Wednesday, August 24, 2005

வேலியே பயிரை மேயும் கொடுமை!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு! இது தான் காவல்துறையின் அடிபடைப் பண்பு என சின்ன வயதில் பலமுறை நினைத்துப் பார்த்து என்னை காக்கி உடைக்குள் திணித்து கனவுகள் கண்டிருக்கிறேன்! தமிழ்படங்களில் வரும் வில்லனை காவல்துறை அதிகாரி விரட்டி பிடிப்பது போல நானும் பிடித்திருக்கிறேன் பல சமூகவிரோதிகளை... எல்லாம் கனவில் மட்டும்தான்! சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலிய காவலர் பயிற்சி மையத்தில் சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்தது! அப்போது அங்கு பழகிய காவலர்களுக்கும், நான் தமிழ்நாட்டில் சந்தித்த காவலர்களுக்கும் பணியில் இருக்கும் வேறுபாட்டை கண்டதன் விளைவு என் நினைவலைகள் எனது அனுபவத்தை நோக்கி சென்றது!

எல்லோரையும் போல எனக்கும் சிறுவயதில் காக்கி உடைகளை பார்த்தாலே பயம். குடும்பத்தில் வேறு யாருமே (சில போராட்டங்களில் சிறைபட்டது தவிர) மழைக்காக கூட காவல்நிலையம் பக்கம் போனதில்லை. வளரும் போது நான் சந்தித்த அனுபவங்கள் என்னையும் காவல்நிலையத்திற்கு செல்லவைத்தது. சில அனுபவங்கள் நல்ல மனிதர்களை காக்கி சட்டைக்குள் எனக்கு அடையாளம் காட்டியது, பல அனுபவங்கள் காக்கி உடைக்குள் நெளிந்து புரண்டு வாழ்கிறதுகளை காட்டியது!

1. எனக்கு சுமார் 16 வயதிருக்கும் போது அது ஒரு தேர்தல் நேரம். வாடகைக்கு எடுத்த மிதிவண்டியை (அதுதாங்க தமிழில் சைக்கிள்) நிறுத்தியபடி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வேளை, வெள்ளை வண்டி (காவல்துறை வாகனம் தான்) வந்து என்னருகில் நிற்கவும் எல்லோரும் தலைதெறிக்க ஓட்டமெடுக்க.... நடக்கபோவதை சரியாக உணராமல் நானும் வண்டியை விட்டு கீழே இறங்கி கொஞ்சம் நகர்ந்து நின்றேன்! வண்டியை விட்டு வந்த "கடமை தவறாத" அதிகாரி சைக்கிளில் கைத்தடியால் அடித்து து}க்கி வீசி காற்றையும் பிடுங்கி விட்டார். அதை பார்த்துகொண்டே பொருமிய கடைகார நண்பரிடம் வாங்கி கட்டிக்கொண்டது மட்டுமல்ல, பட்ட கடனை அடைக்க பல மாதங்கள் ஆனது எனக்கு! இன்றுவரை நான் செய்த சட்டம் ஒழுங்கு குற்றம் பற்றி சிறிதும் விளங்கவில்லை!

2. முதல் அனுபவத்தால் நடுங்கியவாறு அணுஆலை எதிர்ப்புப்போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட தலைமை காவல்நிலைய அதிகாரியை சந்திக்கபோனேன். சிகரெட் புகைக்கும், அணு-உலை கதிர்வீச்சுக்கும் தொடர்புபடுத்தி "அணு-உலை எதிர்ப்பு போராட்டத்தை" கொச்சைபடுத்திய அந்த "அறிவியல் அனுபவசாலியை" காவல்துறை அதிகாரியாக கண்ட எனக்கு சளைக்காமல் பதில் சொல்லி அனுமதி வாங்கிய போதுதான் புரிந்தது காவல்துறையின் இன்னொரு குணம்!

3. வேலையும் தேடிக்கொண்டே சமூகபணியில் இருந்தவேளை 1993ம் ஆண்டு. மூன்று தலைமுறையாக 10 குடும்பத்தினருக்கு கிடைக்காத பாதை, மின்சாரம் போன்ற வசதிகளுக்காக செயலில் இறங்கிய எனது கிராமத்திற்கு முன்னால் நான். எதிர்ப்பாளர்கள், அடியாட்கள் தொல்லை, அரசியல் நெருக்கடி, உயிருக்கு அச்சுறுத்தல் என அனைத்தையும் மீறி அமைதியான பாதையில் சென்றவேளை ஒரு அசம்பாவிதம். எங்கள் பகுதியிலிருந்து சில இளைஞர்கள் (சம்பவம் நடந்த நேரம் நான் காவல்துறை அதிகாரியின் முன் பேச்சுவார்த்தையில் இருந்தேன்) எதிரணியில் ஒருவரை தாக்கியதன் விளைவு என்னையும் சில முதியவர்களையும் காவல்நிலையத்தில் வைத்து தலைமைக்காவலர் பேசிய பேச்சின் நச்சுத்தன்மையுன், வக்கிரமும் இன்னும் என் நினைவில். அந்த காவல்நிலைய அதிகாரி கடமை தவறாதவர். அப்போதைய ஜெயலலிதா அரசின் வனத்துறை அமைச்சர் கொடுத்த நெருக்கடிகளையும் சந்தித்து நேர்மையாக இருந்ததால், காவல்துறையின் அடியும், பொய்வழக்குமில்லாமல் தப்பித்தேன். இப்போது பெரியசாலையே கிடைக்கபெற்று வண்டிகள் வந்து போவதையும், தெருவிளக்கு எரிவதையும் பார்க்கையில் அந்த வயது அனுபவம் இனிதாக வந்து என்னை தொட்டுச்செல்லும்.

4. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு பிரச்சனையில் எனது தவறான முடிவு காரணமாக சம்பந்தபட்டவர்களோடு தீர்க்கமுடியாமல் அனுபவித்த கொடுமையும் அதன் தொடராக நான் எடுத்த முடிவுகளும் பரிதாபமானது. அது நான் வாழ்க்கையை தொலைத்த நிகழ்வு! சம்பந்தபட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இந்தமுறை குற்றவாளியாக காவல்நிலையத்தில் 24 மணிநேரம் அனைத்து உளவியல் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டேன். ஆனால் எனது மனதுக்கு மட்டும் தெரியும் நான் குற்றவாளியல்ல! என்னால் மற்றவர்களுக்கு வந்த பாதிப்பை போக்க எடுத்தமுயற்சியில் நான் பலியிடப்பட்டேன். காவல்நிலையத்தில் சிறை வைத்து விட்டு பொய்வழக்கு போடுவேன் என சொல்லி பேரம்பேசி ஒரு பெரும்தொகையை எனது விருப்பம் இல்லாமலே, சிலரிடமிருந்து இழப்பீட்டு தொகை என வாங்கி பங்கு போட்ட அந்த "கண்ணியம் மிக்க காவல்துறை அதிகாரி" திரு.ஜெயபிரகாஷ் அவர்களை இன்றும் மனதில் தேடுகிறேன். அந்த பெரும்தொகையை நான் இழக்க நேர்ந்ததால் அல்ல, மனதை சித்திரவதை செய்து பொய்யான காரணம் சொல்லி அபகரித்ததால். அன்று அந்த காவல்துறை அதிகாரிக்கு நான் சொன்னது "நல்லவர்களும், நேர்மையும் வரவேண்டிய இடம் இதுவல்ல".

காவலர்களுக்கு மட்டும் இதயம் இருக்கவேண்டிய இடத்தில் இரும்பா இருக்கிறது? இந்தியாவில் காவல்துறையில் அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படிதல் என்ற பெயரில் அடிமை கூட்டத்தை வளர்க்கும் முறை தான் இருக்கிறது. அதிகாரி முதல் அமைச்சர் வரை வரும் போது காவலுக்கு பலமணி நேரம் அடிமைகளை விட கேவலமாக காத்திருப்பதும், எடுபிடி வேலை பார்ப்பதும் தான் தலையாய கடமை. ஒரு ஆட்சி மாறி மற்றொரு ஆட்சி வரும்போது காவல்துறையும் கட்சி மாறிவிடுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பழக்கமும், மனித உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை. காவல் நிலையத்திற்கு செல்பவர்கள் குற்றாவாளி தானா என அறியும் முன்னரே கொடுமையான அடக்குமுறைகளும், நெருக்கடிகளை கொடுப்பதும் வாடிக்கை. பணம், பதவி எங்கு இருக்கிறதோ அந்த பக்கம் சார்பாக சாய்ந்து கிடக்கிறது காவல்நிலையங்கள். காவல் நிலைய பாலியல் கொடுமைகள், கொலைகள், பொய்வழக்குகள் என காவல்துறையின் இதயமும், கரங்களும் துற்நாற்றம் வீசுகிறது. பதவியில் இருப்பவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் கொடும்குற்றச்செயல்கள் புரிந்தாலும் அதிக பாதுகாப்புடன் வலம் வரலாம் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிக்கு துணையாக இருந்து அநீதியை அழித்தொழிக்க வேண்டிய காவல்துறை, அடக்குமுறையாளர்களின் வீட்டை காவல் காக்கும் விசுவாசம் மிக்க ஊழியனாக. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தின் காவலர் பற்றிய பத்திரிக்கை செய்திகள் அச்சத்தை அதிகமாக்குகிறது!

போலி முத்திரைத்தாள் அச்சடித்த கும்பலுக்கு உதவியாக இருந்தது கன்ணியம் மிக்க காவல்த்துறை அதிகாரி ஒருவர், இன்று அவர் சிறையில். ஒரு பெண்ணை துன்பத்தின் எல்லைக்கே துரத்தி துரத்தி சிதைத்த குற்றத்தில் 23க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள்! கடந்த பல வருடங்களில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை கும்பலுடன் தொடர்பு என குற்றச்செயலில் காவல்துறையினரின் பங்கு அதிகமாகி வருகிறது!

நீதிக்காக காவல் நிலையங்களிலும், சிறைக்கொட்டடிகளிலும் அடைந்து கிடக்கும் அபலைகளுக்கு நீதி எப்போது கிடைக்குமோ? ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வதைக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் கொடுமை என்ற எங்கள் தலைவர்கள் ஆட்சியில் நடக்கும் அடக்குமுறைக்கு என்ன பெயரோ? காவல்துறையில் களையெடுப்பதும், கவலர்களுக்கு மனிதநேயம் பற்றி புரிய வைப்பதும் நமது சமூக கடமை! காவல் நிலையங்களை குற்றங்களுக்கான காரணங்களை கழைகிற குற்றச்செயல்களின் தடுப்பு மையங்களாக மாற்றுவோம். மக்களிடம் பண்பாக, நாகரீகமாக நடந்துகொள்ளும் தன்மை காவலர்களுக்கு வழங்கப்படவேண்டும். இல்லையேல் காவலர் குடியிருக்கும் தெருவில் மனித உரிமையும், மனிதநேயமும் முழுதாக துகிலுரியப்படும்! வருகிறேன் என் நினைவுகளோடு...

நினைவுகளுடன்...
திரு

3 பின்னூட்டங்கள்:

P.V.Sri Rangan said...

குற்றவியல் சட்டதிருத்தங்கள் ' போலிசே நீதிபதி!'

வழக்குரைஞர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக குற்றவியல் நடைமுறைச் சட்டத் (இணூ.கஇ) திருத்தங்களின் அமலாக்கத்தை மைய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இல் காங்கிரசு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டத் திருத்தங்களில் பெரும்பகுதி போலீசு கமிசனால் சிபாரிசு செய்யப்பட்டவை என்கிறார்கள் போராடும் வழக்குரைஞர்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசு கமிசனுக்கு எந்த விதத்திலும் சளைக்காத சட்டக்கமிசனும் இலேயே இந்தத் திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை அங்கீகரித்திருக்கிறது.


இருப்பினும்க டந்த ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தச் சட்டத் திருத்தம் காங்கிரசு கட்சியுடன் சேர்ந்து மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டது. கடந்த மே மாதம் ?ம் தேதியன்று நாடாளுமன்ற மேலவையிலும் ?ம் தேதி மக்களவையிலும் எவ்வித எதிர்ப்புமின்றி சத்தமில்லாமல் நிறைவேற்றப்பட்டு விஞ்ஞானி கலாம் அவர்களின் கைநாட்டையும் பெற்றுவிட்டது.


தடா பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் அவற்றின் கடைந்தெடுத்த பாசிசத் தன்மை காரணமாகவும் அவற்றை அறிமுகப்படுத்தும் போது ஆளும் கட்சிகளும் அதிகார வர்க்கமும் திட்டமிட்டே கிளப்பும் ஆரவாரம் காரணமாகவும் மக்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. அத்தகைய சட்டங்களை ஏந்திச் சுழற்றும் போலீசின் இயல்பான அராஜகமும் ஜெயலலிதா போன்ற பாசிஸ்டுகளின் விசேட குணாம்சங்களும் அதுவரை எதையும் கண்டுகொள்ளாமலிருந்த மக்கட்பிரிவினரின் பார்வையையும் இத்தகைய சட்டங்களை நோக்கித் திருப்பி விடுகின்றன.
தடா பொடா போன்ற சட்டங்கள் ஷகிலா படத்தைப் போலப் பச்சையானவை. தற்போதைய சட்டத்திருத்தமோ ஆபாசத்தை அடையாளம் காண முடியாத ''ஈஸ்ட்மென் கலர் குடும்பச் சித்திரம் போன்றது. ''பெண்களை இரவில் கைது செய்யக்கூடாது பகலில் கைது செய்வதென்றாலும் பெண் போலீசார்தான் கைது செய்ய வேண்டும்??காவல் நிலையக் கொலை மற்றும் பாலியல் வன்புணர்ச்சிக்கு நீதித்துறை விசாரணை??யார் கைது செய்யப்பட்டாலும் கைது குறித்த விவரங்களை 'கைதி??குறிப்பிடும் நபருக்குத் தெரிவிக்க வேண்டும்???போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களில் சில.
பொதுக் கருத்தைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் திட்டமிட்டே தொங்கவிடப்பட்டிருக்கும் இந்தப் 'பூசணிக்காய்களை??ஒதுக்கித் தள்ளிவிட்டு உள்ளே செல்லும்போதுதான் சட்டத்திருத்தத்தின் உண்மையான முகம் நமக்குப் புலப்படுகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.
????சாதி மத சமூக (வர்க்க) அடிப்படையில் வகுப்பு மோதல்களைத் தூண்டுவது முதல்??இந்த அடிப்படையில் சட்டபூர்வமாக அமைந்த அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுவது???வரையிலான குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐகஇ) ???அ??ஆ பிரிவுகள். அத்வானி வகையறாக்களுக்காகவே உருவாக்கப்பட்டதை போன்று தோன்றும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அதிகம் கைது செய்யப்படுபவர்கள் புரட்சியாளர்களும்??ஜனநாயக சக்திகளும்தான்.
கொக்கோ கோலாவிற்கு எதிராகச் சுவரெழுத்து எழுதிய குற்றத்துக்காக தருமபுரியைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்கள் இந்தக் குற்றப் பிரிவின் கீழ்தான் இன்னமும் சிறையில் இருக்கின்றனர். 'பார்ப்பன??என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக ம.க.இ.க. தோழர்கள் இந்தக் குற்றப்பிரிவின் கீழ் பலநூறு முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாபர் மசு10தியை இடித்ததற்காக அத்வானி மீதும் இந்தப் பிரிவில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.
மசு10தி இடிப்பிற்கு காவல் நின்ற ராவ் அரசு??மதவெறியை ஒடுக்குவதற்காக என்று காரணம் சொல்லி ??? அ ஆ என்று புதிய திருத்தத்தை ????இல் கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய திருத்தத்தின்படி பொது இடங்களில் குச்சியுடன் ஊர்வலம் போவது விசேட தண்டனைக்குரியதாம்! இது ஆர்.எஸ்.எஸ்.இன் தடிக்கம்பை நிச்சயம் பிடுங்கப் போவதில்லை??தொழிலாளிகளின் கொடிக்கம்பைப் பிடுங்குவதுதான் இதன் நோக்கம்.
??ஆர்.எஸ்.எஸ்.இன் பெயரைச் சொல்லி ??? தடையுத்தரவிலும் 'அ??என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ? மாத காலத்திற்கு ஒரேயடியில் இந்த 'ஊரடங்கு??உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டே இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டால்??ஆர்ப்பாட்டம்??ஊர்வலம்??உண்ணாவிரதம் உட்பட எந்தவிதமான 'தொந்தரவு?ம் இல்லாமல்??ஆளும் வர்க்கங்கள் தமது சுரண்டலை நடத்த முடியும். அதிகார வர்க்கமும் போலீசும் தமது 'கல்லா கட்டும் கடமையை??இடையூறின்றிச் செய்ய முடியும்.
??அரசு ஊழியர்களைத் தமது கடமையை ஆற்றவிடாமல் தடுத்தால்??பேசினால்??பார்த்தால்கூடக் கைது செய்ய ஏதுவாக இந்தியத் தண்டனைச் சட்டத்தில் ????????????? போன்ற பிரிவுகள் ஏற்கெனவே உள்ளன. ''மரியாதையா பேசுங்க சார்???என்று போலீசிடம் கூறும் அளவு மானமுள்ளவர்கள்??போலீசிடமே சட்டம் பேசும் அளவு துணிவுள்ளவர்கள் போன்றோர்தான் தற்போது இந்தப் பிரிவுகளில் கைது செய்யப்படுபவர்கள்.
இவர்களில் பலர் போலீசாரையும் அரசு அதிகாரிகளையும் தாக்கி விடுகிறார்களாம்??கைதானாலும் பிணையில் வந்து விடுகிறார்களாம். இதன் காரணமாக போலீசைத் தாக்குவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதத்தைப் பறிமுதல் செய்ய முடிவதில்லையாம். பறிமுதலை உத்திரவாதப்படுத்துவதற்காக இது பிணையில் வர முடியாத??அதாவது சிறைக்குச் சென்றே தீரவேண்டிய குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறதாம். போலீசை எதிர்த்துப் பேசுபவர்கள் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. இந்தச் சட்டத்திருத்தத்தின்படி பல்லும் நாக்கும் கூடப் பறிமுதல் செய்யப்படும் ஆயுதங்களாகி விடலாம்.
??அரசியல் இயக்கங்கள்??தொழிற்சங்க இயக்கங்களைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்காகவும்??ரேசன் அரிசி??குடிநீர்??பேருந்து போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் மக்களுக்காகவுமே ஒதுக்கப்பட்ட பிரிவு ஒன்று உண்டென்றால் அது இ.பி.கோ.??????கலைந்து போ??என்று போலீசு சொன்ன மறுகணமே போகாதவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்காகப் போடப்படும் பொய் வழக்குகள் அனைத்திலும் இந்தப் பிரிவு கட்டாயம் இடம் பெறும். 'குற்றமுறு மிரட்டல்??என்று கூறப்படும் இந்தக் 'குற்றத்தில்???குற்றம் சாட்டப்படுபவர் வன்முறையில் ஈடுபடவோ??ஆயுதம் வைத்திருக்கவோ தேவையில்லை. வெறும் வாய் மிரட்டல் என்று வழக்கு பதிவு செய்தால் போதுமானது. இதற்கான தண்டனை ?இலிருந்து ? ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு முறைக்கு மேல் இந்தப் பிரிவில் கைது செய்யப்படுபவர்களை போலீசு நிலையத்தின் 'கேடி லிஸ்டில்??சேர்க்கவும் சொல்கிறது புதிய திருத்தம்.
??பிணை??நீதிமன்ற வாய்தா ஆகியவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களோ குற்றம் சாட்டப்பட்டவரை நிரந்தரமாகச் சிறையில் வைக்க வழி செய்கின்றன. சாதாரணக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் ஏழைகள் பிணையில் வெளிவர முடியாமல் தவிப்பதற்கு முக்கியக் காரணம் 'சொத்துள்ள ஜாமீன்தாரர்கள்??யாரும் அவர்களுக்கு இல்லாமலிருப்பதுதான். மனிதனைக் காட்டிலும் சொத்தை மதிக்கும் நம் நீதிமுறை??தொழில்முறை ஜாமீன்தாரர்கள் பலரை நீதிமன்ற வளாகத்திலேயே உருவாக்கி விட்டிருக்கிறது. அவர்கள் இனி ஒவ்வொருமுறை ஜாமீன் கொடுக்கும் போதும்??ஏற்கெனவே அவர்கள் எத்தனை பேருக்கு ஜாமீன் கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது புதிய திருத்தம். இதன் விளைவாக ஜாமீனின் 'விலை??உயரும். ஏழைகள் நிரந்தரமாகச் சிறையில் வாட நேரும்.
??ஜாமீனில் வெளிவந்தவர்கள் நீதிமன்ற வாய்தாவுக்கு ஒருமுறை வரத் தவறினாலும் ஓராண்டு தண்டனை என்கிறது இன்னொரு திருத்தம். வாய்தாவுக்கு வராத போலீசு அதிகாரிகள்??வாய்தா போடுவதையே ?? சதவீதக் கடமையாகச் செய்து வரும் நீதிபதிகள் ஆகியோருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. பிழைப்பை விட்டு நாள் முழுவதும் நீதிமன்றப் படிக்கட்டில் காத்து நிற்கும் ஏழைகளுக்கு மட்டும் சிறை!
??போலீசின் பொய் வழக்குகளிலிருந்து தற்காத்துக் கொள்ளப் பயன்படும் 'எதிர்பார்ப்புப் பிணை???முன் ஜாமீன்) என்பதை???போலீசிடம் பிடித்துக் கொடுக்கும் பிடிவாரண்டாக மாற்றி விட்டது இந்தச் சட்டத் திருத்தம். இதன்படி முன் ஜாமீன் கோருபவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமாம். முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் போலீசு கைது செய்து கொள்ளுமாம்! நீதிமன்றத்தை காவல் நிலையமாகவும்??வழக்குரைஞர்களை ஆள்காட்டிகளாகவும் மாற்றும் இந்தத் திருத்தம்தான்??கபடத்தனமான இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை பச்சையாக அம்பலமாக்கி விட்டது. இதுவன்றி????குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் பணியை ஆர்.டி.ஓ.வே செய்யலாம்???என்ற திருத்தம் போலீசு நிலையத்தையே அதாவது அதிகார வர்க்கத்தையே நீதித்துறையாக்குகிறது.
??அரசு வழக்குரைஞர் நியமனத்திலும் பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது இந்தச் சட்டத் திருத்தம். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களால் அரசு வழக்குரைஞர் நியமிக்கப்படும் முறையை மாற்றி??ஒரு உயர் போலீசு அதிகாரியின் தலைமையிலான ஆணையத்தால் செய்யப்படும் நிரந்தர நியமனமாக அதை மாற்றுகிறது. அதாவது அரசுத் தரப்பு என்பதை போலீசு தரப்பு என்பதாகவே முழுமையாக மாற்றியமைக்கிறது.
??சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் போலீசுக்கு வெறும் அண்ணா பதக்கம் போதாதல்லவா??சிறு குற்றங்களுக்கான அபராதம்
ரூ.???இலிருந்து ரூ.???? என உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது??போலீசின் லஞ்ச வேட்டைக்கான வாய்ப்பு பெரிதாக்கப்பட்டுள்ளது.
??அழியக் கூடிய பொருட்கள் அல்லது ??? ரூபாய் மதிப்புக்குக் குறைவான பொருட்களை போலீசே ஏலம் விடவும் புதிய திருத்தம் அனுமதி தருகிறது. மோதிரம்??வாட்சு??சைக்கிள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரையிலான பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்க கடைவீதிக்குப் போகத் தேவையில்லை. இனி போலீசு நிலையத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். திருட்டுப் பொருள்களை வாங்கி விற்கும் சேட்டுகள் இத்திருத்தத்தின் மூலம் ஒழித்துக் கட்டப்படுவார்கள்!
??சிறிய சண்டை சச்சரவுகளில் கைது செய்யப்படுவோர் (பிரிவு ?????போலீசு ஸ்டேசனை ருசித்தபின் மனம் திருந்திச் சமாதானமாகப் போக விரும்பினாலும் முடியாதாம். கட்டைப் பஞ்சாயத்து செய்யும் உரிமை போலீசிடமிருந்து பறிக்கப்படுவதால்???சமாதானத்துக்கும்??தடை விதிக்கிறது புதிய திருத்தம்.
முமுமு
நாற்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்களில் சிலவற்றைப் பற்றி மட்டுமே நாம் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் திருத்தங்களின் தன்மையிலிருந்து இவற்றின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
முதலாவதாக??போலீசையும் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையின் சில்லறைத் தொந்திரவுகளிலிருந்தும் விடுவித்து??அவற்றின் வல்லாட்சியை இத்திருத்தங்கள் உத்திரவாதப்படுத்துகின்றன. இரண்டாவதாக??நடைபாதை வியாபாரிகள்??உதிரித் தொழில் செய்வோர் போன்ற ஏழைஎளிய மக்களைத் துன்புறுத்தவும்??கொள்ளையடிக்கவும் போலீசார் பயன்படுத்தும் குற்றப்பிரிவுகளைக் கடுமையாக்குவதன் மூலம் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவது குறித்து சிந்திக்கவும் முடியாமல் செய்து??ஏழைகள் அனைவரையும் குற்றவாளிகளாக்குகிறது??ஏழ்மையையே குற்றமாக்குகிறது. மூன்றாவதாக தொழிற்சங்கங்களும்??அரசியல் இயக்கங்களும்??மக்களும் நடத்தும் சட்ட வரம்புக்குட்பட்ட போராட்டங்களைக் கூட அரசு இனி சகித்துக் கொள்ளாது என்பதையும்??எதிர்ப்புக் குரலே எழும்பாத 'மயான ஜனநாயகம்??மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதையும் இத்திருத்தங்கள் தெளிவுபடுத்துகின்றன.
?சிறு குற்றங்க?ளுக்கான அபராதத்தை அதிகரிப்பது??போராடும் மக்களுக்குத் தண்டனையை அதிகரிப்பது??நீதியின் விலையை அதிகரிப்பது??போலீசின் அதிகாரத்தை அதிகரிப்பது போன்றவை இந்தத் திருத்தங்கள் தோற்றுவிக்கும் விளைவுகள். எனவே நீதிமன்றத்தின் தேவை குறைந்து சிறைச்சாலையின் தேவை இனி அதிகரிக்கும். புதிய சிறைச்சாலைகள் கட்டுவதற்காக அரசு உலக வங்கியிடம் கடன் வாங்கலாம்??அல்லது பெருகி வரும் 'குற்றச் சந்தை?யைக் கணக்கில் கொண்டு??அமெரிக்காவைப் போல இங்கேயும் சிறைத்துறையைத் தனியார்மயமாக்கலாம். இவை இந்தத் திருத்தம் தோற்றுவிக்கக் கூடிய விளைவுகள். திருத்தங்களைத் திணிப்பதற்கான காரணம் என்ன?
இந்தச் சட்டத் திருத்தங்கள் ????இல் நரசிம்ம ராவ் அரசால் ஏன் கொண்டு வரப்பட்டன??தற்போது காதும் காதும் வைத்தாற்போல அவை ஏன் திணிக்கப்படுகின்றன என்பவைதான் நம்முன் உள்ள கேள்விகள். குற்றங்கள் அதிகரிக்கும்போது அந்தக் குறிப்பிட்ட குற்றங்களுக்கான தண்டனையைக் கூட்டுவதும் புதிய வகைக் குற்றங்கள் தோன்றும்போது அதற்குத் தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதும் தவிர்க்கவியலாதவை என்பது போலீசும் சட்ட கமிசனும் அரசும் கூறும் வாதங்கள்.
குற்றங்கள் தோன்றுவதற்கான சமூக நிலைமைகளை மாற்றாமல்??குற்றத்தை ஒழிப்பதாகக் கூறும் பேச்சு. ஒரு மோசடி என்பது ஒருபுறமிருக்கட்டும்??கடந்த ?? ஆண்டுகளில் நம் கண்முன்னே அதிகரித்துவரும் குற்றங்களின் தன்மைகள் என்ன??தீண்டாமைக் குற்றங்கள்??குழந்தை விபச்சாரம்??கட்டாய விபச்சாரம்??விதவிதமான பாலியல் வக்கிரங்கள்??நிதி நிறுவன மோசடிகள்??பங்குச் சந்தை மோசடிகள்??பொதுச் சொத்தைச் சு10றையாடும் குற்றங்கள்??தண்டிக்கவே முடியாத ஊழல் குற்றங்கள்??மிச்சம் இருக்கின்ற தொழிலாளர் நல சட்டங்களைக் கூட மீறும் முதலாளிகளின் குற்றங்கள்??அதிகரித்து வரும் சுற்றுச்சு10ழல் நாசமாக்கும் குற்றங்கள்??சட்ட விரோதக் கந்துவட்டிக் கொள்ளை??போலி விதை??உரம்??பூச்சி மருந்து வியாபாரம் என மிக நீண்ட பட்டியலை நாம் கூற முடியும்.
இவையெதைப் பற்றியும் இந்தச் சட்டத் திருத்தம் கவலைப்படவில்லை என்பது மட்டுமல்ல??இந்தக் குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பல சட்டங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தும் முதலாளிகளின் கிரிமினல் குற்றம் சிவில் தாவாவாக மாற்றப்பட்டுள்ளது. ஃபெரா (ஊஉகீஅ) என்ற கிரிமினல் சட்டம் ஃபெமா (ஊஉ?அ) என்ற சிவில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஒரேயொரு சான்று.
மேற்கண்ட வகையிலான திருத்தங்கள் அரசின் 'பொருளாதாரக் கொள்கை முடிவுகள்??என்று அரசால் வகைப்படுத்தப்படுகின்றன. இந்தக் 'கொள்கை??களுக்கு எதிரான போராட்டங்களை நசுக்கவும்??தொடர்ந்து எதிர்ப்போரை 'கேடி லிஸ்ட்?இல் சேர்க்கவும் புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
போலீசைக் கட்டுப்படுத்துவது போன்ற தோரணையில் இந்தச் சட்டத்திருத்தத்தில் கூறப்படுபவையனைத்தும் நகைக்கத்தக்க ஏமாற்றுகள். ''உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் சட்டங்களே???என்ற கோட்பாட்டின்படி இவை எதுவும் புதிய கண்டுபிடிப்பு அல்ல.
கொலை??கொள்ளை??பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்திலும் கிரிமினல் கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு போலீசும் ஈடுபட்டு வருகிறது என்பதே நாம் போலீசிடம் கண்டிருக்கும் புதிய வளர்ச்சி. சட்டத்திற்குப் பணிந்து நடக்க வேண்டிய குடிமகன் இழைக்கும் அதே குற்றத்தை??சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே சம்பளம் வாங்குவோர் இழைக்கும் போது அதற்கென்ன தண்டனை என்பது குறித்து இந்தச் சட்டத் திருத்தம் மூச்சு விடவில்லை. மாறாக??இந்தச் சீருடைக் குற்றவாளிகளை மேலும் ஆயுதபாணியாக்கியிருக்கிறது.
இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களின் அன்றாட வாழ்க்கையையும்??அவர்களது அமைதி வழியிலான போராட்டங்களையும் கூட நசுக்கும் வகையிலும்??கருத்துரிமை என்பதை மக்கள் பயன்படுத்தவே முடியாத உரிமையாக ஆக்கும் வகையிலும் மாற்றுகின்ற இந்தச் சட்டத் திருத்தம் ஒரு எதிர்ப்புக் குரல் கூட இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே??எப்படி?
இதில் வியப்புக்கே இடமில்லை. நாட்டையே அடகு வைக்கும் காட் ஒப்பந்தத்தில் நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் சில அதிகாரிகள் கையெழுத்திடுவதும்??அதை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதும் சாத்தியமாகும்போது இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது?
இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது ????ஆம் ஆண்டு. காட் ஒப்பந்தத்தின் விளைவுகள் தோற்றுவிக்கக்கூடிய போராட்டங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இந்தச் சட்டத்திருத்தம்.
நாட்டின் இறையாண்மைக்குப் பொருத்தமான விகிதத்தில்தான் மக்களுக்கு ஜனநாயகம் இருக்க முடியும். இன்று 'இரண்டாவது தலைமுறைச் சீர்திருத்தம்??என்ற பெயரில் நாலு கால் பாய்ச்சலில் நாடு அக்கக்காகப் பிரித்து விற்கப்படுகிறது. 'இறையாண்மை??என்ற சொல்லே அரசியல் அகராதியிலிருந்து நீக்கப்படவிருக்கும் காலத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எனவேதான்??ஜனநாயகமும் அவசர அவசரமாக நீக்கப்படுகிறது.
இந்த 'ஜனநாயகப் படுகொலை?யை வழக்குரைஞர்கள் எதிர்ப்பது உண்மைதான். ஆனால் நீதிபதிகளோ??தனது அதிகாரத்தை தட்டில் வைத்து அதிகாரவர்க்கத்திடம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றனர். நாடாளுமன்றம்??நிர்வாக எந்திரம்??போலீசு??நீதித்துறை என்று வௌ;வேறு பெயர்களால் அழைக்கப்படும் 'அரசு???மக்களுக்கெதிராக ஒன்றுபட்டு நிற்கிறது. எனவேதான் 'ஜனநாயகத்தின்??இந்த உறுப்புகள் 'உடுக்கை இழந்தவன் கை போல??மிகவும் இயல்பாகவும்??விவாதமின்றியும்??அனிச்சையாகவே ஐக்கியப்படுகின்றன.
வழக்குரைஞர்களின் போராட்டம் இந்தச் சட்டத்திருத்தத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்திருப்பது உண்மைதான். எனினும் அபாயம் நீங்கவிடவில்லை. ரம்பம் வைத்து கதறக் கதற கழுத்தை அறுப்பது பாரதீய ஜனதாவின் பாணி. ஈரத்துணியைக் கழுத்தில் சுற்றி சத்தமில்லாமல் அறுப்பது காங்கிரசின் வழிமுறை. சத்தம் போட்டதனால் இப்போதைக்குக் கத்தியைப் பிடித்த கை கொஞ்சம் இறங்கியிருக்கிறது. நம் கழுத்தில் சுற்றிய ஈரத்துணி இன்னும் இறங்கவில்லை மறந்துவிட வேண்டாம்.
மு சு10ரியன்

P.V.Sri Rangan said...

NghyPR tpRthrj;Jf;F Vyk;!

K.f – n[ah Nghl;lh Nghl;b

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சிந்தனைப் போக்கை (பார்ப்பன பாசிஸ்டுகளின் சிந்தனைப் போக்கை என்றும் கருதலாம்) மிகவும் தெளிவாகக் கடந்த மாதம் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். ""நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது காவல்துறை. வலிமையான நாடாக இந்தியா இருக்க வேண்டும்; அதில் வளமிக்க மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்ற லட்சியம் ஈடேற வேண்டுமென்றால் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டும். எந்த வளர்ச்சிக்கும் முதல் தேவையாக இருப்பது அமைதியான சூழ்நிலைதான். அத்தகைய அமைதிச் சூழ்நிலையை உருவாக்குவதிலும் அதனைக் கட்டிக் காப்பதிலும் காவல்துறையின் பணி இன்றியமையாதது. இதன் அடிப்படையில்தான் காவல்துறையை நவீனப்படுத்தவும் காவல்பணியை மேம்படுத்தவும் காவலர்கள் நலன்பேணவும் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகள் ஆகியவற்றை நான் அறிவித்தேன்.''


விவசாயம் மற்றும் தொழிற்துறைக்குத் தேவையான உள்கட்டுமான வசதிகளைப் பெருக்குவது; கல்வி மருத்துவம் குடிதண்ணீர் குடியிருப்பு முதலிய வசதிகளை உழைக்கும் மக்களுக்கு உறுதிப்படுத்துவதன் மூலம் மனித வளத்தை மேம்படுத்துவது; உற்பத்தியைப் பெருக்குவதைப் போலவே நாட்டு மக்களின் வாங்கும் சக்தியையும் விரிவுபடுத்தி சந்தையைப் பெருக்குவது இவைதான் வளமிக்க வலிமையான நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது என்று ஆக்கப்பூர்வமான முறையில் அதிகாரத்திலுள்ள ஜெயலலிதா சிந்திக்கவில்லை. வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் குறிப்பாக நாட்டின் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதன் மூலம் அமைதிச் சூழ்நிலையை உருவாக்கி நாட்டை அமைதிப் பூங்காவாக்கிப் பராமரிப்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் காவல்துறை என்று தவறான பொருளில் அழைக்கப்படும் போலீசின் வலிமையை அதிகாரத்தைப் பெருக்கி நவீனப்படுத்தி ஆயுத தளவாடங்களை மேம்படுத்தி போலீசின் நலன்களைப் பேணப் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகளை செயல்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. ""வளர்ச்சியின் பலன்கள்'' மறுக்கப்படும் உழைக்கும் மக்கள் பொங்கி எழுந்தால் அவர்களை அடக்கி ஒடுக்கி அமைதிச் சூழலை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் வேட்டை நாய்களுக்கு கொழுத்த தீனி போட்டு வைப்பதைப் போல போலீசு படையை எந்நேரமும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற பாசிச முறையிலேயே சிந்திக்கிறார்.


கோடிகோடியாகக் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணத்துக்கு அடுத்து ஜெயலலிதா நம்புவது போலீசைத்தான். வேறு எந்த ""சிவிலியன்'' அரசு அதிகார வர்க்கத்தைக் கூட அவர் நம்புவதில்லை. எனவேதான் குடிநீர் சாக்கடை போக்குவரத்து ரேசன்கடை வெள்ளம் புயல் சுனாமி நிவாரணம் ஆகிய எதற்காக மக்கள் போராடினாலும் பிரச்சினையைக் கையாள்வதற்கு ஜெயலலிதா அரசு ஏவிவிடுவது போலீசு அதிகாரிகளைத்தான். அதற்காகவே சமூக நலப் பணிகளுக்காக என்ற பெயரில் ஊர் முழுக்கவும் சந்து பொந்துகளில் எல்லாம் போலீசு சாவடிகளைத் திறந்து வைத்துக் கொண்டும் போலீசு கார்களில் ரோந்து சுற்றிக் கொண்டும் குடிமக்களைக் கண்காணிக்கும் ஏற்பாட்டை இந்த அரசு செய்திருக்கிறது. ஆனால் போலீசு நடவடிக்கைகளின் பதிவேடுகள் காட்டுவதென்ன? கொலை கொள்ளை பாலியல் வன்முறைகள் நாளும் பெருகி வருவதோடு பல்வேறு வழக்குகளிலும் கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கும் போலீசுக்கும் கள்ளக் கூட்டுகள் உள்ளன. போலீசே கொலை கொள்ளை வழிப்பறி மோசடி பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. தலைமைப் போலீசு அதிகாரி (டி.ஜி.பி) மாநகர ஆணையர் முதல் எல்லா மட்டங்களிலும் குற்றச் செயல்களில் சிக்கியுள்ளனர். சிவகாசி ஜெயலட்சுமி விவகாரம் ஒரு எடுத்துக்காட்டுதான். நீதிமன்றங்களில் போலீசாரின் யோக்கியதை அம்பலமாகி நாடே நாறுகிறது.

P.V.Sri Rangan said...

நாய் வாலை நிமிர்த்த முடியாது
கிரிமினல் போலீசைத் திருத்த முடியாது


''போலீசு துறையைக் கலைத்திடு!'' இப்படியொரு முழக்கம் கொண்ட பதாகையை (ஆச்ணணழூணூ) ஏப்ரல் மாத இறுதியில் மும்பய் நகரில் காண முடிந்தது. இது, ஏதாவதொரு புரட்சிகர அமைப்பின் வேலையாயிருக்கும் என நீங்கள் நினைத்தால், அது தவறு. மும்பய் நகர மக்கள்தான், தாங்களே இந்தப் புரட்சிகரமான முழக்கத்தை வடிவமைத்து, பேனர்களில் எழுதி, மும்பய் நகரின் பல இடங்களில் கட்டியிருந்தார்கள். ஏப்ரல் 21 அன்று மும்பயில் நடந்த சம்பவம்தான், போலீசுக்கு எதிரான போராட்டத்தில் இப்படியொரு புரட்சிகரமான தீர்வைத் தன்னெழுச்சியாக முன்வைக்கும் நிலைக்கு மும்பய் நகர மக்களைத் தள்ளியது.

மும்பயில் உள்ள ''மெரைன் டிரைவ்'' கடற்கரையோரச் சாலையை, சென்னை மெரீனா கடற்கரைச் சாலைக்கு இணையாகக் கூறலாம். பல்வேறு விதமான அலுவலகங்களும், மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து வாகன நெரிசலும் நிறைந்த பகுதி இது. இப்பகுதியைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தில் செம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி ஏப்ரல் 21 அன்று சுனில் ஆத்மராம் மோர் என்ற போலீசு மிருகத்தால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்.

அக்கல்லூரி மாணவி விசாரணைக் கைதியோ, விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவரோ கிடையாது. சம்பவம் நடந்த அன்று, அவர் தனது ஆண் நண்பருடன் மெரைன் டிரைவ் சாலையில் நடந்து வந்திருக்கிறார். அப்பொழுது பணியில் இருந்த சுனில் ஆத்மராம் மோர், அப்பெண்ணின் ஆண் நண்பரை மிரட்டி அனுப்பிவிட்டு, அப்பெண்ணை விசாரிக்க வேண்டும் என போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கிறான்.

அக்கல்லூரி மாணவி அடுத்தடுத்து மூன்று முறை பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டிருப்பதாகவும்; அந்த சமயத்தில் அப்போலீசுக்காரன் குடித்திருந்ததாகவும் மருத்துவ ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் ஆள் நடமாட்டமே இல்லாத நள்ளிரவு நேரத்தில் நடக்கவில்லை. பகல் நேரத்தில், மாலை 4.30 மணி போல், மக்கள் நடமாடிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது.

ஒரு பொறுக்கியோ, ரவுடியோ செய்யத் துணியாத காரியத்தை, ஒரு போலீசுக்காரனால் துணிந்து செய்ய முடிகிறது என்றால், ''காக்கிச் சட்டையை மாட்டிக் கொண்டு எதையும் செய்யலாம்; அதற்காக யாரும் தன்னைத் தட்டிக் கேட்கவோ, தண்டித்து விடவோ முடியாது'' என்ற அதிகாரத் திமிரோடு போலீசுத் துறை வளர்க்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

காக்கிச் சட்டை ரவுடிகளின் இந்தப் பொறுக்கித்தனத்தையும், பாசிசத் திமிரையும் எதிர்த்து பெண்கள் அமைப்புகள் மட்டுமின்றி, கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் என மும்பய் நகரின் பல்வேறு தட்டு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான கிதிகா வோரா என்ற பெண், ''நான் எனது இரண்டு பெண்களிடமும் உங்களுக்கு என்ன நடந்தாலும், போலீசிடம் மட்டும் உதவி கேட்டுப் போய்விடாதீர்கள் எனச் சொல்லியிருக்கிறேன். பெரும்பாலான போலீசுக்காரர்கள், பார்வையாலேயே கற்பழித்து விடுவார்கள்'' என்கிறார்.

சிறீவத்ஸவா என்ற தாய், ''அந்தப் போலீசுக்காரனை அம்மணப்படுத்தி, நடுத்தெருவில் தூக்கில் போட வேண்டும்'' எனத் தனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்.

இச்சம்பவம் நடந்த மெரைன் டிரைவ் பகுதியில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இன்னொரு பெண், ''அவனின் கண்களைக் குத்திக் குருடாக்கிய பிறகு தூக்கில் போட வேண்டும்; பத்திரிக்கைகள் இந்தச் சம்பவத்தை சும்மா விட்டுவிடக் கூடாது'' எனக் கூறுகிறார்.

12 வயது சிறுமிக்குத் தாயான இன்னொருவரோ, ''அவன் சாதாரண போலீசுக்காரன் என்பதால் மாட்டிக் கொண்டான். அவனே உயர் அதிகாரியாக இருந்தால், இந்தச் சம்பவத்தை மூடி மறைத்து, அவனைக் காப்பாற்றியிருப்பார்கள்'' என போலீசுத்துறையின் நாணயத்தைப் புட்டு வைக்கிறார்.

மும்பய் நகர மக்கள் போலீசின் மீது எவ்வளவு தூரம் ஆத்திரம் அடைந்து இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சம்பவத்தையும் ஆதாரமாகக் கூறலாம். கடந்த மே 10ஆம் தேதி மும்பய் நகரைச் சேர்ந்த தானே ரயில் நிலையத்தில், இரண்டு நபர்கள், 42 வயதான ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். ரயில் நிலையத்தில் இருந்த பொது மக்கள் அந்த நபர்களைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த இரண்டு பேரும் போலீசுக்காரர்கள் எனத் தெரிந்ததும், வாயால் விசாரிப்பதை நிறுத்திவிட்டு, அவர்கள் இருவரையும் ஆத்திரம் தீர உதைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்களின் ஆத்திரத்தைத் தணித்து, அவர்களிடம் தனது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள மகாராஷ்டிரா போலீசு பல தரப்பட்ட செப்படி வித்தைகளில் இறங்கியிருக்கிறது. பாலியல் பலாத்காரம் நடந்த மெரைன் டிரைவ் புறக்காவல் நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டது; குற்றவாளி சுனில் ஆத்மராம் மோருக்கு ஓய்வூதியம், சேமநல நிதி சேமிப்பு, பணிக் கொடை போன்ற எந்தவிதமான பணச் சலுகைகளும் கிடைத்துவிடாதபடி, சிறப்புச் சட்டத்தின் கீழ் பணி நீக்கம் செய்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மனைவிகள் சங்கம், பாதிக்கப்பட்ட பெண்ணின் உயர் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, பாவ மன்னிப்பு கோரியிருக்கிறார்கள். பெண் போலீசார், ''போலீசுத் துறையில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் கிடையாது. எங்களைக் கண்ணியத்துடன் தான் நடத்துகிறார்கள்'' எனப் பிரச்சாரம் செய்து, போலீசு துறையை உத்தமனாகக் காட்ட முயலுகிறார்கள்.

ஆனாலும், போலீசின் குறுக்குப் புத்தி வேலை செய்யாமல் இருக்குமா? ''அக்கல்லூரி மாணவி தன்னைப் பலாத்காரப்படுத்த வந்த போலீசுக்காரனை எதிர்த்துப் போராட வாய்ப்புகள் இருந்தும் கூட, போராடவில்லை. பயத்தினால் கூட, அப்பெண் அடிபணிந்து போயிருக்கலாம்'' என மகாராஷ்டிரா போலீசு அவதூறு பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையைச் சந்தேகிப்பதன் மூலம், தனது சகாவின் குற்றத்தை நியாயப்படுத்த முயலுகிறார்கள்.

போலீசாரின் இந்த ஆணாதிக்கத் திமிர்த்தனத்திற்கு, இந்து மதவெறி பிடித்த சிவசேனா கட்சி ஒத்து ஊதுகிறது. ''செம்பூர் பகுதியில் வசிக்கும் அந்தப் பெண், ஆண் நண்பருடன் மெரைன் டிரைவ் பகுதிக்கு ஏன் சென்றார்?'' என போலீசுக்கு ஆதரவாகக் கேள்வி எழுப்புகிறது. இதைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், ''பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; மீறி வந்தால், கற்பழிக்கப்படுவீர்கள்'' என்பதுதான். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போட்ட ஆணையை, இந்து மதவெறிக் கும்பல், 'மதச்சார்பற்ற' இந்தியாவில் அமல்படுத்திவிடத் துடிக்கிறது.

இது மட்டுமின்றி, ''இந்தியப் பெண்கள் இந்து கலாச்சாரப்படி ஆடை அணியாமல், அரைகுறை ஆடையுடன் வெளியே நடமாடுவதால்தான் கற்பழிப்புகள் பெருகி விட்டதாக'' ஒரு வக்கிர கண்டுபிடிப்பையும், சிவசேனா தனது பத்திரிகையில் தலையங்கமாக எழுதி, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளி ஆக்கிவிட்டது.

இந்து கலாச்சாரப்படி சேலை கட்டும் பெண்களை போலீசு தெய்வமாக மதிப்பது போலச் சரடு விடுகிறது, சிவசேனா. சிதம்பரம் பத்மினியின் சேலையை உருவி, நிர்வாணமாக்கி அண்ணாமலை நகர் போலீசு நிலையத்தில் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவில்லையா? மாயா தியாகி என்ற நிறைமாத கர்ப்பிணியை, கணவனின் கண் எதிரேயே, சேலையை உருவி போலீசார் பலாத்காரப்படுத்தவில்லையா? இவ்வளவு ஏன், பஞ்சாப் தீவிரவாதிகளை நர வேட்டையாடியதற்காக ''ஹீரோ'' வாகப் புகழப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி கே.பி.எஸ். கில், ஒரு மாலை நேர விருந்தில், பல பெரிய மனிதர்கள் முன்னிலையில், ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பின்புறத்தில் தட்டி, தனது காமவெறியைக் காட்டிக் கொள்ளவில்லையா? இப்படிப்பட்ட அதிகாரத் திமிரும், காமவெறியும் கொண்ட போலீசாரிடமிருந்து இந்தியப் பெண்களை இரும்புக் கவசம் கூடக் காப்பாற்றி விடாது என்பதுதான் உண்மை.


···


ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை, இந்தியாவின் ஏதாவதொரு மூலையில், யாராவது ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்குப் பலியாவதாக புள்ளிவிவரமொன்று கூறுகிறது. பெரும்பாலான பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கும், போலீசுக்கும் நேரடி தொடர்பில்லை என்பது உண்மைதான். எனினும், இவ்வழக்குகளை விசாரிக்கும் போலீசின் அணுகுமுறை பாதிக்கப்பட்ட பெண்ணை முதல் குற்றவாளியாக்குவதாகவே அமைந்து விடுகிறது.

சமீபத்தில் தலைநகர் தில்லியில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த 20 வயதான இளம் பெண், தனது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தேநீர் சாப்பிட்டுவிட்டுப் போவதற்காக, தனது தோழியுடன் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்பொழுது ஒரு காரில் வந்து கொண்டிருந்த நான்கு பேர், கண்ணிமைக்கும் நேரத்தில், அப்பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டுக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரப்படுத்திய பின், நடுத்தெருவில் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பிவிட்டனர்.

இவ்வழக்கை விசாரித்து வரும் தில்லி போலீசார் அப்பெண்ணிடம் கேட்ட முதல் கேள்வியே ''உன்னை யார் ராத்திரி 2 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வரச் சொன்னது?'' என்பதுதான். வேலைக்குப் போய்க் கொண்டே படிக்கும் பெண், இரவு நேரத்தில்தான் தேர்வுக்குத் தயாரிக்க முடியும். இரவு நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைப்பதே ஆபத்தானது என்றால், இரவு நேர ஷிப்டுகளில் இனி பெண்களை வேலைக்கு அமர்த்தலாம் என உச்சநீதி மன்றம் உத்திரவு போட்டுள்ளதே, அதையும் பெண்களின் பாதுகாப்பு கருதி போலீசார் எதிர்க்க வேண்டியதுதானே?

போலீசு விசாரணையின் போதும், அதன்பின் நடக்கும் நீதிமன்ற விசாரணையின் போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டுமொரு முறை வார்த்தைகளால் பாலியல் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. போலீசு நிலையத்தில் பதிவாகும் பாலியல் பலாத்கார வழக்குகளில், 5 சதவீத வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இதற்கு சட்டத்தின் ஓட்டைகள் மட்டுமின்றி, நீதிபதிகளின் மேல்சாதி ஆணாதிக்கத் திமிரையும் காரணமாகக் கூறலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திரபூர் போலீசு நிலையத்தில் மதுரா என்ற பழங்குடியினப் பெண், இரண்டு போலீசு மிருகங்களால் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ''மதுரா, தன்னைக் காப்பாற்றும்படி கூச்சல் போட்டதாகத் தெரியவில்லை. எனவே, அவர் சம்மதத்துடன்தான் உடலுறவு நடந்திருப்பதாகத்'' தீர்ப்புக் கூறி, குற்றவாளிகளை விடுதலை செய்தது.

கேரளாவில் நடந்த சு10ர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் இளஞ் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, 40 நாட்களாகத் தொடர்ந்து பல பெரிய மனிதர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார். மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய 36 குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டனர். ஆனால், கேரள உயர்நீதி மன்றமோ, இவர்களுள் 35 பேரை நிரபராதிகளாகக் கூறி விடுதலை செய்துவிட்து.

''அச்சிறுமி எளிதாகத் தப்பித்துப் போயிருக்க முடியும்; ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. எனவே அவள் சம்மத்துடன்தான் எல்லாம் நடந்திருக்கிறது'' எனத் தீர்ப்பெழுதி, பாதிக்கப்பட்ட சிறுமியை நடத்தை கெட்டவளாக முத்திரை குத்திவிட்டது, கேரள உயர்நீதி மன்றம். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியும் கூட, பாலியல் பலாத்கார குற்றத்திற்காகத் தண்டிக்கப்படவில்லை. மாறாக அச்சிறுமியை வைத்து ''விபச்சாரம் நடத்தினார்'' என்ற நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

மும்பய் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கொன்றில், குற்றவாளி அப்பெண்ணை மணந்து கொள்வதாகக் கூறி பாவ மன்னிப்பு கேட்டிருக்கிறான். உடனே நீதிபதி பி.சி. சிங், பாதிக்கப்பட்ட பெண்ணின் 'சம்மதத்தை'ப் பெற்று, ''இந்தக் குற்றத்திற்கு இதுதான் பரிகாரம்'' எனத் தீர்ப்பெழுதி, குற்றவாளியை விடுதலை செய்துவிட்டார். கிராமப்புறங்களில் மேல்சாதி கும்பலால் நடத்தப்படும் கட்டப் பஞ்சாயத்துகளுக்கும், இதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?

இதற்கெல்லாம் மேலாக, போலீசும், இராணுவமும் 'தீவிரவாதிகளை வேட்டையாடுவது' என்ற பெயரில் நடத்தும் பாலியல் வன்முறைகளை, அரசாங்கமும், நீதிமன்றமும் குற்றமாகவே பார்ப்பதில்லை. வீரப்பன் வேட்டையின் பொழுது, பழங்குடியினப் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திய அதிரடிப் படை ரவுடிகள் மீது ஏதாவது ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறதா? மாறாக, அவ்வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான செயலாகச் சித்தரிக்கப்பட்டு, காக்கிச் சட்டை ரவுடிகளுக்கு பணமும், பதவி உயர்வும் பரிசாக அளிக்கப்பட்டது.

போலீசு கொட்டடியில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களைத் தடுக்க போலீசுக்கு மனித உரிமைகள் பற்றியும், பெண்களை அணுகுவது குறித்தும் போதிக்க வேண்டும் என்பதெல்லாம் புலிக்கு பசுத்தோலை போர்த்திவிடுவது போன்றதுதான். சட்டபூர்வ ரவுடி கும்பலான போலீசை அமைப்பைக் கலைக்கக் கோருவது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும். போலீசு என்ற தனிவகை சாதிக்குப் பதிலாக ஆயுதந்தாங்கிய மக்கள் படை; நீதிமன்றங்களுக்குப் பதிலாக மக்கள் சர்வாதிகார மன்றங்கள் இப்புரட்சிகர அமைப்புகளைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரியும் குற்றவாளிகள், எந்தவிதத்திலும் தப்பித்து விடாதபடி தண்டிக்க முடியும்!
· செல்வம்

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com