Pages

Wednesday, July 29, 2009

நூல் அறிமுகம் - "ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்" ஆழி பதிப்பக வெளியீடு

வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 3 இலட்சம் தமிழ் மக்கள். வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகின் அதிகார மையங்களின் எல்லா கண்களும், கைகளும் வேடிக்கை பார்த்தன. வன்னிப் படுகொலைகள் திடீரென்று உருவானவையல்ல.

ஈழம்
இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
வெளியீடு: ஆழி பதிப்பகம்
பக்கங்கள் : 176

இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளின் ஈழப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட போர், போர் நிறுத்தம், சமாதான முயற்சிகள், படுகொலைகள், வன்னிப் படுகொலைகளின் துயரங்களையும், பேரழிவையும் விரிவாக பதிவு செய்கிறது. சிங்கள பேரினவாதத்தின் தந்திர நாடகங்களை, பிராந்திய, உலக வல்லரசுகள் வகித்த பங்கை, ராஜதந்திர சதித்திட்டங்களை ஆதாரங்களுடன் விவரிக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், சிறீலங்காவின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் ஏமாற்றுத்தனங்களையும், அவை உருவான பின்னணியையும் விவரிக்கிறது.


நூல் கிடைக்கும் இடங்கள்:
ஆழி பதிப்பகம்
12, பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை- 600024
தமிழ்நாடு
தொலைபேசி: 91-44-4358 7585
மின்னஞ்சல்: aazhisales@gmail.com

தமிழக நகரங்களின் முன்னணி புத்தகக் கடைகளில் இந்நூலை சில நாட்கள் முதல் வாங்கலாம். இந்நூல் ஜூலை 31 முதல் ஆகஸ்டு 11 வரையில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆழி பதிப்பக கடையிலும் கிடைக்கும்.

13 comments:

  1. மிக்க நன்றி திரு இந்த நூலை வாங்கிப் படிக்க ஆவலாக இருக்கின்றேன். இணையத்திலும் இந்த நூல் விற்பனைக்கு வர ஆவன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. ந‌ன்றி திரு.
    விரைவில் வாங்கி வாசிக்க‌ முய‌ல்கின்றேன்.

    ReplyDelete
  3. கானா பிரபா, செல்வநாயகி, டிசே,

    நன்றி! நூலை வாசித்த பிறகு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  4. பிரபா,

    இணையத்தில் விற்பனைக்கு இதுவரையில் வரவில்லை. அதற்கு வாய்ப்பு ஏற்படுமானால் பார்க்கலாம்.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி திரு....

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி திரு...

    ReplyDelete
  7. வடலி இணையக் கடையில் விற்கப்படுகிறது. http://vadaly.com/shop/

    ReplyDelete
  8. புத்தகம் கைக்கு வந்து சேரும் நாளை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. Vadali server is down! Any other choices to purchase this book?

    ReplyDelete
  10. சக்தி,

    தமிழகத்தில் புத்தகக் கடைகளில் கிடைக்கிறது. http://www.udumalai.com/ல் விற்பனை செய்கிறார்கள். சென்னை புத்தகச் சந்தையிலும் கிடைக்கும்.

    ReplyDelete
  11. வணக்கம் திரு.

    அதென்னவோ நல்ல மனிதர்களின் தொடர்பு தாமதமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. நான் வாங்கிப்படித்த பல புத்தகங்களில் உங்களின் இந்த புத்தகம் பொக்கிஷம். அசாதாரணமான உழைப்பு. இது வரைக்கும் 50 முறைக்கும் மேலே படித்து இருப்பேன். நம்ப மாட்டீர்கள். நான் எழுதிக் கொண்டுருக்கும் புத்தகத்திற்கு குறிப்பு எடுக்க உதவிய புத்தகம் இது.

    என் புத்தகத்தில் (வெளி வந்தால்) உங்களின் புத்தக பெயரும் வருகின்றது.

    நீங்கள் வெளியிட்டது புத்தகமல்ல. அடுத்த நூறு ஆண்டுகளுக்குத் தேவைப்படும் ஆவணம்.

    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

    ReplyDelete
  12. அன்பின் ஜோதிஜி,

    உங்கள் அன்பிற்கும், நூல் குறித்த உங்கள் பார்வைக்கும் மிக்க நன்றி. உங்கள் நூல் வெளிவர எனது வாழ்த்துகள்.

    வாய்ப்பிருந்தால் இந்நூல் குறித்த விமர்சனம் ஒன்றை எழுதுங்கள். எனது முந்தைய நூல் "திரைகடலோடியும் துயரம் தேடு" கிடைத்ததா?

    திரு

    ReplyDelete

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com