Monday, September 11, 2006

ஆடு தீண்டலாம் மாடு தீண்டலாம் நாங்க

தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை இன்னும் உணராமல் சாதி ஆதிக்கம் பேசி, அவர்களது வாழ்வை இந்துத்துவ வலையில் சிக்க வைக்கிறவர்கள் கேட்க வேண்டிய பாடல். இன்னுமா நாங்களெல்லாம் இந்துக்கள்?

சாதி ஆதிக்கத்தில் ஊறி வளர்ந்த மனங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வு, வேதனை, கலை, இசை, மொழி, வழிபாட்டுமுறை புரிவது கடினமானது தான். RSS, சங்பரிவார கும்பலின் பார்வையில் எல்லோரும் இந்துக்கள்! ஆடு மாடு கூட தொடலாம்; ஆனால் சக மனிதன் தொட்டால் தீட்டு! பசுவை தெய்வமாக வழிபாடும் சக மனிதனுக்கு அடிமைத்தனமும், அவமானமும்! இந்துக்களே ஒன்று படுங்கள்!!

எதற்கு? எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, நிலம், அதிகாரம் என உரிமைகளை சமூகநீதியுடன் பகிர்ந்து கொடுக்கவா?

கேளூங்கள் இந்த பாடலை http://www.acidplanet.com/artist.asp?PID=868449&T=2876

4 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) said...

பாடலின் சுட்டியைத் தந்ததற்கு நன்றி திரு.

மிக உருக்கமான குரலில் அருமையான கருத்துகளையும் கேள்விகளையும் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல பதிவு திரு. இன்னும் பாடல்கள் இருந்தால் பதிக்கவும்.

Sivabalan said...

திரு,

பாடலின் சுட்டிக்கு மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

பாடலின் வரிகளைப் படிக்க

http://theyn.blogspot.com/2006/09/blog-post_11.html

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com