Friday, March 10, 2006

ஒரு செத்த பசுவும், ஐந்து மனித உயிரும்!!

அக்டோபர் 15, 2002 தசரா பண்டிகை அன்று தூரத்தில் சில உருவங்கள் மட்டும் நடமாடுவது போல தெரிகிறது, இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து 2 மணிநேர பயண தூரத்தில் ஹரியான மாநிலத்தின் சாலைப்பகுதியில் பொழுது சாயும் வேளை.

ஒரு கும்பல் தசரா நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு ஜாஜர் என்ற அந்த கிராமத்தில் அப்போது தான் நுழைந்தது. அவர்களுக்கு தூரத்தில் நடமாடிய அந்த உருவங்கள் (இறந்த) ஒரு பசுவின் தோலை உரிப்பது போல தெரிந்தது. வெறி பிடித்த கும்பல் அந்த மனிதர்களை நோக்கி கத்தியவாறு ஓடியது.

"அவர்களை கொல்லுங்கள்!"

தொடர்ந்து கூச்சல்கள், கதறல்கள்.

சில மணி நேரங்களில், இந்து தீவிரவாதிகளிடமிருந்து குற்றுயிராக கைப்பற்றிய கண்ட துண்டமாக வெட்டப்பட்ட 5 மனிதர்களது உடல்கள், அருகாமையிலிருக்கும் காவல் நிலையத்தில் பிணமாக கிடந்தது. அந்த ஐவரும் வீரேந்தர், தயாசந்த், தோடா ராம், ராஜு மற்றும் கைலாஷ் என்னும் தலித்துகள்.

ஏன்?

அவர்கள் ஐவரும் (இந்துக் கடவுள்களையே வழிபட்டாலும்) தீண்டத்தகாதவர்கள் என அடிமைபடுத்தபடுபவர்கள். அவர்கள் தோலை உரித்த பசு உயர்சாதி இந்துக்களுக்கு புனிதமானது.

மறுதினம் விஸ்வ இந்து பரிசத் என்கிற சங்பரிவார இயக்கத்தின் துணைத்தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிசோர் விடுத்த அறிக்கையில், "இந்துமத வேதத்தின் படி, பசுவின் உயிர் மனித உயிரை விட மேலானது" என இருந்தது. பிராமணர்களை படைத்த அதே தினத்தில் பசு படைக்கப்பட்டதாக உயர்சாதி பழமைவாத இந்துக்கள் நம்புகின்றனர். அதனடிப்படையில் பசு புனிதமானதாகிறதாம்.

????

அந்த பசுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு ஆய்வறிக்கைகள் அந்த பசு ஏற்கனவே செத்தது என்பதை வலியுறுத்தியது. படுகொலை செய்யப்பட்டவர்கள் தோல் பதனிடும் பணிகளை செய்பவர்கள். ஆக, அவர்களது தொழிலை செய்தவேளை கொல்லப்பட்டிருக்கிறார்கள். உயர்சாதி இந்துக்களின் அடிமைத்தனத்தால் படுகொலை, உடமைகள் சூறையாடப்படல், பாலியல் பலாத்காரம், இருப்பிடங்களை விட்டு துரத்தப்படல், மனரீதியான துன்பங்களுக்கு ஆட்படுத்தப்படல், வேலையிழப்பு என அனைத்து விதமான சித்திரவதைக்கும் ஆளாக்கப்படும் மக்களில் இவர்கள் வெறும் ஐவர் மட்டுமே!

அப்போதைய அவுட் லுக் பத்திரிகை சென்னை நிருபர் சிரியவன் ஆனந்த், "மனிதமலத்தை தலித்களின் வாயில் ஊற்றுவது, நிவாணமாக தெருக்களில் போக கட்டயப்படுத்தும் வன்கொடுமைகள் தலித்களுக்கு எத்ராக இன்றும் தொடர்கிறது..." என்கிறார். மேலும், "இந்திய மக்கள் தொகையில் 165 மில்லியன் மக்கள் தலித்துகள். பசுக்கள் சுமார் 206 மில்லியன்... அதனால் பசுக்களுக்கு, தலித்துகளை (மனிதர்கள்) விட உரிமை அதிகம் தான். உதாரணமாக, பல்லாயிரம் பேர் வேடிக்கை பார்க்க தலித்துகளை படுகொலை செய்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் ஒரு பசுவை கொலை செய்ததாக பரப்பப்பட்டாலும் தண்டனை. உயர் சாதி இந்துக்களின் மலத்தையும் சிறிநீரையும் தலித்துகள் வாயில் திணித்து வன்கொடுமை நடக்கையில் பசுவின் சாணத்தையும் மோத்திரத்தையும் சாப்பிட அரசு தூண்டுகிறது" என்கிறார்.

"ஆடு தீண்டலாம், மாடு தீண்டலாம் நாங்க மனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?" இது ஒரு எழுச்சி கீதத்தின் ஏக்கக்குரல்.

அடிமைப்படுத்துவதும், அடிமைத்தனத்தை கட்டிக்காப்பதும், அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக நிற்பதுவும் குலக்கடமையாக கொண்டவர்கள் மனித உயிர்களையும், மனிதர்களின் கண்ணியத்தையும் மதிக்கும் காலம் என்று வருமோ? பசுக்களுக்காக பரிந்து பேசி இயக்கம் காண்கிற இந்தியாவில், மனித உயிர்கள் படுகொலை செய்யப்படுகையில் பல சமயங்களின் பிறப்பிடம் என தம்பட்டம் அடிப்பதில் என்ன இருக்கிறது? மனிதனை மதிக்கத் தெரியாதவர்களுக்கு மதம் என்பது மதம் பிடித்த யானையை போல. அது ஆப்கானிஸ்தானில் நடந்தால் என்ன? இந்தியாவில் நடந்தால் என்ன? இவர்கள் தீவிரவாதிகளே!

நினைவுகளுடன்...

திரு

8 பின்னூட்டங்கள்:

சிறில் அலெக்ஸ் said...

இதுபோன்ற சில தகவல்கள் சாதி, மதம் பற்றிய (என்) நிலைப்பாடுகளை குலைக்கின்றன. கேவலம்.

நாமெல்லாம் வல்லரசாகி என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை. வெட்கக்கேடு.

Thangamani said...

என்ன இந்தியா வல்லரசாகி, எங்கும் சமத்துவம் தலைத்தோங்கி எல்லோரு முன்னேற்றப்பாதையில் ஓடும் போது இப்படியான கருத்துக்களைச் சுமந்துகொண்டு பிற்போக்காளராய் இருக்கும் உங்களை என்ன செய்தால் தகும்?

:)

சந்திப்பு said...

திரு இந்த பரிவார கும்பல்தான் ---இந்தியா ஒளிர்கிறது--- என்று பிரச்சாரம் செய்தது. வல்லரசு இந்தியா என்றெல்லாம் பீற்றிக் கொண்டது. நம்நாட்டு மண்ணின் மைந்தர்களை புழுக்களை விட கேவலமாக நினைக்கும் இந்த பரிவார கும்பலை வேறோடு பிடுங்கி எறிய வேண்டியது இன்றைய அவசிய கடமை. திராவிட இயக்கங்கள் எல்லாம் பரிவாரத்தோடு - பரிவட்டம் போட்ட பின்னர். பரிவாரத்திற்கு எதிராக உறுதியாக போராடுபவர்களோடு இணைந்து பாடுபடவேண்டியது வரலாற்று கடமையாகிறது.
அந்த நாளிலே நந்தன் நெஞ்சிலே ஆரம்பித்தது தீப்புண்ணில்.....
என்ற பாடல் வரிகள் நெஞ்சில் தீயை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறது.

thiru said...

//சிறில் அலெக்ஸ் said...
இதுபோன்ற சில தகவல்கள் சாதி, மதம் பற்றிய (என்) நிலைப்பாடுகளை குலைக்கின்றன. கேவலம்.

நாமெல்லாம் வல்லரசாகி என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை. வெட்கக்கேடு.//

இதுவும் வல்லரசுக்கான ஒரு தகுதி தானே சிறில் :)

thiru said...

//சிவனடியார் said...
// பிராமணர்களை படைத்த அதே தினத்தில் பசு படைக்கப்பட்டதாக உயர்சாதி பழமைவாத இந்துக்கள் நம்புகின்றனர். //

அடேங்கப்பா இவர்களுக்கு இவர்களது பிறப்பின் ஆதிதெரியுமா.என் கணக்குப்படி தெருநாய்களைவிட கேவலம் என்று சொல்வேன்.//

நாய்களை திட்டாதீங்க நண்பரே! :)

thiru said...

//Thangamani said...
என்ன இந்தியா வல்லரசாகி, எங்கும் சமத்துவம் தலைத்தோங்கி எல்லோரு முன்னேற்றப்பாதையில் ஓடும் போது இப்படியான கருத்துக்களைச் சுமந்துகொண்டு பிற்போக்காளராய் இருக்கும் உங்களை என்ன செய்தால் தகும்? :) //

:) :D

Chandravathanaa said...

நம்பமுடியவில்லை.
மதத்தின் பெயரால் இப்படியும் செய்வார்களா!

மனிதனை மதிக்கத் தெரியாதவர்களுக்கு மதம் என்பது மதம் பிடித்த யானையை போல.

நண்பன் said...

திரு,

// இவர்கள் தீவிரவாதிகளே! //

சரியாகச் சொன்னீர்கள்.

இது தான் இந்துத்வமா? என்று நான் கேட்டால், மனம் புண்படுகிறது என்கிறார்கள்.

இதைப் படித்தால் மனம் குளிர்வார்களோ? சரியான இந்துத்வத்தை சுட்டிக் காட்டியதினால், இப்பொழுது தான் அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும், இல்லையா?

அன்புடன்,
நண்பன்

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com