Friday, July 06, 2012

சாராய அரசும், கூட்டுக்கொள்ளையும்

"கடமை, கட்டுப்பாடு, கண்ணியத்துடன்" பொறுப்பாக எப்படி குடிப்பதென்று குடிகாரர்களுக்கு குடிக்க பயிற்சி வழங்குகிற பள்ளி/கல்லூரிகளை அரசு திறக்க முன்வர வேண்டும். தனியார் கல்வி முதலாளிகளையும் குடிகாரப் பள்ளிகளை துவங்க ஊக்கமளித்து அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் கொள்ளை லாபம் பார்க்கவும் செய்யலாம்.

இதனால் இரு கட்சிகளின் பிரபலங்களின் சாராய ஆலைகளுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் பெருகவும் வாய்ப்பு உள்ளது. இதையே அரசின் பிரதான கடமையாக உணர்ந்து ஆளும் கட்சியும், திமுகவும் இதை செய்ய முன்வர வேண்டும். மற்ற கல்வி நிலையங்கள், சேவைகள், நூலகங்களை கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடலாம். "குடிகாரநாடு" அல்லது "சாராய நாடு" என்று தமிழ்நாட்டின் பெயரை மாற்றலாம். "வாய்மையே வெல்லும்" பதிலாக "சாராயமே வெல்லும்" என்றும் மாற்ற அரசு முன்வர வேண்டும். அரசின் லட்சினையாக "சாராய குப்பியை" பயன்படுத்த வேண்டும். 


நூலகங்களையும், பள்ளிக்கூடங்களையும் மூடிவிட்டு மதுக்கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்கிற இந்த அரசுகள் மக்களை அறிவிலிகளாக வைத்திருப்பதிலும், போதை மயக்கத்திற்கு அடிமைகளாக மாற்றுவதிலும் கவனமாக இருக்கின்றன.