Tuesday, May 10, 2011

இனப்படுகொலை தடுப்பு, தண்டனைச் சட்டம் - சில குறிப்புகள்!

இனப்படுகொலையும், போரும் வெவ்வேறானவை. தாக்குதல்கள் இனஅழிப்பு நோக்கத்தோடு நடத்தப்படுகிற போது இனப்படுகொலையாகிறது. போர்க்குற்றமும், இனப்படுகொலையும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை.

சர்வதேச இனப்படுகொலை தடுப்பு, தண்டனை சட்டம் குறிப்பிடுவதிலிருந்து…
 ... ஒரு தேசியம், இனம் அல்லது மத குழுவின் ஒரு பகுதியை அல்லது முழுவதும் அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிற செயல்கள் இனப்படுகொலையாகும். கீழுள்ளவற்றில் எந்த ஒரு செயலும் இனப்படுகொலை வரைமுறைக்கு உட்பட்டது…
  • அந்த குழுவின் உறுப்பினர்களை கொலை செய்தல் ;
  • உடல், உள ரீதியாக அக்குழுவின் உறுப்பினர்களுக்கு தீங்கு செய்வது;
  • வேண்டுமென்றே அக்குழுவின் வாழ்க்கை நிலையில் தாக்குதல் தொடுத்து பகுதி அல்லது முழுமையான திட்டமிட்ட  உடல்ரீதியான அழிவை ஏற்படுத்துதல்;
  • அக்குழுவிற்குள் பிறப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கை சுமத்துத்தல்,
  •  அக்குழுவிலுள்ள குழந்தைகளை வேறு குழுக்களுக்கு கட்டாயமாக மாற்றுதல்.

இனப்படுகொலை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள்…
  • இனப்படுகொலை செய்தல்
  • இனப்படுகொலை செய்ய சதித்திட்டமிடுதல்
  • நேரடியாக, பகிரங்கமாக இனப்படுகொலை செய்ய தூண்டுதல் ;
  • இனப்படுகொலை செய்ய முயற்சித்தல் ;
  • இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல்
இனப்படுகொலை தடுப்பு, தண்டனை சட்டத்தில் இலங்கை அக்டோபர் 12, 1950 ல் உரிமைபெற்றிருக்கிறது. இந்தியா ஆகஸ்டு, 1959ல் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாத காரணத்தால் சில சட்டச்சிக்கல்கள் உருவாகலாம். ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றுமானால் அச்சிக்கல்களுக்கும் வழியிருக்காது.

இனப்படுகொலை தடுப்பு, தண்டனைச் சட்டம் http://www.hrweb.org/legal/genocide.html

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com