல, ஞானத்தை அடையனும்ன்னா அதுக்கு வெஜிடேரியனா இருக்கனுங்கறது அவசியம் இல்ல.//

நல்ல கருத்து! சாப்பாடும் உணவு வகைகளுக்கும் ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்கள்?

thiru said...

//எனது பதிவுகளில் தலைப்பை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனது பதிப்புகள் என்றே வருகின்றன. நான் உபயோகிப்பது ப்லொக்ஸ்பாட்.காம் இணையதளம்.//

Templateல் எதாவது மாற்றம் செய்துவிட்டீர்களா என்ன? தனிமடலில் தெரிவியுங்கள் எனக்கு தெரிந்த விதத்தில் உதவுகிறேன். நன்றி

thiru said...

//கால்கரி சிவா said...
திரு, ஞானம் பெற உணவோ, மதமோ, பிறப்போ தடையில்லை.

மனம் மட்டும் தான் தடை.

மனிதன் தன் மனத்தடைகளை அகற்றிவிட்டால் அவனுக்கு எஞ்சி இருப்பது ஞானம்தான்//

சிவா மிக அருமையான கருத்து! மனதடைகளை தாண்டுவதே ஒரு யுகபுரட்சி தான் இல்லையா?

thiru said...

//வணக்கத்துடன் said...
தெரியாது.

ஞானம் வேண்டுமா மாமிசம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால், மாமிசமே எனது தெரிவாக இருக்கும்.//

ஆகா இது வேறயா? சாப்பாட்டு இராமரா நீங்க! :) ஞானம் வேண்டாம்னு சொல்லுற முனிவர் நீங்களா தான் இருப்பீங்க! :)

//மாமிசம் சாப்பிடுவதை ஒரு யாகம் என்று நினைத்தே இதுவரை செய்து வருகிறேன். அதிலும் இது மிகவும் மேன்மையான தொரு யாகம்.

யாகம் - தீ மூட்டி, விலங்குகளை அதில்போட்டு எரிக்க வேண்டும்.

மாமிச உணவு - யாக குண்டத்திலே, கூடுதலாக ஒரு சட்டியை வைத்து, அதில் விலங்குகளின் மாமிசத்தை போட்டு சமைத்து, பின் எடுத்து செரிக்க வேண்டும்.//
நல்ல செயல்முறை பாடம் :) என்ன BBQ ரக உணவு நல்லா பிடிக்குமோ?

//எரிப்பதை விட செரிப்பது மேன்மையானது என்பது என் எண்ணம்.//

இது தத்துவம்! :)

//மாமிச உணவு நேரடியாக உடலில் கலந்து, சாப்பிடுபவருக்கு தேவையான புரதத்தை உடனடியாக கிடைக்க செய்யும் என்பது விஞ்ஞானம்.//

சரி.

thiru said...

// SP.VR.SUBBIAH said...
அன்பு நண்பர் திரு.அவர்களே!//

எப்படி உங்களை அழைப்பது? நண்பரா? வாத்தியாரைய்யாவா? நண்பர்னே அழைக்கலாம். நட்பான வாத்தியாரைய்யா தானே நீங்க!

//இந்தக் கேள்விக்கான பதிலைத் திருவள்ளூவர் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்//

அருமையான குறள்கள்! Green Peace அமைப்பினரும் ஜீவகாருண்யம் கடைபிடிப்பவர்களுக்கும் வள்ளுவரின் கருத்துக்கள் வழிகாட்டி.

//அதிகாரம் 28
புலால் மறுத்தல்
The Renunciation of Flesh

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்."

புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும்
கை கூப்பி வணங்குமாம்

இதைவிட நல்ல விளக்கம் வேண்டுமா?

சொல்லுங்கள் நண்பரே!//

அருமை! அருமை!!! சொக்கிப்போனேன்!

thiru said...

//என் சிற்றறிவில் ஞானம் என்பது, தொளிந்த அறிவு, எவ்வுயிரிடத்தும் கருணை, தான் வாழ பிறன் எய்க்காமை, ஆசைகள் விட்டொழித்தல் இவை தான்.
அந்த வகையில் ஞானம் பெற மாமிச உணவு தவிர்த்தல் அவசியமன்றோ?!.//

ஞானம் பற்றிய உங்கள் விளக்கம் அருமை. புலால் மறுத்தல் பற்றிய வள்ளூவரின் கருத்து இந்த அடிப்படையில் அமைந்ததா?

thiru said...

//மாசிலா said...
முதலில் ஞானம் என்றால் கிலோ எவ்வளவய்யா விலை?

இந்த மாதிரியான மன நோய் வியாதியஸ்தர்கள் கருத்தை எல்லாம் படித்து நீங்கள் குழம்பியது போதாது என்று எங்களையும் குழப்ப பார்க்கிறீரோ? குண்டர் சட்டம்தானய்யா உமக்கு சரிபடும்!//

அடடா என்னமா வேகம்! :)

//இவ்வளவு காலமாக ஒன்றுமறியாத, எதிர்த்து பேச திராணி ஏதும் இல்லாத தலித்துக்களை நசுக்கி, ஒடுக்கி, சித்தரவதை செய்து, நாய் வாழ்க்கைக்கு தள்ளியும், கொலையும் செய்து வந்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் அசைவர்களா?// நியாயமான கேள்வியாக தான் படுகிறது! இந்தியாவின் சாதி ஆதிக்க வன்முறைக்ள், மத வன்முறைகளின் வரலாற்றை பார்க்கையில் உங்களது கேள்வி நியாயமானது.

இலங்கையில் சக மனிதர்களில் சதையை கட்டி தொங்கவிட்டு இங்கு தமிழர்களின் கறி கிடைக்கும் என்றவர்கள் மரக்கறி உணவு வகைகளை மட்டுமே உண்பவர்களாக இருந்தது ஒரு மிகப்பெரிய முரண்பாடு!

thiru said...

//மாசிலா said...
வள்ளுவர் எழுதாமல் விட்டது :
"கொல்பவன் புலாலை உண்டபின்
கைகூப்பி மீதியிருக்கும் உயிர்மட்டும் தொழும்."//

ஆகா என்ன இது புது விளக்கம்?

thiru said...

//தமிழ் தீவிரவாதி said...
ஹிட்லர் ஒரு சைவ உணவாளர் . பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அசைவத்தை தங்களின் விளையாட்டில் வெற்றி பெற வைக்கும் டானிக்காக கருதுகிறார்கள் .
அசைவத்திற்கு ஒரு ஜே!//

தகவலுக்கு நன்றி தமிழ்... ஆமா இது என்ன தீவிரவாதி?

thiru said...

//சிறில் அலெக்ஸ் said...
புலால் உண்பவர்கள் எல்லாம் ஞானமர்றவர் என்றும் புலால் உண்ணாதவர் எல்லாம் ஞானம் பெற்றவர் என்றும் சுகி எண்ணுவாரென்றால் தவறான கருத்தாகும்.

நமக்கெல்லாம் நம்ம பழக்கவளக்கம் தான் மேலானதுன்னு ஒரு எண்ணம் இருப்பதுபோல அவருக்கும் இருக்குதென்றே நினைக்கிறேன் அதையே கொஞ்சம் தெளிவில்லாமல் சொல்லியிருக்கின்றார்.

நண்பர்களின் பின்னூட்டங்களிலுள்ள தகவல்களில் உள்ள தெளிவு அவரின் பதிலில் இல்லை.//

நல்ல கருத்துக்கள் சிறில்!

துளசி கோபால் said...

உணவுக்கும் சாமிக்கும் சம்பந்தம் இருக்கா?

மனசுக்கும் ஞானத்துக்கும்தான் சம்பந்தம் இருக்குன்னு நினைக்கிறேன்.

மாமிச உணவு சாப்புடறவங்களுக்கு
ஞானம் வராதா?

என்னங்க ஒரே அஞ்ஞானமா இருக்கு?

கோவி.கண்ணன் [GK] said...

திரு அவர்களே !

உயிர், வாழ்க்கை இந்த இரண்டு நமக்கு மட்டுமா சொந்தம் ? வேட்டையின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு தேடி மரண தருவாயிலும் போராடுவது விலங்களும் தானே. அவைகளுக்கு வாய் பேச முடியவில்லை என்பதற்காக அவைகளின் உயிர் துச்சமா ?

விலங்குகளுக்கு பகுத்தறிவோ, பக்குவமோ இல்லை ஒன்றை ஒன்று உண்டு வாழ்கின்றன.

நாம் நமக்கு வேண்டிய எல்லாவித உணவு தேவைகளை தாவரங்கள் மூலமே உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.

இந்த காரணங்களினால் நான் சைவ விரும்பியாக இருக்கிறேன்.

மற்றபடி ஞானத்துக்கும், உணவு முறைகளுக்கு சம்பந்தம் இல்லை.

கண்ணப் நாயனார் அளித்த பன்றி இறைச்சியை சிவன் உண்டதாக பெரியபுராண கதைகள் உண்டு, குகன் ராமனுக்கு தேனும் மீனும் அளித்த்தாக கதை உண்டு என்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.

Anonymous said...

நல்ல பதிவு. உங்கள் கேள்வியில் இருந்தும், அங்கு வந்த பின்னூட்டங்களில் இருந்தும் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. பதிவுக்கு நன்றி.

thiru said...

துளசிக்கா முதல் முறை வருகைக்கு நன்றி! வாத்தியாரைய்யா, கலைஅரசன் அவங்களுக்கும் முதல் வருகைக்கு நன்றி!

//துளசி கோபால் said...
உணவுக்கும் சாமிக்கும் சம்பந்தம் இருக்கா?

மனசுக்கும் ஞானத்துக்கும்தான் சம்பந்தம் இருக்குன்னு நினைக்கிறேன்.

மாமிச உணவு சாப்புடறவங்களுக்கு
ஞானம் வராதா?

என்னங்க ஒரே அஞ்ஞானமா இருக்கு?//

நியாயமான கேள்வி!

thiru said...

// கோவி.கண்ணன் [GK] said...
திரு அவர்களே !

உயிர், வாழ்க்கை இந்த இரண்டு நமக்கு மட்டுமா சொந்தம் ? வேட்டையின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு தேடி மரண தருவாயிலும் போராடுவது விலங்களும் தானே. அவைகளுக்கு வாய் பேச முடியவில்லை என்பதற்காக அவைகளின் உயிர் துச்சமா?//
பரந்து விரிந்த பார்வை! விலங்கினங்கள் ஒன்றை ஒன்று கொன்று சாப்பிடுவதை தொலைக்காட்சியில் பார்த்து பதறியிருக்கிறேன். மரணவலி கொடியது! விலங்குகளுக்கும் சேர்த்து தான்!


//விலங்குகளுக்கு பகுத்தறிவோ, பக்குவமோ இல்லை ஒன்றை ஒன்று உண்டு வாழ்கின்றன.

நாம் நமக்கு வேண்டிய எல்லாவித உணவு தேவைகளை தாவரங்கள் மூலமே உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.

இந்த காரணங்களினால் நான் சைவ விரும்பியாக இருக்கிறேன்.//

உங்களது உணவு பழக்கத்தில் எனக்கு தனிப்பட்ட கேள்வி இல்லை. பச்சை காய்கறிகளை உண்பது இன்னும் சிறப்பாம்! உண்மை தானே?

//மற்றபடி ஞானத்துக்கும், உணவு முறைகளுக்கு சம்பந்தம் இல்லை.//

நல்ல கருத்து! இந்த கேள்வியின் அடிப்படை புள்ளி இது தான்!

//கண்ணப் நாயனார் அளித்த பன்றி இறைச்சியை சிவன் உண்டதாக பெரியபுராண கதைகள் உண்டு, குகன் ராமனுக்கு தேனும் மீனும் அளித்த்தாக கதை உண்டு என்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.// படித்திருக்கிறேன்! :)

புத்தர் பன்றி கறி சாப்பிட்டார் என ஒரு பேச்சு இருக்கிறது. உண்மையா தெரியவில்லை! உங்களுக்கு தெரியுமா?

thiru said...

//Anonymous said...
நல்ல பதிவு. உங்கள் கேள்வியில் இருந்தும், அங்கு வந்த பின்னூட்டங்களில் இருந்தும் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. பதிவுக்கு நன்றி.//

வருகைக்கு நன்றி! (இது முதல் வருகையா என தெரியவில்லை :))

என்ன அறிந்து கொண்டீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளலாமே நண்பரே! அதோடு உங்கள் எண்ணங்களையும் பதியுங்களேன்!

Unknown said...

இப்படி ஒரு விவாதமா?

சாப்பாடு தேர்வு என்பது JUST A FOOD HABIT இதற்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?

பழைய சோறு சாப்பிட்டா ஞானம் வருமா? இல்ல பாஸந்தி சாப்பிட்டா ஞானம் வருமா?

செரிமானம்..... ம்..ம்ம் இறைச்சிக் கொழுப்பும் நெய் கொழுப்பும் செறிக்கும் முறை ஒன்றே ...எனி டாகடர்ஸ் here ?
செரிமானத்தை..அல்லது கடின உணவு ..மித உணவு என்று எல்லாம் வேறுபாடு பார்த்து ஞானம் வருவதில்லை...அப்படி வருவது அஞ்ஞானம்.

அவனவன் வசதி ,இருக்கும் இடம் போன்றவறவையே உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கின்றன? இயேசு (கடவுள் அல்ல...அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கலகக்காரர்) என்ன சைவமா? அவருக்கு வராத தத்துவ சிந்தனைகளா?

எனக்குத் தெரிந்தவரை பிராமணத்தில்தான் (மதம்/இனம்/கூட்டம்..?? என்னமோ ஒன்னு அதவிடுங்க) சைவ உணவுப் பழக்கமும் ஞானமும் இணைத்துப் பேசப்படுகிறது. அது உண்மை என்றால் உலகத்தில் இவர்களைத்தவிர யரும் ஞானிகள் ஆக முடியாது.

பாலைவனத்துல ஒட்டகப்பால்தான் கிடைக்கும் அங்கன போயி ...மாட்டுப்பால்தான் ஞான வழி என்றால் எவனும் ஞானியாக முடியாது. அது போலத்தான் ..வங்காளத்தில் மீன் உணவும்...

எந்த இடத்தில் எது அதிகம் கிடைக்கிறதோ அது பெரும்பாலானவர்களின் உணவுப் பழக்கமாகிவிடுகிறது. அதற்காக மற்றவர்கள் ஞானமே பெற முடியாதா?

அப்புறம் ஞானம்னா என்னானு நீங்க சொல்லவே இல்லையே :-)))

எனக்குப் பிடித்த உணவு முறை என்றால் அது சைவம்...ஆனால் அதற்கும் ஞானத்திற்கும் தொடர்பு உண்டு No ஜல்லிஸ்.. :-))) IT IS A JUST A FOOD HABIT.

thiru said...

// கல்வெட்டு said...
இப்படி ஒரு விவாதமா?//

:)

//சாப்பாடு தேர்வு என்பது JUST A FOOD HABIT இதற்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?

பழைய சோறு சாப்பிட்டா ஞானம் வருமா? இல்ல பாஸந்தி சாப்பிட்டா ஞானம் வருமா?//

இது தானே எனது கேள்வியும்! :) பதில் என்ன சொல்லுங்க!

//செரிமானம்..... ம்..ம்ம் இறைச்சிக் கொழுப்பும் நெய் கொழுப்பும் செறிக்கும் முறை ஒன்றே ...எனி டாகடர்ஸ் here ?
செரிமானத்தை..அல்லது கடின உணவு ..மித உணவு என்று எல்லாம் வேறுபாடு பார்த்து ஞானம் வருவதில்லை...அப்படி வருவது அஞ்ஞானம்.//

டாக்டர் யாராவது இருக்கீங்களா? சொல்லுங்க சாமி உங்க பதிலையும்!

//அவனவன் வசதி ,இருக்கும் இடம் போன்றவறவையே உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கின்றன? இயேசு (கடவுள் அல்ல...அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கலகக்காரர்) என்ன சைவமா? அவருக்கு வராத தத்துவ சிந்தனைகளா?//

உண்மை தான்!

//எனக்குத் தெரிந்தவரை பிராமணத்தில்தான் (மதம்/இனம்/கூட்டம்..?? என்னமோ ஒன்னு அதவிடுங்க) சைவ உணவுப் பழக்கமும் ஞானமும் இணைத்துப் பேசப்படுகிறது. அது உண்மை என்றால் உலகத்தில் இவர்களைத்தவிர யரும் ஞானிகள் ஆக முடியாது.

பாலைவனத்துல ஒட்டகப்பால்தான் கிடைக்கும் அங்கன போயி ...மாட்டுப்பால்தான் ஞான வழி என்றால் எவனும் ஞானியாக முடியாது. அது போலத்தான் ..வங்காளத்தில் மீன் உணவும்...எந்த இடத்தில் எது அதிகம் கிடைக்கிறதோ அது பெரும்பாலானவர்களின் உணவுப் பழக்கமாகிவிடுகிறது. அதற்காக மற்றவர்கள் ஞானமே பெற முடியாதா?//

இடத்தின் சூழல், காலநிலைக்கு ஏற்ப உணவு என்கிறீர்கள்! மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்!

//அப்புறம் ஞானம்னா என்னானு நீங்க சொல்லவே இல்லையே :-))//

சொல்லிட்டா போச்சு! மத்தவங்களும் என்ன சொல்லுறாங்க கேட்டு பார்க்கலாம்.:)

//எனக்குப் பிடித்த உணவு முறை என்றால் அது சைவம்...ஆனால் அதற்கும் ஞானத்திற்கும் தொடர்பு உண்டு No ஜல்லிஸ்.. :-))) IT IS A JUST A FOOD HABIT.//
எனக்கு கீரை வகைகள் நல்ல விருப்பம்.

thiru said...

"யுத்தத்தின் விளைவாக தமிழீழத்திலிருந்து உயிருக்கு போராடி அலைந்து தமிழகத்தில் முகாமில் இருக்கிற ஒரு வயதானவர் பற்றி விகடனில் வந்த பகுதி. இந்த விவாதத்தில் தொடர்புடையதாக தெரிவதால் இணைக்கிறேன். படியுங்கள் நண்பர்களே! கருத்துக்களை சொல்லுங்கள்!

//வெகுநேரமாக நமக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்த கந்தன் என்ற பெரியவர், தயங்கித் தயங்கி நம்மிடம் வாய்திறந்தார்... ‘‘கேக்க வெக்கமாவும், கூச்சமாவும் இருக்கு... ‘என்னடா இது உயிர்பிழைக்க வந்த இடத்தில் இப்படிக் கேட்கிறானே’ என்று நினச்சுக் கொள்ளாதீங்கள். நான் ஒரு மீனவர். மீனில்லாமல் ஒருநாளும் சோறு திண்ணதில்லை. அது எங்களுக்குத் தண்ணீர் மாதிரி... இங்கட இந்த உப்புமாவை சாப்பிட முடியாமல் தவிக்கிறன். அப்படியும் கொஞ்சம் காசு புரட்டிக்கொண்டு மீன் கிடைக்குமாவெண்டு தேடிப் பார்த்தன். எங்கேயும் கிடைக்கல. நீங்கள் அறிவீங்க தானே..? இங்கட எங்கயாவது மீன் கிடைக்குமா..?’’ என்று பரிதாபமாகக் கேட் டபோது, நிஜமாகவே நம் விழியோரம் ஈரம் கசிந்தது//

thiru said...

இன்னொருவர் பேசியது....

மரக்கறி உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிற, உயிர்களை துன்புறுத்தகூடாது என்ற கொள்கையுடைய புத்தமதத்தை சார்ந்த
கண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார் பேசியதாவது:

//இந்த நாட்டினது நிதியை சார்ந்துள்ள சிலர், அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு துரோகிகளாக உள்ளனர். அத்தகைய துரோகிகள் எரிக்கப்பட வேண்டும்.//

//சிங்களவர் இப்போது தாக்குதல் நடத்துவது தற்காப்புக்கானதுதான். இந்த நேரத்தில் பிக்குகளும் உரிய முடிவெடுக்க வேண்டியது அவசியமானது.//

என்ன சொல்கிறார்கள் நண்பர்கள்?

Unknown said...

வடதுருவத்தில் வாழும் இனூயிட்(Inuit) எனப்படும் எஸ்கிமோக்கள் "சீலை" பச்சையாக உண்ணுவார்கள்.மாமிசம் மட்டுமே உணவு. பனி மட்டுமே உள்ள அந்த இடத்தில் போய் "சைவம்" போதித்தால் சைவக் கடவுள் சிவனே சீல் சாப்பிட்டுவிட்டு போடா புண்ணாக்கு என்பான்.

வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது. குண்டுசட்டிக்குள் ...சரி விடுங்க...

Inuit பற்றி மேலும் அறிய:

அல்வாசிட்டியின் பதிவு
http://halwacity.blogspot.com/2005/04/1922.html
உறுமி மேளத்தின் பதிவு
http://paari.weblogs.us/archives/72

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

எனக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது.

நான் சில காலமாக புலால் உண்ணாமல் இருப்பதற்கு காரணம் ஒரு கோழியையோ, ஆட்டையோ விட மனிதன் எந்த விதத்தில் உயர்ந்தவனாகி விட்டான்?

மற்ற உயிர்கள் மனிதன் செலுத்துவதைப் போலவே அன்பு செலுத்துகின்றன. மனிதனை விட குறைவாகவே வன்முறையில்(உணவு, survivalக்காக மட்டுமே)ஈடுபடுகின்றன.

எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே சரி என்று தோன்றியதால் தான்.

உங்க கேள்விக்கு எனக்குத் தோன்றிய பதில் பிற உயிர்களுக்குத் துன்பம் வரும் என்ற தெரிந்த பின்னும், அந்த உயிரைக் கொல்லாமலே வாழலாம் என்று சூழ்நிலை இருக்கும் பொழுதிலும் பிற உயிர்களை துன்புறுத்தி மாமிசம் உண்பவனுக்கு ஞானம்(அப்படி ஒன்று இருக்கிறது என்றால்)பெற முடியாது.

ஞானவெட்டியான் said...

//முதலில் ஞானம் என்றால் என்ன?//
ஞானம் என்பது மோன(மவுன) வரம்பு.
"உண்மையான ஞானம் என்பது பிறந்த குழந்தைக்கு உள்ள அறிவுதான்"
"மனிதன் தன் மனத்தடைகளை அகற்றிவிட்டால் அவனுக்கு எஞ்சி இருப்பது ஞானம்தான்"
எண்ணங்கள் எழாநிலைதான் ஞானம்.

//"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்."//

கொல்லான் = சீவனாகிய விந்தைக் கொல்லாதவன்(சீவகாருண்யம்)
புலால் மறுத்தல் = புலாலாகிய உடலின்பத்தை மறுத்தவன்

ஏதோ எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீங்கள் முடிவெடுங்கள்

பொன்ஸ்~~Poorna said...

இந்தப் பதிவை இப்போ தாங்க பார்த்தேன்.. "யப்பா ஞானம்"னு ஒரு பாட்டுவருமே.. அது தான் நினைவுக்கு வந்தது :)))

என்னவோ ஒண்ணு. பசித்துக் கொண்டிருக்காம, எது கிடைத்தாலும் சாப்பிடலாம். அவ்வளவுதான்! ஞானம் என்பது எந்தத் துறையில், எந்த வகையான ஞானம் என்பதும் இருக்கே.. அப்படிப் பார்த்தால், புலால் உணவுகளைப் பற்றிய மெய்ஞ்ஞானம், அதைச் சாப்பிடாதவங்களுக்கு எப்படி இருக்க முடியும்? ;)
டிஸ்கி: நான் சுத்த சைவம் :))

மாசிலா said...

//"உண்மையான ஞானம் என்பது பிறந்த குழந்தைக்கு உள்ள அறிவுதான்"// எவராலும் புரிந்துகொள்ள முடியாத அந்த நிலையை நீர் ஞானம் என விளக்க முயற்சிப்பது ஒத்துக்கொள்ள முடியாதது. மேலும் உம் வாக்கிலிருந்து என்ன தெரியவருகிறது என்றால் : 'எது புரியாத ஒன்றோ, அதுதான் ஞானம்' என்பதுதான் அதற்கு 'அறியாமை' என்று பெயர்.

ஒரு தொழிலிலோ, துறையிலோ, கலையிலோ, படிப்பிலோ கை தேர்ந்தவர்கள் அந்தந்த துறையில் "ஞானி" என்பர்.
""ஒரு கொள்கை உணர்வோடு, அதில் நம்பிக்கை வைத்த பிறகு, அட்டவனைபோட்டு, மனநிலையை ஒருநிலைபடுத்தி மூர்க்கத்தனமாய், வெறித்தனமாய், எந்த பாகுபாடும் பார்க்காமல் அடையவேண்டிய இலக்கை முன்னமே நிலைநிறுத்தி, தான் இதைத்தான் அடையவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் சுய இன்பத்திற்காக உணரப்படும் உணர்ச்சிகளின் பெயரல்ல ஞானம். அதன் பெயர் 'ஆசை'

நன்றி. வணக்கம்.
உங்கள் மாசிலா.



சுத்த தவறு! அது எதுவே இல்லை! தாயின் ஒரு பாகந்தான் அப்பச்சிளங்குழந்தை!

மாசிலா said...

//கொல்லான் = சீவனாகிய விந்தைக் கொல்லாதவன்(சீவகாருண்யம்)
புலால் மறுத்தல் = புலாலாகிய உடலின்பத்தை மறுத்தவன்//
மன்னிக்கவும் ஐயா! இதன் பெயர் வெரும் "ஒரு மடத்தனம்."

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com